Published:Updated:

பசுமை சந்தை

பசுமை சந்தை

பசுமை சந்தை

பசுமை சந்தை

Published:Updated:
பசுமை சந்தை
வாசகர்கள்
பசுமை மேடை
பசுமை சந்தை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பசுமை சந்தை

விவசாயம் சம்பந்தமான நாட்டு ரகங்கள் எல்லாம் மறைந்துகொண்டே இருக்கின்றன. அவற்றுள் கால்நடைகளும், கோழி இனங்களும் அடக்கம். சமீபகாலமாக நாட்டுக் கோழி வளர்ப்புப் பயிற்சி வேளாண் அறிவியல் மையங்கள் மற்றும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மையங்களிலும் அளிக்கப்படுகின்றன. ஆனால், அந்தப் பயிற்சிகள் அனைத்தும் ஏட்டுச் சுரைக்காய் மாதிரியே இருக்கின்றன. பயிற்சியின் போது, நேரடி செயல் விளக்கம் காட்டுவதற்கு எந்த மையங்களிலும் நாட்டுக்கோழி இல்லை. அக்கம் பக்கத்தில் யாராவது வளர்த்தால், அங்கு அழைத்துக்கொண்டு போய் காண்பிக்கிறார்கள். இது சரியான அணுகுமுறை இல்லை. இதற்குப் பதிலாக, அந்தந்தப் பயிற்சி மையங்களிலேயே மாதிரிப் பண்ணைகளை அமைத்து பராமரிக்க வேண்டும். அப்போதுதான் பராமரிப்பில் உள்ள சிக்கல்களும், பிரச்னைகளும் பயிற்றுநர்களுக்குத் தெரிய வரும். இப்படி அனுபவம் பெற்றவர்கள் கொடுக்கும் பயிற்சிதான் பயனுள்ளதாக இருக்கும்.

பி.பி. சாமி, பாங்கல்.

'உழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது' என்பார்கள். எதுவுமே மிஞ்சாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால், நாம் கணக்குப் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். உழவுத் தொழிலைத் தவிர வேறு எந்தத் தொழிலில் நட்டம் வந்தாலும், அந்தத் தொழிலை நடத்துபவர்கள் அதனைப் புரிந்துகொண்டு புதிய யுக்திகளைக் கையாண்டு லாபம் பார்க்க முயல்வார்கள் அல்லது தொழிலைவிட்டு வேறு வேலையைத் தேடிக் கொள்வார்கள். ஆனால், நாம் மட்டும் நட்டம், நட்டம் என சொல்லிக்கொண்டே தொடர்ந்து நட்டப்படுவோம்.

மற்ற பொருள் உற்பத்தி செய்பவர்கள் சரியாக உழைக்காமல் இருந்தால், அல்லது சந்தையில் அந்தப் பொருளின் தேவை குறைவாக இருந்தால் நட்டப்படுவர். ஆனால், உழவன் சராசரியாக ஒரு நாளைக்கு 14 மணி நேரம் உழைக்கிறான். உற்பத்தி செய்யும் உணவுப்பண்டத்துக்கும் பற்றாக்குறையே நிலவுகிறது. பிறகு ஏன் நட்டப்படுகிறோம்..? இதற்குக் காரணம் உழவனின் உழைப்பில் ஊரார் குளிர்காய்வதுதான்.

ஐந்தோ, அரைக்காலோ கணக்குப் போட்டுப்பார், அப்போதுதான் ஏன் நட்டப்படுகிறோம் என்பது புரியும். ஒரு லிட்டர் தண்ணீர் 12 ரூபாய், பாலுக்குக் கிடைக்கும் விலை 12 ரூபாய். ஒரு டீயின் விலை 5 ரூபாய், ஒரு கிலோ காய்கறியின் விலை 2 அல்லது 3 ரூபாய்தான் விவசாயிக்குக் கிடைக்கிறது. இதை புரிந்துகொண்டு, 'ஆற்றில் போட்டாலும், அளந்து போடுங்கள்' அப்போதுதான் இந்தக் கொடுமைகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு, நம் முன்னேற்றத்துக்கான முயற்சிகள் பிறக்கும்.

கே. முகுந்தன், நெல்லை.

'ஆபரேஷன் சக்ஸஸ் பேஷன்ட் குளோஸ்' என்று நகைச்சுவையாக ஆங்கிலத்தில் சொல்வார்கள். அந்தக் கதையாக... செம்மொழி மாநாடு நடத்தி, மொழியை வாழ வைக்க விழா நடத்திய முதல்வர், மொழியின் கருத்துக்களை கவனிக்க தவறிவிட்டார். 'வரப்பு உயர நீர் உயரும். நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோன் உயரும்' என்பது தமிழ்மொழியின் அறிவுரை வாக்கு. ஆனால், இன்று சாலை மேம்பாடு என்ற பெயரில் விளைநிலங்களும், மேய்ச்சல் நிலங்களும், குளம், குட்டைகளும் அழிக்கப்படுகின்றன. பணம் இருந்தால், எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற கருத்தில் பணத்தை மட்டும் பெருக்க பொருளாதாரத் திட்டங்கள் போட்டு, விளைநிலங்கள் அழிக்கப்படுகின்றன.

விவசாய வளர்ச்சித் திட்டங்களிலும் அரசுகள் கவனம் செலுத்துவதே இல்லை. உதாரணமாக, தூத்துக்குடி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட தாமிரபரணி ஆற்றின் வடக்கே பல ஹெக்டேர் வளமான கரிசல் பூமி வறண்ட நிலமாக இருக்கிறது. வற்றாத ஜீவநதியான தாமிரபரணியின் உபரிநீரைத் தேக்கி அணை, குளங்கள் அமைக்க இயலாத 'அரசுகள்' நதிநீர் இணைப்பு, நதிநீர் இணைப்பு என்று கூறிக்கொள்கின்றன. சாலை போட குளங்களை அழிக்கும் அரசு, பாலங்கள் போட தேவைப்படும் மண்ணை அருகில் உள்ள குளங்களில் இருந்து 'முறையாக' எடுத்து பயன்படுத்தினால் நீர் ஆதாரம் பெருகி, விவசாயம் செழிப்பதுடன் சாலை போட தேவையான மண்ணும் கிடைக்கும். இதைவிடுத்து, மலைகளையும், மேடானப் பகுதிகளையும் வெட்டி எடுத்து, சாலை போடுவதால் காடுகளும் அழிகின்றன. ஒரு வேலை அனைத்தையும் அழிப்பதுதான் அரசாங்கத்தின் குறிக்கோளா...?

கே. கோபிகிருஷ்ணன், நெல்லை.

பராமரிப்பில்லாத மோட்டார்கள் காரணமாக ஏற்படும் மின்இழப்பைத் தவிர்க்க, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இலவசமாகவும், மற்ற விவசாயிகளுக்கு மானியத்திலும் புதிதாக மின்மோட்டார்களைத் தரப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதெல்லாம் இருக்கட்டும், முதலில் மின்சார வாரியத் தரப்பில் செய்ய வேண்டிய மாற்றங்களே நிறைய இருக்கின்றன. அதையெல்லாம் செய்தாலே, பெருமளவு மின் இழப்பை சரிக்கட்ட முடியும்.

மின்சாரத்தைச் சுமந்து செல்கிற கம்பிகள்... ஹைதர் காலத்து பழசாக இருக்கின்றன. டிரான்ஸ்ஃபார்மர்கள், பராமரிப்பு இல்லாமல் விவசாயிகளைப் போலவே மிக சிரமப்பட்டு உழைத்துக் கொண்டு இருக்கின்றன. பராமரிப்பைப் பற்றி அரசாங்கம் இம்மியளவும் கவலைப்படுவதில்லை. இதைத் தவிர, பல கருவிகள் பழுதானாலும், கம்பிகள் அறுந்து விழுந்தாலும், டிரான்ஸ்ஃபார்மர்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டாலும், உடனே விவசாயிகள் எல்லோரும் சேர்ந்து தலைக்கு 1,000... 2,000 என்று பணம் கொடுத்தால் மட்டுமே பழுது நீக்கப்படுகிறது.

இலவச மின்சாரத்துக்காக செலவிடும் அரசாங்கம் 'பராமரிப்பு'க்காகவும் கொஞ்சம் பணம் ஒதுக்கினால்... நாட்டுக்கும், நாட்டுக்காக உழைக்கும் விவசாயிகளுக்கும் நன்மை உண்டாகும்!

எஸ். நடராஜன், ஈரோடு.

இது வாசகர்களாகிய உங்களுடைய பக்கம்...

நீங்கள் வாள் வீசுவதற்கான களம் மட்டுமல்ல... சாமரம் வீசுவதற்கான களமும் கூட!

விவசாயத்தில் நீங்கள் கண்டறிந்து பயன்பெற்றது; கேட்டறிந்து பயன்பெற்றது; பார்த்தறிந்து பயன்பெற்றது என்று பலனுள்ள விஷயங்கள் எதுவாக இருந்தாலும்... அது மற்றவர்களுக்கு பயன்படும் எனில்... இங்கே நீங்கள் எழுதலாம்.

விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளோடு தொடர்பு கொள்ளும்போது... ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதையும் எழுதலாம்.

'இதை மட்டும் அரசாங்கம் செய்துட்டா... விவசாயத்துக்கும்... விவசாயிகளுக்கும் ரொம்பவும் பலனுள்ள விஷயமா இருக்கும்Õ என்று தோன்றும் நல்ல யோசனைகளையும். இங்கே நீங்கள் பதிவு செய்யலாம்.

விஷயத்தைத் தெளிவாக... கூடுமானவரையில் சுருக்கமாக எழுதி அனுப்புங்கள்.

பிரசுரமாகும் ஒவ்வொரு கடிதத்துக்கும் பயனுள்ள புத்தகம் சிறப்புப் பரிசாக வழங்கப்படும். உங்களின் முகவரி மற்றும் தொடர்பு எண்களை முழுமையாக எழுதத் தவறாதீர்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி
'பசுமை மேடை'
பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2
பசுமை சந்தை
பசுமை சந்தை
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism