Published:Updated:

அட,மூங்கில் மிதிவண்டி !

அட,மூங்கில் மிதிவண்டி !

அட,மூங்கில் மிதிவண்டி !

அட,மூங்கில் மிதிவண்டி !

Published:Updated:
அட,மூங்கில் மிதிவண்டி !
நாட்டு நடப்பு
ஜி.பிரபு
அட,மூங்கில் மிதிவண்டி !
அட,மூங்கில் மிதிவண்டி !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அட,மூங்கில் மிதிவண்டி !

வளிமண்டலத்தில் ஊடுருவும் புறஊதா கதிர்களைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் மூங்கிலுக்கு உண்டு என்பதால், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மூங்கில் காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால், ஆண்டுதோறும் செப்டம்பர் 18\ம் தேதியை சர்வதேச அளவில் உலக மூங்கில் தினமாகக் கடைபிடித்து வருகின்றனர். இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட மூங்கில் தினத்தையட்டி, புதுச்சேரியை அடுத்துள்ள ஆரோவில் சோலார் கிச்சன் வளாகத்தில், மூங்கிலால் தயாரிக்கப்பட்ட வீட்டு உபயோக, கலைப்பொருட்கள் கண்காட்சி நடந்தது.

மூங்கிலால் உருவான டைனிங் டேபிள், சோபா செட், மூங்கில் சேர்த்து தயாரிக்கப்பட்டத் துணிகள், கம்மல்கள், நெக்லஸ், மூங்கில் கரியில் உருவானக் குளியல் சோப், விளக்கு ஸ்டாண்டுகள், பூச்செடிகளை வளர்க்க உதவும் குழாய் ஜாடிகள், வாத்தியக் கருவிகள்... என பல விதமானப் பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது... மூங்கில் மிதிவண்டி (சைக்கிள்). 80% மூங்கில், 20% இரும்பு இணைத்து தயாரிக்கப்பட்ட இந்த மிதிவண்டியை ஓட்டும்போது பெடலை பின்பக்கமாக சுழற்றினால், பிரேக் பிடிக்கும்படி வடிவமைத்திருக்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் இது விற்பனைக்கு வரவிருக்கிறது.

தொடர்புக்கு. ஆரோவில் மூங்கில் ஆராய்ச்சி மையம், தொலைபேசி எண் 0413-2623806.


அதிரடி நடவடிக்கை!

கம்பம் அருகில் உள்ள காமயக்கவுண்டன்பட்டியில் 6 கல்குவாரிகளும், 5 கிரஷர்களும் இருக்கின்றன. அதில் இருந்து வருகிற கல்தூள், தூசியால பக்கத்தில் இருக்கும் திராட்சை, தென்னந்தோப்புகளுக்கெல்லாம் அதிக பாதிப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதி விவசாயிகளெல்லாம் சேர்ந்து தேனி மாவட்ட கலெக்டர் முத்துவீரனிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். உடனே அவர், அதிகாரிகளோடு அந்த ஊருக்குப் போய் சோதனை நடத்தியதோடு, உடனடியாக அதிக பாதிப்பு ஏற்படுத்தின கிரஷரை மூடச்சொல்லி உத்தரவும் போட்டுவிட்டார். அந்தப் பகுதி விவசாயிகளெல்லாம் கலெக்டருக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.


கால்நடை தடுப்பூசி முகாம்!

நாமக்கல்லுக்கு அருகிலிருக்கும் வகுரம்பட்டியில் ‘பழனிச்சாமி’ங்கற விவசாயி, 9 கறவை மாடு, 6 கன்னுகுட்டிக, 3 எருமை மாடுகளை வளர்த்து வந்தார். கடந்த 11\ம் தேதி அவருடைய ஒரு கறவை மாடு திடீரென்று இறந்து போய்விட்டது. உடனே அவர், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சொல்லவே, டாக்டர்கள் வந்து மற்ற மாடுகளை சோதனை செய்து பார்த்து விட்டு, ‘மாடுகள் நன்றாக இருக்கின்றன’ என்று சொல்லி விட்டு போய் விட்டார்கள். ஆனால், ஒரு வாரத்துக்குள்ளாகவே மீதி எட்டு கறவை மாடுகளும் அடுத்தடுத்து இறந்து போய் விட்டன. அதனால், அந்த ஊரில் இருக்கும் எல்லோரும் பயந்து போய் முறையிட்டனர். அதன் பிறகு கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் அந்தப் பகுதியில் முகாமிட்டு சுற்று வட்டாரத்தில் இருக்கும் பசு, எருமை, செம்மறியாடு, வெள்ளாடு என ஆயிரக்கணக்கான கால்நடைகளுக்குத் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள்.

அட,மூங்கில் மிதிவண்டி !
அட,மூங்கில் மிதிவண்டி !
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism