Published:Updated:

பூஞ்சணக்கொல்லித் தயாரிப்புக்கு ரூ.1,30,000 மானியம் !

வழிகாட்டி
ஆறுச்சாமி
பூஞ்சணக்கொல்லித் தயாரிப்புக்கு
ரூ, 1,30,000 மானியம்!
பூஞ்சணக்கொல்லித் தயாரிப்புக்கு ரூ.1,30,000 மானியம் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூஞ்சணக்கொல்லித் தயாரிப்புக்கு ரூ.1,30,000 மானியம் !

'அதிக விளைச்சல் கொடுக்க வேண்டும் என்பதற்காக ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி விஷங்களையும் அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். இப்படிச் செய்வதால், ஆரம்பத்தில் விளைச்சல் கூடினாலும், அந்த நிலத்தில் பூச்சிக்கொல்லியின் எச்சங்கள் இருக்கத்தான் செய்யும். அந்த விஷ எச்சங்கள், உணவு மூலமாக மனித உடம்பிலும் கலந்து விடுகிறது' என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

இப்படிப்பட்ட ஆபத்தைத் தடுக்கத்தான் 'இயற்கை வழி விவசாயம்' என்பது உலகம் முழுக்க பரவி வருகிறது. இந்த இயற்கை விவசாயத்தில் உள்ள முக்கியத் தொழில்நுட்பங்களைப் பின்பற்றி நறுமணப் பயிர்களை சாகுபடி செய்ய நறுமணப் பொருட்கள் வாரியம் உதவி வருகிறது.

பயோ-ஏஜென்ட் என்று சொல்லப்படும் உயிர்பூச்சி மற்றும் பூஞ்சணக் கொல்லி\களைத் தயாரித்து, விவசாயிகளுக்கு வழங்க மானியம் வழங்குகிறது வாரியம். மிளகு, வெணிலா, இஞ்சி, மஞ்சள்... போன்ற பயிர்களில் ஏற்படும் நோயைக் கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மாவிரிடி, சூடோமோனஸ்... போன்ற உயிர் பூஞ்சணக் கொல்லிகள் பயன்படுகின்றன. இவற்றை உற்பத்தி செய்ய பெரிய அளவிலான ஆய்வுக்கூட வசதிகள் தேவையில்லை. நன்கு பயிற்சி பெற்றவர்கள், தங்கள் இடங்களிலேயே தயாரித்துவிட முடியும்.

விவசாயிகள் மத்தியில் பணியாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள் மட்டுமே, இந்தத் திட்டத்தின்கீழ் மானியம் பெற முடியும். உயிர்பூஞ்சணக் கொல்லிகளைத் தயாரிக்க தகுந்த இடவசதி, உற்பத்தி செய்தவற்றை விவசாயிகளிடம் எடுத்துவைத்து செயல் விளக்கம் அளித்தல் போன்ற தகுதிகள், தொண்டுநிறுவனங்களுக்கு இருக்க வேண்டும். அத்தகையத் தொண்டு நிறுவனங்கள், கொச்சியில் உள்ள நறுமணப் பொருட்கள் வாரியத்தின் தலைமை அலுவலகத்துக்கு முறையாக விண்ணப்பம் அளிக்க வேண்டும். தகுதியான தொண்டுநிறுவனங்களைத் தேர்வு செய்து, ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் மானியமாக வழங்குவார்கள்.

உற்பத்தி செய்யும் உயிர்பூஞ்சணக் கொல்லிகள் தரம் வாய்ந்த வகையில் இருக்க வேண்டும். உற்பத்தி செய்யும் இடமானது, மேற்கொண்டு உயிர் பூச்சி மற்றும் பூஞ்சணக் கொல்லிகள் பலவற்றைத் தயாரிப்பதற்குப் பயிற்சி அளிக்கும் மையமாகவும் திகழ வேண்டும் என்பதும் மானியத்துக்கான நிபந்தனைகளில் ஒன்றாகும்.

தொடர்புக்கு

Spices Board, 'Sugandha Bhavan' N.H.ByPass, Palarivattom.P.O, Cochin - 682025, Kerala. web http//www.indianspices.com.Phone 0484-2333610,16.

- தொடர்ந்து சந்திப்போம்

பூஞ்சணக்கொல்லித் தயாரிப்புக்கு ரூ.1,30,000 மானியம் !
பூஞ்சணக்கொல்லித் தயாரிப்புக்கு ரூ.1,30,000 மானியம் !
                            
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism