Published:Updated:

ஊளைச் சதைக்கு உரம் போடும் ரசாயனங்கள் !

ஊளைச் சதைக்கு உரம் போடும் ரசாயனங்கள் !

ஊளைச் சதைக்கு உரம் போடும் ரசாயனங்கள் !

ஊளைச் சதைக்கு உரம் போடும் ரசாயனங்கள் !

Published:Updated:
ஊளைச் சதைக்கு உரம் போடும் ரசாயனங்கள் !
இயற்கை  
ஊளைச் சதைக்கு உரம் போடும் ரசாயனங்கள் !
ஊளைச் சதைக்கு உரம் போடும் ரசாயனங்கள் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பளிச்... பளிச்...

பாரம்பர்ய ரகம் நெய்கிச்சடி.
வயது 110 நாட்கள்.
வெள்ளத்துக்கு நடுவிலும்
30 மூட்டை.

'உண்டி முதற்றே உணவின் பிண்டம்' என்று சொல்லிச் சென்றிருக்கிறார் திருமூலர். அதாவது, உணவுதான் உடம்புக்கு பிரதானம் என்பதுதான் இதற்குப் பொருள். உயிர் வாழ உணவு அவசியம் என்பதால்தான், 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று சங்கப்பாடலில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஊளைச் சதைக்கு உரம் போடும் ரசாயனங்கள் !

பசுமைப் புரட்சிக்கு முன் உணவு உற்பத்திக்காக மட்டும் இருந்த உழவாண்மை, பசுமைப் புரட்சிக்குப் பின் வணிகம் என்று உருவெடுத்தது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பயன்படுத்தப்பட்டு வந்த ரசாயனங்கள் இந்தியாவுக்குள்ளும் நுழைந்தன. அதன் விளைவாக மனிதர்களுக்கு ஏற்பட்ட நோய்களைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் இன்றும் ஆய்வு செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அப்படியிருந்தும், வேதிப்பொருட்களின் பயன்பாட்டை பயிர் வளர்ச்சியோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் கால்நடை வளர்ப்பிலும் புகுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.

ஏழு வயதில் பூப்பெய்தும் அமெரிக்கச் சிறுமிகள்!

அமெரிக்கர்கள், அவர்களுக்குத் தேவையான பாலையும், இறைச்சியையும் விரைவாகவும் அதிகளவிலும் உற்பத்தி செய்வதற்காக... கால்நடைகளை மேய விடாமல் கொட்டிலில் அடைத்து வைத்து தீவனத்தைக் கொடுத்து வளர்க்கிறார்கள். வேதிப்பொருட்களைத் தீவனத்துடன் கலந்தும், ஊசி வழியாகவும் செலுத்திதான் உற்பத்தியைப் பெருக்குகிறார்கள். இதன் விளைவு... அமெரிக்காவில் 7 வயதிலேயே சிறுமிகள் பூப்பெய்தி விடுகிறார்கள். இப்படி பூப்பெய்தும் விகிதம் பத்தாண்டுகளுக்குள் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறதாம். சீனாவிலும் இதே நிலைதானாம்.

ஊளைச் சதைக்கு உரம் போடும் ரசாயனங்கள்!

தவிர... கோழி, ஆடு போன்ற இறைச்சிக்கான கால்நடைகளுக்கு வேதிப் பொருட்களைக் கொடுத்து விரைவில் கொழுக்க வைத்து, அந்த இறைச்சியை சாப்பிடும்போது மனிதர்களுக்கும் ஊளைச்சதை நோய் வருகிறது (அதீத உடல் பருமன்). தேவைக்கு அதிகமாக உண்பது மற்றும் வளர்ச்சிஊக்கி பயன்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பது ஆகிய காரணங்களால் 27% அமெரிக்கர்கள் ஊளைச்சதையால் அவதிப்படுகிறார்கள். இந்தியாவிலும் இந்த நோய் பரவி வருவது, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

'ஒவ்வொரு நாளும் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் வறுமையின் காரணமாக பட்டினி கிடக்கிறார்' என்று புள்ளிவிவரம் சொல்கிறது. அப்படி இருக்கும்போது இன்னொரு மூலையில் அதிகமாக உணவு உண்டு, ஊளைச்சதையால் அவதிப்படுபவர்கள் பற்றிய செய்தி வரும்போது அதிர்ச்சி அடையாமல் என்ன செய்வது?

மேய்ச்சலுக்குத் திரும்பும் அமெரிக்கா!

அமெரிக்காவில் மக்காச்சோளச் சாகுபடிக்கு மட்டும் ஆண்டுக்கு 1 கோடி டன் ரசாயன உரம் பயன்படுத்தப்படுகிறதாம். இதில்லாமல், பூச்சிக்கொல்லி, பூஞ்சணக்கொல்லிகள் வேறு... 'இந்த நஞ்சுகள் அப்படியே உணவு மற்றும் இறைச்சியிலும் பரவுவதால்தான் மக்களுக்கு நோய் பரவுகிறது' என்ற கருத்து தற்போது அங்கு வலுப்பட்டு வருகிறது. அந்த நாட்டில், உணவுக்குத் தட்டுப்பாடே கிடையாது. ஆனால், அங்கு கிடைக்கும் உணவு நஞ்சு கலக்காத தரமான உணவு என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. அதனால்தான் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இயற்கை உணவைத் தேடி வருகின்றனர் அமெரிக்கர்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் கால்நடைகளைக்கூட கொட்டிலில் அடைக்காமல் மேயவிட்டு வளர்க்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

இயற்கை விளைபொருட்களுக்கு எகிறும் விலை!

அமெரிக்காவில் 2% நிலத்தில் மட்டும்தான் இயற்கை வழியில் பயிர் செய்யப்படுகிறது. அதனால் இயற்கையில் விளைந்த உணவின் விலை மிகவும் உயர்ந்து கிடக்கிறது. ஏறத்தாழ ரசாயனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைக் காட்டிலும், இயற்கை விளைபொருட்கள் பல மடங்கு கூடுதல் விலையில் விற்கப்படுகிறது.

இந்தியாவில் நிலவுகிற சூழ்நிலையைப் பார்ப்போம். நமது முக்கிய உணவான அரிசி, இந்தியாவில்

10 கோடியே 85 இலட்சம் ஏக்கரில் பயிரிடப்படுகிறது. 2009-10-ம் சாகுபடி ஆண்டில் 8 கோடியே 93 இலட்சம் டன் நெல்லை அறுவடை செய்திருக்கிறோம். 'ஒரு கிலோ அரிசி உற்பத்திக்கு 5,000 லிட்டர் தண்ணீர் தேவை' என்கிறார்கள் நிபுணர்கள். நம்நாட்டில் நதிகளெல்லாம் வற்றிக் கிடக்கும் நிலையில், பூமியில் இருந்து நீரை உறிஞ்சிதான் பெரும்பாலான இடத்தில் நெல் விளைவிக்கப்படுகிறது. ரசாயன இடுபொருள்களைக் கொட்டும்போது வயலில் நீரை நிறுத்தி வைக்க வேண்டியது அவசியமாகிறது.

ஆனால் 'இயற்கை வழி வேளாண் மையில் காகித கனத்துக்கு நீரை நிறுத்தினால் போதும்' என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 'காய்ச்சலும் பாய்ச்சலுமாக இருந்தால் போதும்' என்கிறார்கள், இயற்கை விவசாயிகள். அப்படி இருக்கும்-போது நாம் இயற்கைக்கு மாறினால் மட்டும்தான் சூழல் மாசுபாட்டில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொண்டு நோய்களில் இருந்து விடுபட முடியும். அதோடு தண்ணீர் மற்றும் மின்சாரத்தையும் சேமிக்க முடியும். 'அறுக்கப்போகும் ஆட்டைக்கூட அன்பாகப் பராமரிக்க வேண்டும்' என்ற கருத்து நிலவுகிற இன்றையக் காலகட்டத்தில், மனிதர்களுக்கான இயற்கை ஆதாரங்களைக் கெடுத்துவிடாமல் பராமரிக்க வேண்டியது நமது கடமை அல்லவா.

நிமிர வைக்கும் நெய்கிச்சடி!

பல இயற்கை விவசாயிகள் தமிழகத்தில் அந்தக் கடமையைச் சரியாகச் செய்து வருகிறார்கள். அவர்களைப் பற்றிய செய்திகளும் அவ்வப்போது பசுமை விகடனில் வெளியாகியும் வருகிறது.

அது போன்றவர்களில் ஒருவர்தான், முன்னோடி இயற்கை ஆராய்ச்சி விவசாயி 'செங்கல்பட்டு முகுந்தன்'. கடந்த பருவத்தில் 'நெய்கிச்சடி' எனும் குறுகியகால நெல் வித்தை இயற்கை வழியில் பயிர் செய்திருந்தார். இது, ஐ.ஆர், விதைகள் வருவதற்கு முன்பு செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் பிரபலமாக இருந்த ரகமாகும். 4 அடி உயரம் வளரக்கூடிய சன்ன ரகம். இதன் ஆயுள் 110 நாள். நவரை, சொர்ணவாரிப் பட்டங்களில் பயிரிடுவதற்கு ஏற்ற ரகமிது.

இதை ஒற்றை, இரட்டை நாற்றாக நடவு செய்திருந்தார், முகுந்தன். அதிகபட்சமாக 80 சிம்புகளும், சராசரியாக 50 சிம்புகளும் வந்திருந்தன. அறுவடைக்கு முன்பாக பெய்த தொடர் மழையில் பாதிக்கப்பட்டும், ஏக்கருக்கு 30 மூட்டை (75 கிலோ மூட்டை) என்ற கணக்கில் அறுவடை செய்திருக்கிறார். 'கால நிலை பொருந்தியிருந்தால்... 35 மூட்டை கிடைத்திருக்கும்' என்கிறார் முகுந்தன்.

இந்த நெய்க்கிச்சடி ரகம், இறக்குமதியான வித்துக்களின் படையெடுப்பால் காணாமல் போன ஒரு ரகம். அதைத் தேடிப் பிடித்திருப்பதோடு, விதைகள் தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கவும் தயாராக இருக்கிறார் முகுந்தன்.

இப்படி உலகில் உள்ள அனைத்துப் பயிர் ரகங்களுமே உழவர்களால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவைதான். உழவர்கள் கண்டுபிடித்த பயிர்களில் சில மாற்றங்களைச் செய்து, அவற்றின் நிலைத்தத் தன்மையைக் கெடுத்ததைத் தவிர, ஆராய்ச்சியாளர்கள் வேறு ஒன்றையும் செய்தது கிடையாது.

உடல் வளர்க்க உதவி செய்யும் உழவர்களின் ஆராய்ச்சி தொடரட்டும்!

- போற்றுவோம்

மீண்டும் திறக்கப்படும் எஸ்.வி.சர்க்கரை ஆலை !

கடந்த ஆண்டு மூடப்பட்ட எஸ்.வி. சர்க்கரை ஆலையை, அடுத்த மாதத்தில் இருந்து மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கையை எடுத்திருக்கிறது... ஆலையின் புதிய நிர்வாகம்.

ஊளைச் சதைக்கு உரம் போடும் ரசாயனங்கள் !

காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் வாலாஜாபாத் அருகில் உள்ளது, பழையசீவரம். இங்குதான் இருக்கிறது எஸ்.வி. சர்க்கரை ஆலை. படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்ட பின், சுற்றுப்பட்டு விவசாயி-கள், எஸ்.வி. சர்க்கரை ஆலைக்குதான் கரும்புகளை அனுப்பி வந்தனர். இந்த ஆலையும் மூடப்படவே... கடும் பாதிப்புக்குள்ளாகினர் விவசாயிகள்.

இந்நிலையில், சமீபத்தில் இந்த ஆலையை 'பிரபாத் குரூப் ஆஃப் கம்பெனிஸ்' முதலீட்டாளர் குழுமம் விலைக்கு வாங்கி, மீண்டும் அரவையைத் துவக்க முடிவு செய்துள்ளது. இதுபற்றி பேசிய ஆலையின் புதிய மேலாண் இயக்குநர் தினேஷ் பாட்டீல், ''தற்போது மராமத்து வேலைகள் நடக்கின்றன. டிசம்பர் மாதத்தில் ஆலை இயங்கத் துவங்கும். இதன்மூலம், காஞ்சிபுரம், உத்திரமேரூர் தாலூகாவில் உள்ள கரும்பு விவசாயிகள், அரக்கோணம் தாலூகாவுக்கு உட்பட்ட 18 கிராம விவசாயிகள்... என 13,000 விவசாயிகள் பலன் பெறுவார்கள்.

நடப்பு ஆண்டில் 8 ஆயிரம் ஏக்கரிலும், அடுத்த ஆண்டு 10 ஆயிரம் ஏக்கரிலும் கரும்பு சாகுபடி செய்ய திட்டமிட்டிருக்கிறோம். 20 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி, என்பதுதான் எங்கள் இலக்கு'' என்று சொன்னார்.

பாடுபட்டு கரும்பை உற்பத்தி செய்து கொடுக்கும் விவசாயிகளுக்கு உரிய பலன், தொடர்ந்து கிடைத்து வரும் பட்சத்தில் 20 ஆயிரம் ஏக்கர் இலக்கு என்பது எட்டமுடியாததல்ல!

- ஜி. பிரபு

 

ஊளைச் சதைக்கு உரம் போடும் ரசாயனங்கள் !
ஊளைச் சதைக்கு உரம் போடும் ரசாயனங்கள் !
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism