Published:Updated:

கைகொடுக்கும் குளவிகள் !

கைகொடுக்கும் குளவிகள் !

கைகொடுக்கும் குளவிகள் !

கைகொடுக்கும் குளவிகள் !

Published:Updated:
கைகொடுக்கும் குளவிகள் !
அறிவியல்  
கைகொடுக்கும் குளவிகள்!
கைகொடுக்கும் குளவிகள் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைகொடுக்கும் குளவிகள் !

இரைவிழுங்கிப் பூச்சிகள்ல அடுத்து பாக்க போறது... பெருமாள்பூச்சி. இதை, 'கும்பிடுப்பூச்சி', 'மழைப்பூச்சி'னும் சொல்லுவாங்க.

நெற்றிப் பகுதியில நாமம் மாதிரி மூணு கோடு இருக்கறதால பெருமாள்பூச்சினும்; முன்னங்கால்களைத் தூக்கிக் கும்பிடு போடுற மாதிரியே வெச்சிருக்கறதால 'கும்பிடுப்பூச்சி'னும்; சின்னப்பசங்க, தீப்பெட்டியில இதை அடைச்சு வெச்சுகிட்டு, அது எந்தப் பக்கம் திரும்புதோ, அந்தப் பக்கம் மழை வரும்னு விளையாடுறதால, 'மழைப்பூச்சி'னும் சொல்லுறாங்க.

இதைப் பொறுத்தவரைக்கும் நன்மை செய்றது, தீமை செய்றதுனு எந்த வித்தியாசமும் இல்லாம கண்ணுல தட்டுப்படுற எல்லா பூச்சிகளையும் புடிச்சித் தின்னுடும்.

கைகொடுக்கும் குளவிகள் !

முன்னங்கால்களோட பக்கவாட்டுப் பகுதி, ரம்பம் மாதிரி அமைஞ்சிருக்கும். இதோட உணர்கொம்புகள் தலைமுடி மாதிரி, உடம்பு அளவுக்கு நீளமா இருக்கும். இது முட்டை வெக்குற விதமே வித்தியாசமானது. அஞ்சறைப் பெட்டி, மாதிரி ஒரு அமைப்புக்குள்ள பல அடுக்குகளா முட்டைகள வெக்கும். இது 800 முதல் 1,000 முட்டைக வரைக்கும் வெக்கும். பொதுவா இலை, செடியோட நுனிப்பகுதியிலதான் முட்டையை வெச்சு, தன்னோட உடம்புல சுரக்குற எச்சில் மாதிரியான ஒரு திரவத்தை வெச்சு, முட்டைகளை மூடிடும். இந்த முட்டைக் கூட்டிலிருந்து வெளிய வர்ற இளம்பூச்சி, ஒரு செ.மீ. முதல் 10 செ.மீ. நீளத்துல பச்சை, பழுப்புனு பல நிறத்துல இருக்கும். இளம்பருவத்துல இருந்து தாய் அந்துப்பூச்சியா மாறுறதுக்கு ஒரு வருஷம் ஆகும். இளம்பருவத்துல ஒரு நாளைக்கு 10 பூச்சிக வரைக்கும் புடிச்சுத் திங்கும்.

இந்தப் பூச்சி, பச்சோந்தி கணக்கா... இருக்கற இடத்துக்கு ஏத்த மாதிரி தன்னோட உடம்பு நிறத்தை மாத்திக்கறதுல கில்லாடி. பூக்கள்ல இருக்கற மகரந்தங்கதான் இதுக்கு உணவு. பூவோட இதழ்களுக்கு நடுவுல குச்சி மாதிரியே படுத்திருக்கும். அப்ப, பக்கத்துல வர்ற புழு, பூச்சிகளைப் பிடிச்சுத் தின்னுடும். சில சமயங்கள்ல தேனீக்களையும் பிடிச்சு திங்கறதால, நன்மை செய்ற பூச்சிக வரிசையில இதுக்கு முக்கியமான இடம் இல்லை. பயிருங்களுக்கு நடுவுல கண்ணுல தட்டுப்படுற எல்லா வகை புழு, பூச்சி, ஈக்கள், வெட்டுக்கிளிகளைப் பிடிச்சு திங்கறதால இதை நன்மை செய்ற பட்டியல்ல வெச்சிருக்காங்க. காடுகள்ல பெரிய உருவத்துல வலம் வர்ற இந்தப் பூச்சி... சின்னத் தவளை, பாம்பு குட்டிகளைக்கூட போட்டு தாக்கிடும்.

இடுக்கி வால்பூச்சி!

இதுவும் நன்மை செய்ற பூச்சிதான். இது வயல்ல மட்டுமில்லாம, வீடுகளுக்கும் வந்துடும். எங்க இண்டு, இடுக்கு, ஓட்டையைப் பாத்தாலும் உள்ளே நுழைஞ்சிடும். காதுல இந்தப் பூச்சி புகுந்திடும்னு சொல்லி தூங்குறப்ப காதுல பஞ்சை வெச்சிகிட்டு படுப்பாங்க சின்னப் பசங்க. இதோட வயித்துக்குப் பின்னாடி, இடுக்கி மாதிரியான அமைப்புல கொடுக்கு அமைஞ்சு இருக்கும். எப்பவுமே இந்த கொடுக்கைத் தூக்கிக்கிட்டே திரியும். பெரும்பாலும், கருப்பு நிறத்துல, பின்பக்கம் வெள்ளை நிறக் கோடுகளோட இருக்கும். இது மண்ணுலதான் வசிக்கும். மண்ணுல இருக்கற கண்ணுக்குத் தென்படுற தீமை செய்ற பூச்சிகளோட முட்டை, புழு, பூச்சி எல்லாத்தையும் கபளீகரம் செஞ்சிடும்.

கைகொடுக்கும் குளவிகள் !

பொழுதுபோகாத நேரத்துல செடிகள்ல ஏறி, அங்க இருக்கற தீமை செய்ற பூச்சிகளையும் பிடிச்சு திங்கும். ஒரு நேரத்துல 250 முதல் 350 முட்டைக வரைக்கும் வெக்கும். அசுவணியைப் பிடிச்சு திங்குறதுல பேரு வாங்குனப் பூச்சி இது. ஐரோப்பா கண்டத்துல ஆப்பிள் தோட்டங்கள்ல அசுவணியைக் கட்டுப்படுத்த, இந்தப் பூச்சியைத்தான் பயன்படுத்துறாங்க. நம்ம நாட்டுல மக்காசோளத்தைத் தாக்குற தண்டு ஈ, மற்றும் பயிர்கள்ல இருக்கற புழு, பூச்சிகளைப் பிடிச்சு திங்குறதுல கில்லாடி. மண்ணுல விழுகுற பொருள்களை மக்க வெக்குற வேலையையும் இது பாக்குதுங்கறது குறிப்பிட வேண்டிய விஷயம்.

இரைவிழுங்கிப் பேன்சிலந்தி!

இதுவும் சிலந்தி மாதிரியே பூச்சி இனத்தைச் சேர்ந்தது இல்லை. உணர் கொம்புகள், தலை, மார்பு, வயிறுனு எந்த பாகமும் இல்லாம உருண்டையா இருக்கும். இளம்பருவத்துல 6 கால்களோடவும், வளர்ந்த பிறகு 8 கால்களோடவும் இருக்கும். இந்த வகையைச் சேர்ந்த தீமை செய்ற பூச்சிதான், தென்னையில தாக்குதலை ஏற்படுத்துற ஈரியோபைட் சிலந்தி.

இந்த வகையில நல்லது, கெட்டது ரெண்டுமே இருக்கு. இரைவிழுங்கிப் பேன் சிலந்திக நல்லது செய்றது, செம்பேன் சிலந்திக கெட்டது செய்றது. இது ரெண்டுக்கும் வித்தியாசம் பாக்குறது ரொம்ப கஷ்டம். நல்லது செய்ற பேன்சிலந்திக அங்க, இங்க ஓடி ஆடிக்கிட்டு இருக்கும். ஆனா, கெட்டது செய்றது ஒரே இடத்துல உட்காந்து இருக்கும். கெட்டது செய்றதோட வாய் 'ட' மாதிரி கீழ தொங்கிக்கிட்டு இருக்கும்.நல்லது செய்ற பூச்சிகளோட வாய் முன்னோக்கி நீண்டு இருக்கும்

தீமை செய்ற செம்பேன் சிலந்தி, வெண்டை மற்றும் பருத்திச் செடியில இலையோட பின்பகுதியில நூலாம்படை மாதிரி ரத்த சிவப்புல உக்காந்து இருக்கும். இதுதான் இலையை மஞ்சள் நிறத்துக்கு மாத்துறது. பெரும்பாலும் பயிர்களுக்கு போதுமான அளவு தண்ணி கிடைக்காத நேரத்துலதான் இந்த சிலந்தியோட தாக்குதல் அதிகமா இருக்கும். இதை அழிக்குற வேலையை, இரை விழுங்கிப் பேன்சிலந்திக பாத்துக்கும். கெட்டது செய்ற சிலந்திகளை அழிக்க இயற்கையே இலவசமா செஞ்சு கொடுத்த ஏற்பாடுதான் இரைவிழுங்கிப் பேன்சிலந்திக. ஆனா, நாம பூச்சிக்கொல்லி தெளிக்கறப்ப... இரைவிழுங்கிப் பேன்சிலந்திகளும் அதிகமா அழிஞ்சு போகுது.

இரைவிழுங்கிக் குளவிகள்!

நம்ம வீடுகள்ல, தோட்டங்கள்ல பாக்குற இடத்துலயெல்லாம் மண்ணை வெச்சு கூடுகட்டுற செங்குளவிக, பேப்பர் மாதிரியான பொருட்களை வெச்சி கூடுகட்டுற கருப்பு நிறத்துல மஞ்சள் மற்றும் வெள்ளைக் கோடுகளோட இருக்கற மஞ்சள் குளவிக... இதெல்லாம்தான் இரைவிழுங்கிக் குளவிகள். இந்தக் குளவிக முட்டை போடுறதுக்கு முன்ன, வயல்பக்கமா போயி நல்ல கொழுத்த பச்சைப்புழுவைத் தேடும். புழுவைப் பாத்தவுடனே தன்னோட கொடுக்கால புழுவை ஒரு போடு போடும். இதுல புழு சாகாம, மயக்க நிலையில இருக்கும். அதை அப்படியே தூக்கிட்டுப் போயி, புழுவோட உடம்புக்குள்ள முட்டையை வெச்சு, செம்மண்ணை வெச்சு கூடு கட்டிடும். இதுல கவனிக்க வேண்டியது என்னன்னா, அந்த கூட்டுக்குள்ள இருக்கற புழு சாகாம, அழுகாம அப்படியே இருக்கும். கிட்டத்தட்ட பிரமிடு தொழில்நுட்பத்தை சாதாரணமா குளவிக பயன்படுத்துடுறது ஆச்சர்யமான விஷயம்.

முட்டையிலிருந்து வெளியே வர்ற குளவியோட இளம் புழுக்களுக்கு பச்சைப்புழுவோட உடம்புதான் சீம்பால் மாதிரி. இந்தப் புழுக்கள் உள்ளயே கூட்டுப்புழு பருவத்தை முடிச்சிட்டு, குளவியாத்தான் வெளிய வரும். செங்குளவிகள் தனித்தனியா கூடுகட்டி, இனப்பெருக்கம் செய்யும். மஞ்சள் கலர் குளவிக கூட்டம், கூட்டமாத்தான் கூடுகட்டும். செங்குளவிகள் உக்காரும்போது, றெக்கை பட்டாம்பூச்சி மாதிரி ரெண்டு பக்கமும் நீண்டு இருக்கும். மஞ்சள் குளவிகள் றெக்கையை உடம்போடு ஒட்டி வெச்சுகிட்டுதான் உக்காரும். இந்த வகை குளவிகள் சாதாரணமா புழுக்களைத் துண்டு, துண்டா கடிச்சு திங்குறதால இரைவிழுங்கிக் குளவிகள்னு சொல்றோம்.

இந்தக் குளவிகள்ல ஒரு வகை ஜாதிதான்... ஒட்டுண்ணிக் குளவிகள். அதைப் பத்தி விரிவா பிறகு பாப்போம்.

- பூச்சி பறக்கும்

 

கைகொடுக்கும் குளவிகள் !
கைகொடுக்கும் குளவிகள் !
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism