தர்மபுரி, கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அக்டோபர் 12-ம் தேதி கூட்டு மீன் வளர்ப்பு; 13-ம் தேதி செம்மறியாடு வளர்ப்பு; 20-ம் தேதி காடை வளர்ப்பு; 26-ம் தேதி மதிப்பூட்டிய மீன் பொருட்கள் தயாரிப்பு; 27-ம் தேதி பன்றி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், குண்டலப்பட்டி, தருமபுரி-636 703. தொலைபேசி 04342-292525.
புறக்கடைக் கோழி!
காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் அக்டோபர் 7-8 தேதிகளில் காளான் வளர்ப்பு; 8-ம் தேதி தேனீ வளர்ப்பு மற்றும் மதிப்பூட்டப்பட்ட தேன் பண்டங்கள்; 14-15 தேதிகளில் நன்னீர் மீன் வளர்ப்பு; 19-20
தேதிகளில் மழைக்காலத்தில் தானிய பாதுகாப்பு; 21-22 தேதிகளில் புறக்கடைக் கோழி வளர்ப்பு; 22-ம் தேதி பண்ணைக் கருவிகள் ; 26-ம் தேதி ஊறுகாய் தயாரித்தல்; 27-ம் தேதி பசுந்தீவன உற்பத்தி; 29-ம் தேதி பயறு வகை சாகுபடி மற்றும் களர்-உவர் நில மேம்பாடு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.
தொடர்புக்கு இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காட்டாங்குளத்தூர் அஞ்சல், காஞ்சிபுரம் 603 203. தொலைபேசி 044-27452371.
அலங்கார மீன்!
தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளத்திலுள்ள ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தில் செப்டம்பர் 28-ம் தேதி வணிக ரீதியாக காளான் வளர்ப்பு; அக்டோபர் 13-ம் தேதி காடை மற்றும் வான்கோழி வளர்ப்பு; 18-ம் தேதி காய்கறிகளில் நுண்ணூட்டச் சத்து மேலாண்மை ; 19-ம் தேதி எளிய முறையில் பூச்சிவிரட்டி தயாரிப்பு; 20-ம் தேதி லாபகரமான ஆடு வளர்ப்பு; 21-ம் தேதி அலங்காரச் செடிக்களுக்கான நாற்றுப் பண்ணை ; 22-ம் தேதி காய்கறிகள் பதப்படுத்துதல்; 25-ம் தேதி அலங்கார மீன் வளர்ப்பு 26-ம் தேதி மண்புழு உரம் தயாரிப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சியின் போது தேநீர், மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு செய்துகொள்ளவும். தொடர்புக்கு, தொலைபேசி 0461-2269306.
கட்டணப் பயிற்சி
வேளாண் கண்காட்சி!
|