Published:Updated:

மண்புழு மன்னாரு

மண்புழு மன்னாரு

மண்புழு மன்னாரு

மண்புழு மன்னாரு

Published:Updated:
மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம்ம ஊருல பழங்காலத்துல இருந்தே ஓட்டைப் பானைத் தொழில்நுட்பம் தவழ்ந்துகிட்டிருக்கு. அதாவது, தண்ணி இல்லாம மரங்க வாடிப் போயிடக் கூடாதுனு மரத்துக்குப் பக்கத்துல, அடியில ஓட்டைப் போட்ட ஒரு பானையைப் புதைச்சி, அதுல தண்ணி ஊத்தி வெப்பாங்க. இதுல இருக்கற தண்ணிய வெச்சே வறட்சியில இருந்து மரங்க தப்பிக்குமாம். இப்பவும்கூட நம்ம விவசாயிங்க பலரும் இதைக் கடைபிடிச்சிக்கிட்டுதான் இருக்கறாங்க.


மழை கொட்டோ, கொட்டுனு கொட்டும்போதுகூட தினமும் கால் மணி நேரமாவது சொட்டுநீர்ப் பாசனத்தை இயக்குங்க. இல்லாட்டினா... குழாயில பாசி, பூஞ்சை பிடிச்சிக்கிட்டு, தொல்லை கொடுக்க ஆரம்பிச்சுடும்.
சொட்டுநீர்ப் பாசனம் போட்டிருக்கவங்களுக்கு ஒரே எதிரி யார் தெரியுமா? எலிதான்! தண்ணி தாகம் வர்ற சமயத்துல இந்தக் குழாய்களைப் பார்த்துட்டா... அதைக் கடிச்சி, உள்ள இருக்கற தண்ணியைக் குடிக்கும். எலிகளோட பல்லு எப்பவும் நமநமனு அரிச்சிக்கிட்டே இருக்கும். அதுக்காகவே எதையாவது பல்லால கரண்டிகிட்டே இருக்கும். அதுமாதிரியான சமயங்கள்ல இந்தக் குழாய்ங்க கண்ணுல பட்டாலும் ஆபத்துதான். துண்டுதுண்டா கடிச்சி போட்டுடும். இதைத் தடுக்க, நூறு கிராம் பெருங்காயத்தைத் துணியில கட்டி, சொட்டுநீர்ப் பாசனத்தோட இதயமா இருக்கற வடிகட்டியில போட்டு வைங்க. பெருங்காய வாசம் அடிச்சா... எலி, அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்காது.
சில மாடுங்க அரிசியைக் கண்டா மூக்கு முட்ட தின்னுப்புடும். அப்புறமா, வயிறு உப்புசம் வந்து அவதிப்படும். இதைப் போக்க ஒரு வசம்புத் துண்டை இடிச்சி தண்ணியில கலந்து கொடுங்க, சீக்கிரமே சரியாயிடும்.

நாட்டுக் கோழிங்களுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் ஏற்பட்டா, சீரகத்தை இடிச்சி சுண்டைக்காய் அளவுக்கு உள்ளுக்குக் கொடுங்க... விஷயம் சரியாயிடும். இப்படி செஞ்ச ரெண்டு மணி நேரத்துக்குத் தண்ணி கொடுக்கக் கூடாதுங்கறத மனசுல வெச்சுக்கோங்க.


 

 

 

 

 

 

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism