Published:Updated:

முன்வருவரா முதல்வர் ? !

முன்வருவரா முதல்வர் ? !

பிரீமியம் ஸ்டோரி
முன்வருவரா முதல்வர் ? !
முன்வருவரா முதல்வர்?!
முன்வருவரா முதல்வர் ? !

அனைவருக்கும் பசுமை வணக்கம்...

முன்வருவரா முதல்வர் ? !

ராஜராஜ சோழனின் ஆயிரம் ஆண்டு விழா கொண்டாட்டத்துக்கு நடுவே, "நல்ல உற்பத்தித் திறன் கொண்ட செம்மை நெல்லுக்கு, 'ராஜராஜன் ஆயிரம்' என்று பெயரிடுகிறேன். இனி, நீங்கள் உணவு உண்ணும் போதெல்லாம் ராஜராஜனை நினைத்துப் பார்ப்பீர்கள்" என்று தமிழக முதல்வர் வெளியிட்ட ஓர் அறிவிப்பு... சலசலப்பைக் கிளப்பியிருக்கிறது.

'செம்மை நெல்' என்பது சாகுபடி தொழில்நுட்பமே தவிர, நெல் ரகமல்ல. இது, காலகாலமாக 'ஒற்றை நாற்று நடவு' என்ற பெயரால் தமிழக விவசாயிகள் பின்பற்றி வந்த தொழில்நுட்பம்தான். இதைப்பற்றி 1911ம் ஆண்டில் வெளியான 'பிழைக்க வழி’ என்ற மாத இதழில் சிறப்பாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதை 'பசுமை விகடன்’ இதழிலும் வெளியிட்டிருக்கிறோம்.

காலச்சூழலில் மெள்ள மறைந்து போன இந்த 'ஒற்றை நாற்று நடவு', சில ஆண்டுகளாக தமிழக விவசாயிகளால் மீண்டும் முன்னெடுக்கப்பட்டு, ஆங்காங்கே பரவ ஆரம்பித்தது. இதன் வெற்றியைக் கண்ட அதிகாரிகள், 'திருந்திய நெல் சாகுபடி' (எஸ்.ஆர்.ஐ.) என்று ஒரு பெயரைச் சூட்டினார்கள். பிறகு, அதையும் மாற்றி 'செம்மைநெல் சாகுபடி' என்று புதுப்பெயர் சூட்டினர்.

'ஒற்றை நாற்று நடவு என்ற பெயரே அந்தத் தொழில்நுட்பத்தை பாமர விவசாயிகளும் எளிதில் அறிந்து கொள்ள உதவியாக இருந்தது. ஆனால், பெயர் சூட்டுகிறேன் பேர்வழி என்று அதையெல்லாம் குலைத்துவிட்டனர்' என்று ஏற்கெனவே விவசாயிகள் நொந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், 'ராஜராஜன் 1000' என்பது புதுக்குழப்பத்துக்கு விதை போட்டிருக்கிறது.

ஒரு தொழில்நுட்பம் என்பது எளிதில் விளங்க வேண்டும். எனவே, 'ஒற்றை நாற்று நடவு' என்கிற பெயரை மீண்டும் உறுதிப்படுத்துவதே நல்லது.

அதேசமயம், ராஜராஜனை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் இத்தொழில்நுட்பம் மூலம் அதிக மகசூல் எடுக்கும் விவசாயிக்கு 'ராஜராஜன் 1000' என்ற பெயரில் விருது வழங்கி கௌரவிக்கலாம்!

இதுவும் விவசாயிகளின் எதிர்பார்ப்புதான். முன்வருவரா முதல்வர்?!

நேசத்துடன்,
பா.சீனிவாசன்
ஆசிரியர்

 

 

 

முன்வருவரா முதல்வர் ? !
முன்வருவரா முதல்வர் ? !
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு