Published:Updated:

வேளாண் கண்காட்சு எங்கெங்கு காணினும் 'ஏந்திரன்'கள் !

வேளாண் கண்காட்சு எங்கெங்கு காணினும் 'ஏந்திரன்'கள் !

பிரீமியம் ஸ்டோரி
வேளாண் கண்காட்சு எங்கெங்கு காணினும் 'ஏந்திரன்'கள் !
கண்காட்சி
பசுமைக்குழு
வேளாண் கண்காட்சி...எங்கெங்கு காணினும் 'எந்திரன்'கள்!
வேளாண் கண்காட்சு எங்கெங்கு காணினும் 'ஏந்திரன்'கள் !
வேளாண் கண்காட்சு எங்கெங்கு காணினும் 'ஏந்திரன்'கள் !

கோயம்புத்தூர், 'கொடீசியா' வளாகத்தில் ஆண்டுதோறும், வேளாண் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான கண்காட்சி செப்டம்பர் 30-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 3-ம் தேதி வரை நடைபெற்றது. 'கொடீசியா' ஏற்பாடு செய்திருந்த இக்கண்காட்சிக்கு 'பசுமை விகடன்' ஊடக ஆதரவு அளித்திருந்தது.

விவசாயத்தில் அறிமுகமாகும் புதியத் தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள், புதிய ரகங்கள் ஆகியவற்றை நேரடியாகப் பார்த்து விளக்கம் பெறலாம் என்பதாலும், இந்தியா முழுவதும் இருந்து இந்தக் கண்காட்சிக்கு அதிகளவு விவசாயிகள் வருவார்கள் என்பதாலும், வேளாண் பல்கலைக்கழகம், வேளாண் துறை, கால்நடைத் துறை, வேளாண் அறிவியல் நிலையங்கள் மற்றும் விவசாயம் சார்ந்த நிறுவனங்களின் சார்பில் இருநூறுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இது, 'இயந்திர ஆண்டு' எனும் அளவுக்கு அதிகளவிலான இயந்திரங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. சிறிய கதிர் அரிவாள் முதல் ஒரு கோடி ரூபாய் விலையுள்ள கரும்பு வெட்டும் பெரிய இயந்திரம் வரை திரும்பிய பக்கமெல்லாம்... 'எந்திரன்'களின் உலாதான்!

வேளாண் கண்காட்சு எங்கெங்கு காணினும் 'ஏந்திரன்'கள் !

ஒரு மணி நேரத்தில் 400 முதல் 500 தேங்காய்களை மட்டை உறிக்கும் கருவி, இளநீரில் துளையிடும் கருவி, இரண்டாக வெட்டும் கருவி, நெல் நடவு, களையெடுப்பு, அறுவடை, வைக்கோலைக் கட்டுக் கட்டாக கட்டுவது, மக்காச்சோளம் அறுவடை, தென்னை மட்டைகளைத் தூளாக்குதல், பால் கறவை இயந்திரங்கள், வேளாண்மைப் பல்கலைக்கழகம் உருவாக்கிய மண்வெட்டி முறையில் இயங்கும் ரோட்டோவேட்டர் என அனைத்து வேலைகளுக்கும் பயன்படும் இயந்திரங்கள் இடம் பெற்று இருந்தன.

செல்போனில் மோட்டாரை இயக்குவது தொடர்பானத் தொழில்நுட்ப அரங்குகளும் இருந்தன. கண்காட்சியைக் காண வந்திருந்த விவசாயிகள் ஒவ்வொரு இயந்திரத்தையும், தொழில்நுட்பங்களையும் ஆர்வத்துடன் பார்த்து விளக்கம் கேட்டபடி இருந்தனர்.

வேளாண் கண்காட்சு எங்கெங்கு காணினும் 'ஏந்திரன்'கள் !

வேளாண்மைப் பல்கலைக்கழக அரங்குகளில் காய்கறி மற்றும் விவசாயப் பொருட்களில் சந்தை நிலவரங்களை அலைபேசி மூலம் குறுஞ்செய்தியாக பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. மேலும் கண்காட்சி நடந்த நாட்களில் வேளாண்மை தொடர்பான பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றன.

கண்காட்சியைத் தொடங்கி வைத்து பேசிய கால்நடைத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, "ஆட்கள் பற்றாக்குறையால்

70 சதவிகிதமாக இருந்த விவசாயம் 60 சதவிகிதமாக குறைந்துள்ளது. விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசுகள் வழங்கும் மானியங்களைப் பெற்று நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்க வேண்டும். மதிப்புக் கூட்டுப்பொருட்களாக மாற்றி விற்பனை செய்தால், நல்லமுறையில் லாபம் ஈட்டலாம்" என்றார்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முருகேசபூபதி, "இதுநாள் வரை ஆராய்ச்சி, புதிய ரகங்கள் கண்டுபிடிப்பதில் அதிக கவனம் செலுத்திய பல்கலைக்கழகம், இனிவரும் காலங்களில் உற்பத்தி செய்த பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது, விற்பனை வாய்ப்புகளை மேம்படுத்துவது போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தும்" என்று சொன்னார்.

வேளாண் கண்காட்சு எங்கெங்கு காணினும் 'ஏந்திரன்'கள் !

 

வேளாண் கண்காட்சு எங்கெங்கு காணினும் 'ஏந்திரன்'கள் !

படங்கள் தி. விஜய், ஜா. ஜாக்ஸன், வெ. பாலாஜி

வேளாண் கண்காட்சு எங்கெங்கு காணினும் 'ஏந்திரன்'கள் !
வேளாண் கண்காட்சு எங்கெங்கு காணினும் 'ஏந்திரன்'கள் !
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு