Published:Updated:

வானிலை அறிக்கை வாசிக்கும் தட்டான்..!

வானிலை அறிக்கை வாசிக்கும் தட்டான்..!

பிரீமியம் ஸ்டோரி
வானிலை அறிக்கை வாசிக்கும் தட்டான்..!
அறிவியல்  
வானிலை அறிக்கை வாசிக்கும் தட்டான்..!
வானிலை அறிக்கை வாசிக்கும் தட்டான்..!
வானிலை அறிக்கை வாசிக்கும் தட்டான்..!

வெட்டுக்கிளி... விவசாயிகளை வெலவெலத்துப் போக வெக்குற பூச்சி. பயிருல இருக்கற இலையோட நுனிப்பகுதிகளை வெட்டுறதாலயும், இலையைக் கடிச்சு திங்குறதுனாலயும் வெட்டுக்கிளிகளைப் பாத்தா விவசாயிகளுக்குக் கிலி பிடிச்சுக்கும். ஆனா, கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்குற மாதிரி வெட்டுகிளிகள்லயும் நன்மை செய்ற ஒரு வகை இருக்கு. அதுதான் நீள்கொம்பு வெட்டுக்கிளி. இதோட உணர்கொம்பு உடம்போட நீளத்தை விட ரெண்டு மடங்கு நீளமா இருக்குறதால தான் இதுக்கு இந்த பேரு.

இதன் பின்னங்கால் எப்பவும் தாவுறதுக்கு வசதியா தரையோட ஒட்டிக்கிட்டு இருக்கும். வயித்துப் பகுதியோட நுனியில வாள் மாதிரியான முட்டை வெக்குற உறுப்பு ஒண்ணு இருக்கும். இது, ராத்திரி நேரங்கள்லதான் வேட்டையாடும்.

மழைக்காலங்கள்ல வயலோரம் இருக்கற வீடுகள்லகூட தட்டுப்படும். றெக்கைகள உரசி ஒருவிதமான ஒலி எழுப்பி, தன்னோட இணையைத் தேடும். 3 முதல் 4 மாசத்துக்கு உயிர் வாழுற இது ராத்திரி நேரத்துல வயல்ல தட்டுப்படுற பச்சைக் காய்ப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சிகளோட இளம்புழுக்களை வேட்டையாடும்.

இரை விழுங்கிப் பாச்சை

வீடுகள்ல இண்டு இடுக்குலயும், துணிமணிகளுக்கு இடையிலயும் இருக்குற பாச்சையைப் பார்த்திருப்பீங்க. அந்தப் பாச்சை இனத்துலயே பயிர்களுக்கு நன்மை செய்ற ஒரு ஜாதியும் இருக்கு. அதுதான் இரை விழுங்கிப் பாச்சை. இது தீமை செய்ற பூச்சிகளோட முட்டைகளை அதிகளவுல அழிக்குறதுனால இதுக்கு 'முட்டைப் பிசாசு'னும் ஒரு பேரு இருக்கு. நெல் பயிரைத் தாக்குற குருத்துப் பூச்சி, இலைச்சுருட்டுப் புழு, படைப் புழு, புகையானோட இளம்பருவப் புழுக்களைத் தேடித் தேடி அழிக்குறதுல பெரிய ஆளு. இதுக்கும் நீள் கொம்பு வெட்டுக்கிளிக்கு இருக்குறது மாதிரியே வயித்தோட நுனிப்பகுதியில கத்தி மாதிரி கூர்மையான பகுதி இருக்கு. இந்தக் கூர்மையான பாகத்தை வெச்சு, நெல் பயிரோட தண்டுப் பகுதியில தன்னோட முட்டையைச் சொருகி வெச்சுடும். முட்டையிலிருந்து தாய்ப் பூச்சியா மாறுறதுக்கு 60 முதல் 80 நாட்கள் ஆகும். பூச்சித் தாக்குதல் உள்ள நெல் வயல்ல இது இறங்கிட்டா, றெக்கையைக் கழட்டி விட்டுட்டு, தாவித்தாவி எதிரிகளைக் கொன்னு அழிக்கும்.

தாடிக்கார ஈ

வானிலை அறிக்கை வாசிக்கும் தட்டான்..!

ஈ வகையிலயே மனுஷனுக்கு இருக்குற மாதிரி வாய்ப்பகுதிக்குக் கீழ தாடி இருக்குறது இந்த ஒரு ஈ க்கு மட்டும்தான். அதுனால தான் இந்த பேரு. இதோட வாய்ப்பகுதி ஊசி மாதிரி கூர்மையா இருக்குறதால, இதுகிட்ட சிக்குற பூச்சிகளைத் துளை போட்டு உறிஞ்சிடும். இதுவும் கெட்டது செய்ற பூச்சிகளோட முட்டை, இளம்புழுக்களைப் பிடிச்சு திங்குறதுல கில்லாடி. பச்சைக்காய்ப் புழு, புரூட்டீனியா புழுனு வேட்டையாடும். சில சமயங்கள்ல வெட்டுகிளியைக் கூட தாக்கி வேட்டையாடுற அளவுக்குத் திறமைசாலி. இதோட கால்கள்ல மாட்டுனதுமே எதிரிக்கு உணர்ச்சி மரத்துப் போயிடும். பிறகு பொறுமையா எதிரியோட உடம்புல ஓட்டை போட்டு சாறை உறிஞ்சிக் குடிக்கும். அதோட மரம், இலை, தழைனு மண்ணுல விழுகுறதை மக்க வெக்குற வேலையையும் இது செய்யுது. பெரும்பாலும் இது இலையோட நுனிப்பகுதியிலதான் உக்காந்திருக்கும்.

இரை விழுங்கி இலைப்பேன்

நம்ம உள்ளங்கையைத் தண்ணியில நனைச்சுக்கிட்டு, நெல் பயிரோட நுனியைப் பிடிச்சு உருவுனா கையில கருப்பு நிறத்துல புள்ளிபுள்ளியா ஒட்டி இருக்கும், அதுதான் இலைப்பேன். இதோட எண்ணிக்கையைப் பொறுத்துதான் பயிர்ல பூச்சிக்கொல்லிய தெளிப்பாங்க. இந்த இலைப்பேன் பயிர்ல இருக்கற பச்சையத்தைச் சுரண்டி இலையை வெளுக்க வெச்சுடும். இலைபேன் பயிர்களுக்கு தீமை செஞ்சாலும், அதிலும் நல்லது செய்ற ஒரு ரகம் இருக்கு. அதுதான் இரை விழுங்கி இலைப்பேன். இலைப்பேன்ல நல்லது செய்றதை எப்படி கண்டுபிடிக்குறது..? அதுக்கு சில வழிக இருக்கு. தீமை செய்றது ஒரே இடத்துல இருக்கும். ஆனா நல்லது செய்றது அங்க, இங்க ஓடி ஆடிக்கிட்டு இருக்கும். நல்லது செய்ற இலைப்பேன் கருப்பு, பழுப்பு நிறங்கள்ல வயிறு பகுதி கூம்பு வடிவத்துல றெக்கையில 6 புள்ளிகளோடு இருக்கும். கெட்டது செய்ற இலைபேன், செம்பேன் சிலந்திக கூட்டத்துக்கு நடுவுலதான் அதிகளவுல இருந்து, அந்தக் கூட்டங்களை அழிக்குற வேலையை கச்சிதமா செய்யும்.

பெரியத் தட்டான்

சின்னவயசுல தட்டான் வால்ல நூலைக் கட்டி விளையாடாதவங்க பெரும்பாலும் இருக்க முடியாது. 'தட்டான் தாழப் பறந்தால், கட்டாயம்

மழை'னு சொல்வாங்க. மழை வரப்போகுதுனு, சம்பளம் வாங்காமலேயே வானிலை அறிக்கை சொல்ற வேலையையும் தட்டான் செய்யுது. பொதுவா சாயங்கால வேளையிலதான் வயல்ல வட்டம் போடும். இதுக்குக் காரணம் அந்த நேரத்துலதான் தீமை செய்ற பூச்சிக பயிர்கள்ல வேலையைக் காட்டிகிட்டு இருக்கும்.

பயிர்கள்ல இருக்கற பூச்சிகளைப் பாத்ததும் பாராசூட் மாதிரி பறந்து போய் 6 கால்கள்ல அள்ளிக்கிட்டுப் போயி, ஓரமா உக்காந்து திங்கும். இதோட சிறப்பு, ஒரு இடத்துல உக்காந்துகிட்டே தலையை 360 டிகிரியும் திருப்பி, எதிரிகளைத் தேடி தேடி வேட்டையாடும். இதோட கண்கள் பிரமாண்டமான கூட்டுக் கண்கள். தலையில முக்கால்வாசி பாகத்துல கண்தான் இருக்கும். மணிக்கு 100 கி.மீ வேகத்துல, சர்வ சாதாரணமா பறந்து போகும்.

இது நிலத்துல இருந்தாலும், தண்ணியிலதான் முட்டையை வெக்கும். தண்ணிக்கு மேல நின்னுகிட்டே வீசிட்டு போற முட்டையிலிருந்து வெளிய வர்ற புழுக்கள் தண்ணியில மக்குற பொருட்கள், இளம்பூச்சி, புழுக்களைப் பிடிச்சு திங்கும். கூட்டுப் புழுவா மாறுனதும் நெல்லோட பின்பக்கம் பழுப்பு நிறத்துல கூடு மாதிரி தொங்கும். இந்தக் கூட்டுல இருந்து வர்றதுதான் தட்டான். இது, கொசுக்கள், ஈக்கள், வண்டுகள், புழு, பூச்சிகளைத் திங்கும்.

ஊசித் தட்டான்

ஊசித் தட்டான், நெல் வயல்களுக்கு நடுவுல புகுந்து, வேட்டையாடுற அழகே தனி. பலவித நிறங்கள்ல மெல்லிசா இது அலையும். பெரியத் தட்டான் வயலுக்கு மேல பறந்து பூச்சிகளைப் பிடிச்சா, ஊசித் தட்டான் நெல் பயிருக்கு நடுவுல புகுந்து எதிரிகளை அழிக்குறதுல கில்லி. அதே நேரத்துல பெரியத் தட்டான் அளவுக்கு இது வேகமா பறக்காது. இதோட புழு பருவத்தில இருந்து தாய் அந்துப் பூச்சியா மாறுறதுக்குள்ள 10 முதல் 15 தடவை சட்டை உறிச்சிடும். கொசுக்களுக்கு இந்த தட்டான்தான் சிறந்த எதிரி.

தீ எறும்பு

சாறு உறிஞ்சும் பூச்சிக சுரக்குற தேனுக்காக, அது பின்னாடியே அலையிற எறும்புகள்ல, நல்லது செய்றதும் இருக்கு, தீமை செய்யறதும் இருக்கு. நல்லது செய்யற எறும்புகள்ல ஒண்ணுதான் தீ எறும்பு. இது கடிச்சா உடம்புல தீ பட்ட மாதிரி எரியும். இதை முசுரு, முசுடு இப்படியெல்லாம் சொல்வாங்க.

ஆரம்பக் காலங்கள்ல சீனாவுல அறுவை சிகிச்சைக்கு இதை பயன்படுத்தி இருக்காங்க. வெட்டுப்பட்ட இடத்துல இந்த எறும்பை வெச்சு, தலையை மட்டும் விட்டுட்டு உடம்பு இருக்கும் பாகத்தைப் பிச்சிடுவாங்க. அந்தக் கடுப்புல எறும்பு கடிச்சதும், அதோட கால்கள் அப்படியே மனிதத் தோலை இறுக்கிப் பிடிச்சுக்கும். கிட்டத்தட்ட ஆப்ரேஷன் தையல் மாதிரி. இப்பவும் பல பழங்குடி மக்கள் வெட்டுபட்ட இடத்துல தோலை ஒட்டுறதுக்காக இந்த எறும்பைப் பயன்படுத்துறாங்க. அதுனாலதான் இதை தையல் எறும்புகள்னு சொல்றாங்க. இந்த எறும்புக, மாமரம், கொய்யா... மாதிரியான மரங்கள்ல இலையை கூடுமாதிரி தைச்சு, அதுக்குள்ள வசிக்கும். புழு, பூச்சி, முட்டைகதான் இதோட உணவு. அதுனால இது, இருக்குற மரங்கள்ல கெட்டது செய்ற புழு, பூச்சிக ஒண்ணும் இருக்காது.

_ பூச்சி பறக்கும்.

வெட்டுக்கிளிகளை விரட்டும் ஆராய்ச்சி மையம்..!

வட மாநிலங்கள்ல தீமை செய்ற வெட்டுக்கிளிகளோட அராஜகம் அதிகம். இந்த வெட்டுக்கிளிக கூட்டமா கிளம்பி, பயிர்களோட நடுநரம்பு, தண்டுபாகத்தை மட்டும் விட்டுட்டு, பச்சை நிறத்துல கண்ணுல தட்டுப்படுற எல்லாத்தையும் தின்னுடும். இதைக் கண்டு அரண்டு போன அரசாங்கம், இந்த கூட்டத்தோட நடமாட்டத்தைக் கண்காணிக்குறதுக்காகவே ராஜஸ்தான் பாலைவனம் மற்றும் குஜராத் பகுதிகள்ல செயற்கைக்கோள் ஆராய்ச்சி மையங்களை அமைச்சிருக்கு. இந்த மையங்கள் மூலமா, பயிரைத் தாக்குற வெட்டுக்கிளி மற்றும் பருத்தியில வைரஸ்களைப் பரப்பும் வெள்ளை ஈக்களோட நடமாட்டத்தைக் கண்காணிச்சு, 'அதுங்க எந்தப் பகுதியில தாக்குது, அடுத்து எந்தப் பகுதிக்கு வரப்போகுது'னு விவசாயிகளுக்கு முன்னெச்சரிக்கை செய்றாங்க.

வானிலை அறிக்கை வாசிக்கும் தட்டான்..!
வானிலை அறிக்கை வாசிக்கும் தட்டான்..!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு