Published:Updated:

இயற்கை விவசாயிகளுக்கு மானியம் கொடுக்க வேண்டும் !

இயற்கை விவசாயிகளுக்கு மானியம் கொடுக்க வேண்டும் !

பிரீமியம் ஸ்டோரி
இயற்கை விவசாயிகளுக்கு மானியம் கொடுக்க வேண்டும் !
திருப்பம்
என்.சுவாமிநாதன்
இயற்கை விவசாயிகளுக்கு மானியம் கொடுக்க வேண்டும்!
இயற்கை விவசாயிகளுக்கு மானியம் கொடுக்க வேண்டும் !

வேண்டுகோள் விடுக்கும் வேளாண் கல்லூரி மாணவிகள்...

இயற்கை விவசாயிகளுக்கு மானியம் கொடுக்க வேண்டும் !

திருநெல்வேலி மாவட்டம், கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவர்கள் களப் பயிற்சிக்காக பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் எட்டு மாணவிகளுக்கு நாகர்கோவிலில் உள்ள ரூரல் அப் லிப்ட் சென்டரில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 15 நாட்கள் கொண்ட இந்தப் பயிற்சியில் பல்வேறு இயற்கை விவசாயிகளின் நிலங்களுக்கும் சென்று இயற்கை விவசாயம் குறித்தத் தகவல்களையும் அவர்கள் கற்றுக் கொண்டனர்.

பயிற்சியைப் பற்றி மாணவிகளிடம் கேட்டோம். "காலேஜ்ல அதிகமா ரசாயன முறை விவசாயத்தைப் பத்தி படிச்சுருக்கோம். கொஞ்சம்கொஞ்சம் இயற்கை விவசாயத்தைப் பத்தி தெரிஞ்சிருந்தாலும், முழுக்க இயற்கை விவசாயம் பண்ணுறவங்க நிறைய பேரு இருக்காங்கனு இந்தப் பயிற்சியிலதான் தெரிஞ்சுக்கிட்டோம். ரசாயன முறையில் விளையிற பயிர்களைவிட இயற்கையில் விளைந்ததில் நோய் எதிர்ப்புத் தன்மை அதிகமாக இருக்குங்கிறதையும் புரிஞ்சுக்கிட்டோம்.

குமரி மாவட்டத்துல ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள்தான் அதிகமா இயற்கை விவசாயம் செய்றாங்க. மத்தவங்க அதிகம் ஈடுபடுறதில்ல. அதுக்குக் காரணம், ரசாயனத்துல இருந்து திடீர்னு இயற்கைக்கு மாறும்போது அதிக மகசூல் கிடைக்குறதில்ல. அதுக்குக் கொஞ்சம் பொறுமை வேணும்’’ என்ற மாணவிகள்,

"ரசாயனத்துல இருந்து இயற்கைக்கு மாறும் விவசாயிகளுக்கு, அரசு குறிப்பிட்ட காலம் வரை மானியம் கொடுத்தால், அதிகமானவங்க இயற்கைப் பக்கம் திரும்பு வாங்க’’ என்று ஆலோசனை தந்தனர்.

தொடர்ந்தவர்கள், "களப் பயிற்சியில் மீன் அமினோ அமிலம், பஞ்சகவ்யா தயாரிக்கறதுனு நிறைய விஷயங்களைக் கத்துக்க முடிஞ்சுது. மொத்தத்துல கொஞ்சமாவது விவசாயம் பண்ணணும், அதுவும் முழுக்க இயற்கையில் பண்ணணும்னு தோணுது. நாலு பேருக்காக இல்லைனாலும், நம்ம ஆரோக்கியத்துக்காகவாவது இயற்கை விவசாயம் செய்யுங்க மக்களே"என்றனர் கூட்டாக.

வாழ்க, இளைய தலைமுறையினர்!

 

 

 

 

 

 

இயற்கை விவசாயிகளுக்கு மானியம் கொடுக்க வேண்டும் !
இயற்கை விவசாயிகளுக்கு மானியம் கொடுக்க வேண்டும் !
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு