Published:Updated:

உலர் களம் அமைக்க உதவி !

உலர் களம் அமைக்க உதவி !

பிரீமியம் ஸ்டோரி
உலர் களம் அமைக்க உதவி !
வழிகாட்டி
ஆறுசாமி
உலர் களம் அமைக்க உதவி!
உலர் களம் அமைக்க உதவி !
உலர் களம் அமைக்க உதவி !

வாசனைப் பொருட்களை முறையாகப் பக்குவப்படுத்தி, பதப்படுத்தி விற்பனை செய்ய வேண்டும். இந்தப் பொருட்களை பாதிக்கக் கூடிய கிருமிகள், சூரிய ஒளியில் வாசனைப் பொருட்களை உலர வைக்கும்போது அழிந்துவிடும். குறிப்பாக... மிளகாய், மஞ்சள், மிளகு... போன்ற வாசனைப் பொருட்களை நன்றாக உலர்த்தி வைக்க வேண்டும்.

பயிர் செய்வதற்கு கொடுக்கும் அளவுக்கு, பதப்படுத்துதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்தப் பொருட்களை உலர்த்துவதற்கு சிமென்ட் மூலம் கட்டப்பட்ட களம் அவசியம். இதை அமைக்க வாசனைப் பொருட்கள் வாரியம் மானியம் வழங்குகிறது. அதிகபட்சமாக நான்கு ஹெக்டேர் அளவுக்கு நிலம் வைத்துள்ள விவசாயிகள் மட்டும் இதன் மூலம் பயன் பெற முடியும்.

இந்த மானியம் நான்கு வகையாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அதாவது, தாழ்த்தப்பட்டப் பிரிவு விவசாயிகளுக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.300; மற்ற பிரிவு விவசாயிகளுக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.150; மலைவாழ் விவசாயிகளுக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.540 என மானியம் வழங்கப்படுகிறது. நான்காவது பிரிவாக சமுதாய உலர் களம் அமைப்பவர்களுக்கு மானியம் கொடுக்கப்படுகிறது. தொண்டு நிறுவனம், விவசாயச் சங்கங்கள், சுய உதவிக்குழுக்கள் போன்றவை... இத்தகைய சமுதாய உலர் களம் அமைக்க மானியம் பெறலாம். இதற்கான செலவில் 50 சதவிகிதம் மானியமாக வழங்கப்படுகிறது.

இதுதவிர, சிறு, குறு விவசாயிகளும் வாசனைப் பொருட்களை உலர்த்த வாரியம் உதவி செய்கிறது. சிறிய அளவுக்கு நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு சிமென்ட் உலர் களம் அமைக்க இட வசதி இருக்காது. இந்தச் சூழ்நிலையில் உள்ள விவசாயிகள் பாலிதீன் அல்லது சில்பாலின் ஷீட்டை விரித்து, விளைபொருட்களை உலர்த்தலாம். மலைவாழ் விவசாயிகள் பாலிதீன் அல்லது சில்பாலின் ஷீட்டை வாங்கும்போது, மொத்தச் செலவில் 50% மானியமாக வழங்கப்படுகிறது. இதர பிரிவினர்களுக்கு 33% மானியம் வழங்குகிறார்கள். இந்த பாலிதீன், சில்பாலின் ஷீட்டை வாரியம் வழிகாட்டும் நிறுவனத்திடம் இருந்துதான் வாங்க வேண்டும்.

தொடர்புக்கு

Spices Board, Sugandha Bhavan N.H.ByPass, Palarivattom.P.O, Cochin 682025, Kerala. web http//www.indianspices.com.
Phone 04842333610 -16

- தொடர்ந்து சந்திப்போம்

உலர் களம் அமைக்க உதவி !
உலர் களம் அமைக்க உதவி !
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு