பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா
தண்டோரா
பசுமைக்குழு
இலவசப் பயிற்சிகள்
தண்டோரா

அன்னாசி சாகுபடி!

தண்டோரா

நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில் அக்டோபர் 14-ம் தேதி கறவை மாடுகளில் நோய் தடுப்பு முறைகள், 19-ம் தேதி அன்னாசி சாகுபடி, 21-ம் தேதி நாட்டுக்கோழியில் வெள்ளைக் கழிச்சல் மற்றும் அம்மை கட்டுப்பாடு, 26-ம் தேதி வெண்பன்றி வளர்ப்பு, 28-ம் வண்ண மீன் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பங்கு பெற கட்டணம் கிடையாது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், நாமக்கல்-637 002. தொலைபேசி 04286-266345, 266244.

லாபகரமான நாட்டுக் கோழி!

சேலம், கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அக்டோபர் 20-ம் தேதி வருமானம் தரும் வெள்ளாடு ; 27-ம் தேதி லாபகரமான நாட்டுக் கோழி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. இதில் பண்ணை அமைக்க பல விதத் தொழில்நுட்பங்கள் குறித்து விஞ்ஞானிகள் விவரிக்க உள்ளனர். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், 5/136, ஸ்டேட் பாங்க் ஆபீஸர்ஸ் காலனி-2, சேலம்- 636 004. தொலைபேசி 0427-2440408.

நன்னீர் இறால்!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் அக்டோபர் 21-ம் தேதி நன்னீர் இறால் வளர்ப்பு, 22-ம் தேதி கால்நடைகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் தொற்றுநோய்கள் தடுப்பு முறை குறித்த பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சியின் போது மதிய உணவு, காலை-மாலை தேநீர் வழங்கப்படும். கட்டணம் கிடையாது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், குன்றக்குடி, சிவகங்கை-630 206. தொலைபேசி 04577-264288.

பனை வளர்க்கலாம், வாங்க!

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம், (செல்வபுரம்) நோவா ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் அக்டோபர் 13-ம் தேதி ‘பனை வளர்க்கலாம், வாங்க!' எனும் கருத்தரங்கு நடைபெற உள்ளது. பனை மரத்தின் பயன்கள், மழை ஈர்ப்பில் பனையின் பங்கு... போன்றவை குறித்து விவாதிக்கப்படும். இயற்கை வேளாண் வல்லுநர் ‘சட்டையில்லா' சாமியப்பன் நிகழ்ச்சியை வழி நடத்துவார். தேநீர், மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு அவசியம். ஏற்பாடு இயற்கைச் சூழல் பாதுகாப்பு இயக்கம். அலைபேசி 94872-23890, 95788-10709.

பசுந்தீவன உற்பத்தி!

தண்டோரா

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் அக்டோபர் 14-15 தேதிகளில் நன்னீர் மீன் வளர்ப்பு, 19-20 தேதிகளில் மழைக்காலத்தில் தானியப் பாதுகாப்பு, 21-22 தேதிகளில் புறக்கடைக் கோழி வளர்ப்பு, 22-ம் தேதி பண்ணைக் கருவிகள், 26-ம் தேதி ஊறுகாய் தயாரித்தல், 27-ம் தேதி பசுந்தீவன உற்பத்தி, 29-ம் தேதி பயறு வகை சாகுபடி மற்றும் களர்-உவர் நில மேம்பாடு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காட்டாங்குளத்தூர்-அஞ்சல்,

காஞ்சிபுரம்-603 203. தொலைபேசி 044-27452371.

கட்டணப் பயிற்சி!

இயற்கை வேளாண்மை!

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அத்திவெட்டியில் அக்டோபர் 29-ம் தேதி இயற்கை வேளாண்மை மற்றும் இயற்கை மருத்துவக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு நம்மாழ்வார் தலைமை வகிக்கிறார். நுழைவுக் கட்டணமாக ரூ.100/ மட்டும். தேநீர், மதிய உணவு, கையேடு வழங்கப்படும். 100 நபர்களுக்கு மட்டும் அனுமதி. ஏற்பாடு கே.கே.ஆர் வாழ்வியல் மையம் மற்றும் வானகம்.

தொடர்புக்கு அலைபேசி 94421-21473, 94431-20364.

தண்டோரா
தண்டோரா
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு