பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

காய்கறிப் பயிர்ல வெள்ளை ஈ, இலைப்பேன் மாதிரியானப் பூச்சிக தாக்குனா 100 மில்லி மாட்டுச் சிறுநீரையும் 200 மில்லி புகையிலைச் சாறையும் 10 லிட்டர் தண்ணியில கலந்து அதோட 100 மில்லி காதி சோப்புக் கரைசலையும் கலந்து தெளிச்சா எந்தப் பூச்சியும் அங்க எட்டிக்கூடப் பாக்காது. இந்தக் கரைசல் செடியில ஒட்டிக்கிறதுக்காகத்தான் காதி சோப்புக் கரைசலைச் சேக்குறோம்.


உளுந்து மாதிரியான பயறுகளுக்கு சாம்பல் நோய் வரும். 10 லிட்டர் தண்ணியில 300 மில்லி வேப்பெண்ணெய், 100 மில்லி காதி சோப்புக் கரைசல் ரெண்டையும் கலந்து அடிச்சா நோய் சரியாகிடும்.


புகையிலையை மனுஷன் பயன்படுத்தினா உயிருக்குக் கேடு. அதே புகையிலையை வெச்சே பயிரைத் தாக்குற பூச்சிகளுக்கு வேட்டு வெக்கவும் முடியும். புகையிலைல இருக்கிற 'நிகோடின்'ங்கிற பொருள் பூச்சிக்களைக் கொல்லக்கூடிய தொடு நஞ்சா வேலை செய்யுதுனு கண்டுபிடிச்சிருக்காங்க. 300 கிராம் புகையிலையை, ஒரு லிட்டர் தண்ணியில கலந்து, ஒரு கொதி கொதிக்க வையுங்க. காலையில இந்தக் கரைசலோட, 10 லிட்டர் தண்ணியில ஊத்தி 100 மில்லி காதி சோப்புக் கரைசலைச் சேத்துத் தெளிச்சா எல்லாப் பூச்சிகளும் ஓடிப்போயிடும்.


அசுவணி, கம்பளிப் புழுத் தாக்குதல் வந்தா கவலையேப்படாதீங்க. இருக்கவே இருக்கு, மஞ்சள் கரைசல். 100 கிராம் மஞ்சள் கிழங்கை அரைச்சி, 100 மில்லி மாட்டுச்சிறுநீர்ல ராத்திரி முழுக்க ஊற வையுங்க. காலையில பொழுது விடிஞ்சதும், இந்தக் கரைசலோட
10 லிட்டர் தண்ணி கலந்து வழக்கம் போல 100 மில்லி காதி சோப்புக் கரைசலைக் கலந்து தெளிங்க. எல்லாம் ஓடிப்போயிடும்.


உங்க வயலுக்குப் பக்கத்துல கிடைக்கிற பொருட்களைப் பயன்படுத்தியே பூச்சிக்கொல்லியும், பூச்சிவிரட்டியும் தயாரிச்சுக்க முடியும். அது எப்படினு இந்த தடவ சொல்லப் போறேன் கேட்டுக்குங்க.

எந்தப் பயிரா இருந்தாலும், பாக்டீரியா மற்றும் பூஞ்சண நோய் வந்துச்சுன்னா பப்பாளி இலைதான் கண்கண்ட மருந்து. அரை லிட்டர் பப்பாளி இலைச்சாறை பத்து லிட்டர் தண்ணியில கலந்து, இதோட 100 மில்லி காதி சோப்புக் கரைசலைக் கலந்து தெளிச்சா நோய் விலகிடும்.


 

 

 

 

 

 

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு