Published:Updated:

அள்ளிக் கொடுக்கும் 'ஆலவயல்' கத்திரிக்காய் ..!

அள்ளிக் கொடுக்கும் 'ஆலவயல்' கத்திரிக்காய் ..!

அள்ளிக் கொடுக்கும் 'ஆலவயல்' கத்திரிக்காய் ..!

அள்ளிக் கொடுக்கும் 'ஆலவயல்' கத்திரிக்காய் ..!

Published:Updated:
அள்ளிக் கொடுக்கும் 'ஆலவயல்' கத்திரிக்காய் ..!
மகசூல்
காசி.வேம்பையன்

40 சென்டில் ரூ.75 ஆயிரம்....
அள்ளிக் கொடுக்கும் 'ஆலவயல்' கத்திரிக்காய்... !

அள்ளிக் கொடுக்கும் 'ஆலவயல்' கத்திரிக்காய் ..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாட்டுக் கத்திரிக்கு நல்ல மவுசு

பளிச்... பளிச்...

ஆடி பட்டத்துக்கு, ஏற்றது.
இயற்கைக்கு, கூடுதல் விலை.

சாம்பார், புளிக்குழம்பு, குருமா, கறிக்குழம்பு, கருவாட்டுக் குழம்பு... என எதுவாக இருந்தாலும், அதற்குக் கூடுதல் சுவை ஊட்டுவது கத்திரிக்காய்தான். அதிலும் நாட்டுக் கத்திரிக்காய் என்றால், சொல்ல வேண்டியதே இல்லை. அதனால் நாட்டுக் கத்திரிக்காய்க்கு எப்போதுமே சந்தையில் தனி கிராக்கி இருந்து கொண்டே இருக்கும். பெரும்பாலான காய்கறி விவசாயிகள், புழு, பூச்சி என பல பண்டுதம் பார்க்க வேண்டி இருந்தாலும், கத்திரிக்காயை ஒதுக்காமலிருப்பதற்கு காரணமும் அந்த சந்தை வாய்ப்புதான். அவர்களில் ஒருவராக.. புதுக்கோட்டை மாவட்டம், மலையாண்டிபுரம், நடேசன்... 'ஆலவயல்' என்ற பெயரில் அழைக்கப்படும் நாட்டுக் கத்திரிக்காயைத் தொடர்ந்து தன்னுடைய வயலில் சாகுபடி செய்து வருகிறார்.

அள்ளிக் கொடுக்கும் 'ஆலவயல்' கத்திரிக்காய் ..!

பிஞ்சும், காய்களுமாகத் தொங்கிக் கொண்டிருந்த கத்திரி வயலுக்குத் தண்ணீர் கட்டிக் கொண்டிருந்த நடேசனைச் சந்திதோம்.

''மழைக்குக்கூட பள்ளிக்கூடத்துப் பக்கம் ஒதுங்கினதில்ல. சின்னப்பிள்ளையில இருந்தே விவசாயம்தான். எங்க அப்பாவோட சேர்ந்து வயல்ல இறங்கி விவசாயத்தைக் கத்துக்கிட்டேன். இப்போ, எனக்கு சொந்தமா ரெண்டு கிணறோட நாலரை ஏக்கர் நிலமிருக்கு. மணல் கலந்த கரிசல் மண்தான். அதுல கொஞ்சத்துல மா, பலா இதெல்லாம் இருக்கு. மீதியில செண்டுமல்லி, மல்லிகை, நெல், கடலை, காய்கறினு மாத்தி மாத்தி சாகுபடி செஞ்சுகிட்டிருக்கேன்.

ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயந்தான் செஞ்சுகிட்டிருந்தேன். மூணு வருஷத்துக்கு முன்ன என் மனைவி அங்கம்மா, சுய உதவிக்குழு மூலமா இயற்கை விவசாயத்தைக் கத்துக்கிட்டாங்க. அதை எங்க நிலத்துல சோதனை செஞ்சு பாத்தோம். ஓரளவுக்கு நல்லாவே வந்துச்சு. கணக்குப் பாக்குறப்போ உரம், பூச்சி மருந்துக்காக வருஷத்துக்கு நான் செலவு பண்ற பத்தாயிரம் ரூபா மிச்சமாகும்னு தோணுச்சு. அப்ப இருந்தே முழு இயற்கைக்கு மாறிட்டேன். அதே மாதிரியே செலவும் குறைஞ்சுடுச்சு.

இயற்கை விவசாயம்கிறதால நாட்டுக் காய்கறிகளையே சாகுபடி பண்ணலாம்னு ஆசைப்பட்டேன். எங்க பகுதியில ஆலவயல் கத்திரிக்காய் ரொம்ப பிரபலம். ஆலவயல்ங்கற ஊர்பக்கம் இந்தக் கத்திரிக்காயை அதிகமா விவசாயம் பண்றதால, அதுக்கு அந்தப் பேர். அதையே நானும் பயிர் பண்ணுனேன். விளைச்சல் பிரமாதமா இருந்துச்சு. ஆலவயல் கத்திரிக்கா சாதாரணமாவே நல்ல ருசியோட இருக்கும். நான் இயற்கை முறையில விவசாயம் பண்றதால கூடுதல் ருசி கிடைக்குது. அதுவே கூடுதல் விலையையும் கொண்டு வருது. உழவர் சந்தையிலதான் கத்திரியை வித்துக்கிட்டு இருக்கேன். மத்தக் கத்திரிக்காய்களைவிட இதுக்கு கூடுதலா அஞ்சு ரூபாய் விலை வெச்சுக் கொடுக்குறாங்க'' என்று முன்னுரை கொடுத்தவர், 40 சென்ட் நிலத்துக்கான கத்திரி சாகுபடிப் பாடத்தை ஆரம்பித்தார்.

ஆடிப் பட்டம் தேடி விதை!

அள்ளிக் கொடுக்கும் 'ஆலவயல்' கத்திரிக்காய் ..!

ஆலவயல் கத்திரிக்காயை வருஷம் முழுவதும் சாகுபடி செய்யலாம். குறிப்பாக ஆடிப் பட்டத்தில் செய்யும்போது விளைச்சலும் நன்றாக இருக்கும். நல்ல விலையும் கிடைக்கும். களிமண் தவிர, மற்ற எல்லா வகையான மண்ணிலும் வரும். விதைப்பைவிட நாற்று நடவு செய்யும்போது பயிர் நன்றாக வரும். நன்றாக முற்றிப் பழுத்த காய்களில் இருந்து விதைகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும்.

40 சென்ட் நிலத்துக்கு நாற்று தயாரிக்க, அரை சென்ட் நிலத்தைக் கொத்திக் களை நீக்கி, இரண்டு கூடை எருவைக் கொட்டிக் கிளறி சமப்படுத்த வேண்டும். கால் கிலோ கத்திரி விதையைத் தூவி, மண்ணால் மூடி அதன் மேல் வாழைச் சருகு அல்லது தென்னை மட்டையால் மூடிவிட வேண்டும். தினம் பூவாளியால் தண்ணீர் தெளித்து வந்தால், 8-ம் நாள் முளைத்து வரும். அதன்பின் மட்டைகளை நீக்கிவிட வேண்டும். தொடர்ந்து தண்ணீரை மட்டும் தெளித்து வந்தால் போதும். 10-ம் நாள் 300 மில்லி பஞ்சகவ்யாவை 1 டேங்க் (16 லிட்டர்) தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 30-ம் நாளில் நாற்று தயாராகி விடும்.

40 சென்டில் 2,500 செடிகள்!

அதற்கு முன்னரே நிலத்தைத் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏர் மூலமாக குறுக்கு நெடுக்காக ஐந்து சால் உழவு செய்ய வேண்டும். டிராக்டர் என்றால், இரண்டு சால் உழவு போதுமானது. பின் ஒன்றரை அடி இடைவெளிவிட்டு ஒரு அடி அகலத்தில் நீள நீளமாக பார் பிடிக்க வேண்டும். பாருக்கு குறுக்காக பத்தடிக்கு ஒரு வாய்க்கால் இருப்பது போல அமைத்துக் கொள்ள வேண்டும். நாற்று தயாரான உடன் நிலத்தில் தண்ணீர் கட்டி, பாரின் ஒரு பக்கத்தில் ஒன்றரை அடிக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும். 40 சென்டில் 2,500 செடிகள் வரை நடலாம். செடி காயாத அளவுக்குத் தொடர்ந்து வாரம் ஒரு தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.

பஞ்சகவ்யா மட்டுமே போதும்!

அள்ளிக் கொடுக்கும் 'ஆலவயல்' கத்திரிக்காய் ..!

600 கிலோ மண்புழு உரம், 20 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். இந்த உரத்தை, 15\ம் நாளில் முதல் களை எடுத்ததும், ஒவ்வொரு செடியின் தூருக்கு அருகிலும் நான்கு விரல் அளவு இடைவெளியில் ஒரு கையளவு வைக்க வேண்டும். பின் பாரைக் கலைத்து, கத்திரிச் செடி மையமாக இருப்பது போல மண்ணை அணைத்துவிட வேண்டும். 25-ம் நாளில் இருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை டேங்குக்கு (16 லிட்டர்) 300 மில்லி பஞ்சகவ்யா கலந்து தொடர்ந்து (அறுவடை முடியும் வரை) தெளித்து வர வேண்டும். 30, 45 மற்றும் 60-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். 55-ம் நாள் மீண்டும் ஒரு முறை 200 கிலோ மண்புழு உரம் 20 கிலோ வேப்பம் பிண்ணாக்கைக் கலந்து தூருக்குத் தூர் ஒரு கையளவு வைத்து வைத்து தண்ணீர் கட்ட வேண்டும்.

பயிரில் பூச்சித் தாக்குதல் தென்பட்டால், டேங்குக்கு ஒரு லிட்டர் கோமூத்திரம், இரண்டு லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும். 50\ம் நாளுக்கு மேல் பூவெடுத்து பிஞ்சு வைக்கும். 65-ம் நாளுக்கு மேல் காய் பறிப்புக்குத் தயாராகி விடும்.

ஒரு வருஷத்துக்கு மேலும் பறிப்பு!

அள்ளிக் கொடுக்கும் 'ஆலவயல்' கத்திரிக்காய் ..!

சாகுபடிப் பாடத்தை முடித்த நடேசன், வருமானம் பற்றிப் பேச ஆரம்பித்தார். ÔÔநாலு நாளைக்கு ஒரு பறிப்புனு தொடர்ந்து எட்டு மாசம் வரை காய் பறிக்கலாம். மேட்டுப் பகுதியாக இருந்தா, ஒரு வருஷத்துக்குப் பிறகும்கூட காய் பறிச்சுக்கிட்டே இருக்கலாம். ஆனா, ஏதும் நோய் வராம இருக்கணும். ஒரு பறிப்புக்கு 70 முதல் 80 கிலோ வரை காய் கிடைக்கும். 60 பறிப்புனு வெச்சுக்கிட்டாலே... சராசரியா 4,500 கிலோவுக்கு மேல காய் கிடைக்கும். ஒரு கிலோ 15 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரைக்கும் இப்ப விற்பனையாகுது.

நான் இதுவரைக்கும் 35 தடவை காய் பறிச்சுருக்கேன். இதுவரை 2,450 கிலோ கிடைச்சுருக்கு. அது மூலமா 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல வருமானம் கிடைச்சுருக்கு. என்னோட நிலம் மேட்டுப்பகுதியா இருக்கறதால இன்னும் நாப்பது தடவைக்கு மேல காய் பறிக்க முடியும். அதுல இன்னும் 2,800 கிலோவுக்கு மேல கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்'' என்றார் உற்சாகத்துடன்.


படங்கள் கே. குணசீலன்
தொடர்புக்கு நடேசன்,
அலைபேசி 96003-90737

மல்லிகைக்கும் இயற்கைதான்...

அள்ளிக் கொடுக்கும் 'ஆலவயல்' கத்திரிக்காய் ..!

நடேசன் இயற்கை முறையில் வெண்டை மற்றும் மல்லிகை ஆகியவற்றையும் சாகுபடி செய்து வருகிறார். அது பற்றிப் பேசிய நடேசனின் மனைவி அங்கம்மாள், ‘‘மல்லிகைப் பூதான் எங்களோட அன்னாட செலவை ஈடுகட்டுது. வருஷத்துக்கு 9 மாசம் பூ கிடைக்கும். அதுக்குப் பெரிசா பராமரிப்பெல்லாம் செய்றதில்லை. பஞ்சகவ்யா தெளிக்கிறது, வேப்பம் பிண்ணாக்கு, மண்புழு உரத்தைக் கலந்து வைக்கிறது இது மட்டும்தான். 16 சென்டுல இருக்குற மல்லிகைப் பூவிலேயே வருஷத்துக்கு ஒரு லட்சம் வரைக்கும் கிடைச்சுடும். அதே மாதிரிதான் வெண்டை சாகுபடியும் பண்ணிக்கிட்டுருக்கோம். இயற்கையில செய்றதால அதிலயும் எங்களுக்கு நல்ல லாபம் கிடைக்குது" என்றார்.

அள்ளிக் கொடுக்கும் 'ஆலவயல்' கத்திரிக்காய் ..!
அள்ளிக் கொடுக்கும் 'ஆலவயல்' கத்திரிக்காய் ..!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism