Published:Updated:

மர(ண) சாசனம் !

மர(ண) சாசனம் !

மர(ண) சாசனம் !

மர(ண) சாசனம் !

Published:Updated:
மர(ண) சாசனம் !
மர(ண) சாசனம்
மர(ண) சாசனம் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மர(ண) சாசனம் !

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

'மனித இனம், இன்னும் 100 ஆண்டுகளுக்குள் முடிவுக்கு வரப்போகிறது. பூமியில் மனித இனம் பூண்டோடு அழிந்துவிடும்!’

-இப்படி ஓர் அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளார் ஆஸ்திரேலிய நாட்டு விஞ்ஞானி ஃபிராங்க் ஃபென்னர். பல ஆண்டுகளுக்கு முன்பு, உலகை உருட்டி மிரட்டி, ஏகப்பட்ட உயிர்களை பலி வாங்கிய 'பெரியம்மை' நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதில் முக்கிய பங்காற்றிய விஞ்ஞானி-தான் இவர்.

'அட, இப்படித்தான்... 2,000-ம் வருஷத்ததுல பூமி அழியப் போகுதுனு கிளப்பி விட்டாங்க. ஆனா, இன்னும்கூட கல்லு மாதிரிதானே கிடக்குது இந்த பூமி' என்று சிலர் சொல்லலாம்.

அன்றைக்கு அப்படிச் சொல்லப்பட்டதற்கான அடிப்படை என்னவென்று யாரும் தெளிவுப்படுத்த-வில்லை. ஆனால், இன்றைக்கு இயற்கையே வாய் திறந்து பேச ஆரம்பித்துவிட்டது.

ஆம், கொளுத்தும் கோடையிலும், அடைமழை அடிப்பது; அடைமழைக் காலத்திலும் கத்திரிவெயில் கொளுத்துவது; திடீர் திடீர் என்று பூமி குலுங்குவது என்று ஒட்டுமொத்தக் காலநிலையும் தாறுமாறாகக் குழம்பிக் கிடப்பது ஒன்றே போதும்... 'என்னவோ நடக்குது' என்பதை உணர்ந்து கொள்ள!

'எந்த ஒரு வினைக்கும், எதிர் வினை உண்டு' என்று நியூட்டனின் விதி பேசும் விஞ்ஞானிகள், இயற்கைக்கு எதிராக நாம் செய்துகொண்டிருக்கும் எண்ணற்றச் செயல்களுக்கு மட்டும் அதைப் பொருத்திப் பார்க்க மறந்துபோனது ஏனோ?

இதோ... சென்னை ஓவியக் கல்லூரியில் படித்து வந்த 26 வயது சசிகுமார், அறுபதடி உயர மரத்தில் தூக்குப்போட்டுக் கொண்டு இறந்து போயிருக்கிறான்... அரசாங்கத்தையும் மக்களையும் மரங்களை வளர்க்கச் சொல்லவிட்டு!

'இந்த உலகில் சந்ததிகளை மட்டும் விட்டுச் செல்லாதீர். கூடவே, அவர்களுக்கான சந்தோஷங்களையும் நம்பிக்கைகளையும் விட்டுச்செல்லுங்கள்' என்று கதறுகிறது அவனுடைய பாக்கெட்டில் இருந்த பத்து பக்கக் கடிதம்!

அந்த இளைஞனின் மரணத்தில் வெவ்வேறு அரசியல் சொல்லப்பட்டாலும், அந்தக் கடிதத்திலிருக்கும் கருத்துக்கள்... நிகழ்கால, வருங்கால சமுதாயத்துக்கான மர(ண)சாசனம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது!

'மனித இனம் இல்லாமலே போய்விடும்' என்பதற்கு ஆஸ்திரேலிய விஞ்ஞானி சொல்லியிருக்கும் காரணமும்... 'சுற்றுச்சூழல் கேடுகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன' என்பதுதான்.

நேசத்துடன்
பா.சீனிவாசன்
ஆசிரியர்.

மர(ண) சாசனம் !
மர(ண) சாசனம் !
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism