இந்நிலையில், செம்மொழி மாநாட்டுக்கான நாள் நெருங்கிக் கொண்டே இருக்க, அந்த அமைப்பின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்த போலீஸார், பலவிதமான நடவடிக்கைகள் மூலம், அவர்களை அமைதிப்படுத்த முயன்றனர். ஆனால், அதெல்லாம் வெற்றியளிக்கவில்லை. மாறாக, 'சங்க கால மன்னன் அதியமானே, ஒளவைக்கு கள் கொடுத்திருக்கிறார். செம்மொழி மாநாடு நடத்தும் தமிழக அரசே கள் விற்பனைக்கு அனுமதி கொடு' என்றெல்லாம் தட்டி விளம்பரங்களை எழுதி ஆங்காங்கே வைத்தனர்.
அதேசமயம், எப்பாடுபட்டாவது போராட்டத்தைத் தடுத்தே தீருவது என்று தீர்மானித்து, அதற்கான வேலைகளைத் தீவிரமாக செய்ய ஆரம்பித்தது போலீஸ். இதற்காக கள் இயக்கத் தலைவர்களிடம் பல மாதிரி பேச்சுவார்த்தை நடத்தியது. 'நாங்களே விவசாயக் குடும்பம்தான். எங்களுக்கும் கள் விற்பனை செய்றது தப்பில்லைனுதான் தோணுது. ஆனாலும் அதுக்கு இது இடமில்லை' என்றெல்லாம் பேசிப்பார்த்தனர் போலீஸார். ஆனாலும் அசையவில்லை அமைப்பினர்.
பிறகு, மேற்கு மண்டலக் காவல்துறை டி.ஐ.ஜி-யான சிவனாண்டி உள்ளிட்ட உயர் அதிகாரிகள், கள் இயக்கத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்த... அதன் முடிவில், மாநாட்டுக்காக கோயம்புத்தூர் வந்த முதல்வர் கருணாநிதியுடன் கள் இயக்கத் |