பொறிவண்டுக்கு மொத்தம் மூணு பருவம் இருக்கு. 3 முதல் 5 நாளைக்குள்ள முட்டையிலிருந்து பொறிவண்டு புழுவா வெளியே வரும். இதுதான் முதல் பருவம். இந்த பருவத்துல, கருப்பு நிறத்துல முதலை மாதிரியான வடிவத்துல அலைஞ்சிகிட்டிருக்கும். இந்த இளம் புழுக்களால அசுவிணியோட உடம்பைச் சாப்பிட முடியாது, அதனால அதோட உடம்பைத் துளைச்சு, சாறை மட்டும் உறிஞ்சிக் குடிக்கும். கொஞ்சம் வளர்ந்த பிறகு, அசுவிணியை மென்னு சாப்பிடும். இளம்புழுக்கள், கூட்டுப்புழுக்களா மாறுறதுக்கு 10 முதல் 15 நாள் வரைக்கும் ஆகும். அதுக்குள்ள 300 அசுவிணியை காலி பண்ணிடும். 15 நாளைக்கு பிறகு புழு, கூட்டுப்புழுவா மாறிடும். இந்தப் பருவத்துல அச்சு அசலா தாய் அந்துப்பூச்சி மாதிரியே உருவம் இருக்கும். ஆனா... கால், றெக்கை, உணர்கொம்புகள் இதெல்லாம் இருக்காது. கூட்டுப்புழு தன்னோட பின்பக்கத்தை இலையில ஒட்டிக்கிட்டு தொங்கிட்டு நிக்கும். 7 முதல் 10 நாளைக்குள்ள கூட்டுப்புழு பருவம், முடிஞ்சி தாய் அந்துப்பூச்சியா மாறிடும்.
ஒரு வயல்ல அசுவிணி வெள்ளை ஈ, செதில்பூச்சி, மாவுப்பூச்சிக எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமா இருக்கோ, அதுக்கு ஏத்த மாதிரி பொறிவண்டுகளோட எண்ணிக்கையும் அதிகமாகும். 500 வகைக்கும் மேலான பொறிவண்டுக உலகம் பூராவும் இருக்கு. அசுவிணியைப் புடிச்சி சாப்பிடுற பொறிவண்டுக்கு பேரு காக்சிநெல்லா (coccinella). இது இந்தியாவுல அதிகமாவே இருக்கு. செதில் பூச்சிகளை சாப்பிட்டு வாழுற ச்சிலோகோரஸ் (chilocorus பொறிவண்டு, கொய்யாவிலிருந்து ஆப்பிள் வரைக்கும் பழ மரங்கள்ல இருக்கற செதில் பூச்சிகளைப் புடிச்சு அழிக்குது. மாவுப் பூச்சியைப் புடிச்சி திங்குற கிரிப்டோலமஸ் (cryptolaemus)பொறிவண்டு, மத்த வகையிலிருந்து கொஞ்சம் வித்தியாசமானது. இதோட புழுக்கள் மாவுப்பூச்சி மாதிரியே இருக்கும். மாவுப்பூச்சியோட உடம்புல ஒரு மெழுகுப்பூச்சு இருக்கும். அந்த வாசனையை மோப்பம் பிடிச்சிகிட்டே மாவுப்பூச்சி இருக்குற இடத்துக்கு இதுங்க போயிடும். 'சரி, நம்மாளுதான் போல'னு மாவுப்பூச்சியும் கண்டுக்காது. அதுதான் கிரிப்டோலமஸ§க்கு வசதியாப் போயிடுது. மாவுப்பூச்சிக் கூட்டத்துக்குள்ள புகுந்து, கொஞ்ச நாள்ல மொத்தத்தையும் காலிபண்ணிடும்.
ஒரு பயிரிலிருந்து அடுத்தப் பயிருக்கான இடைப்பட்ட காலத்துல வயல்ல பயிர் இருக்காது, அதனால தீமை செய்ற பூச்சிகளும் இருக்காது. நன்மை செய்ற பூச்சிகளுக்கும் அது கஷ்ட காலம்தான். ஆனா, அதையும் கூட திறமையா சமாளிக்கறதுல கில்லாடிங்கதான் பொறிவண்டுகளோட தாய் அந்துப்பூச்சிக. அந்த மாதிரி நேரங்கள்ல, மலர்கள்ல இருக்கற மகரந்ததை சாப்பிட்டு, அடுத்தப் பயிர் காலம் வரைக்கும் காத்திருக்கும்.
இதைப் படிச்சதுமே, பொறிவண்டுனாலே நன்மைதான் செய்யும்னு முடிவுக்கு வந்துடாதீங்க. 'வெளுத்ததெல்லாம் பால் இல்லை'ங்கிற பழமொழி, பொறிவண்டுக்கும் பொருந்தும். அதிலயே வில்லன்களும் உண்டு!
- பூச்சி பறக்கும்
எறும்புகள் வளர்க்கும் பசுமாடு!
|
|