500 கிலோ மகசூல்தான் எடுக்க முடியும். ஆனால், கனடா நாட்டு விதைகளின் மூலம் 1,500 கிலோ மகசூல் எடுக்க முடியும்" என்று அதிசய தகவலைச் சொன்ன அமைச்சர்,
"இந்த ஆண்டிலிருந்து மூன்று வருட படிப்பாக பண்ணைத் தொழில்நுட்பக் கல்வி என்ற படிப்பு, தொலைதூரக் கல்வி மூலம் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் கல்லூரிகளில் துவங்க உள்ளன. பத்தாம் வகுப்பு தேறியவர்கள், தவறியவர்கள் இதில் சேர்ந்து படிக்கலாம். பல்கலைக்கழகத்தில் உள்ள 'ராமையா தாவர மரபு வங்கி'யில் பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 23,613 நெல் ரகங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன’’ என்று பெருமையோடு குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக... நாமக்கல்-அல்லி முத்து (மாவில் ஒட்டுக்கன்று), சேலம்- தர்மலிங்கம் (நெல் உற்பத்தி), புதுக்கோட்டை-ராமசாமி (நேரடி நெல் விதைப்புக் கருவி), மதுரை-ஜோஸ்பின் (தேனி வளர்ப்பு), கன்னியாகுமரி-மீனாட்சி சுந்தரம் (வாழை அடர் நடவு) ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான 'வேளாண் செம்மல் விருது' வழங்கப்பட்டது. அவற்றை வழங்கிய கையோடு, புதிய ரகங்களை அறிமுகப்படுத்தினார் அமைச்சர்.
இனி புதிய ரகங்களைப் பற்றிப் பார்ப்போம்...
புதிய பயிர் ரகங்கள் அணிவகுப்பு...
நெல்|கோ|50 (TNAU Rice co-50)
சிறப்பியல்புகள் மத்திய சன்ன அரிசி, நல்ல அரவைத்திறன், மித அமைலோஸ் மாவுப் பொருளைக் கொண்டி-ருப்பதால் சாதத்துக்கும், இட்லிக்கும் ஏற்றது, குலைநோய், இலை உறை அழுகல், பழுப்புப் புள்ளி நோய், பாக்டீரியா இலைக் கருகல், துங்ரோ ஆகிய நோய்களுக்கு மிதமான எதிர்ப்புச் சக்தி கொண்டது.
|