Published:Updated:

பசுமை மேடை

பசுமை மேடை

பசுமை மேடை

பசுமை மேடை

Published:Updated:
பசுமை மேடை
பசுமை மேடை
வாசகர்கள்
சந்தைத் தேவையை சந்திக்க விதை!
பசுமை மேடை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பசுமை மேடை

தமிழகம் விவசாயத்தைப் பொறுத்தவரை பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள், பழங்கள், பருத்தி என எல்லாவற்றிலுமே ஒரு பற்றாக்குறை மாநிலமாகவே இருந்து வருகிறது. உதாரணமாக, தமிழகத்தில் இயங்கி வரும் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட நூற்பாலைகளுக்கு ஓர் ஆண்டுக்குத் தேவைப்படும் பஞ்சின் அளவு, 95 லட்சம் பொதிகள். ஆனால், தமிழகத்தில் விளைவிக்கப்படுவதோ வெறும் 5 லட்சம் பொதிகள் மட்டுமே. இது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். சாத்துக்குடி, ஆரஞ்சு, மாதுளை, அன்னாசி என எல்லாமே வெளிமாநிலத்தில் இருந்துதான் வந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் இவைகளுக்கு அதிக சந்தை வாய்ப்பிருந்தும், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. நாமும் ஒரே பயிரை பயிர் செய்துகொண்டிராமல், சந்தை வாய்ப்புள்ள பயிர்களாகத் தேர்ந்தெடுத்து பயிரிடுவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் தற்சார்பு அடைவதற்கு அது பெரிதும் உதவியாக இருக்கும்!

-ஆர்.எம். சம்பத், சிவகங்கை.

பள்ளிப் பருவத்தே 'பயிர்' செய்யுங்கள்!

நான் இளங்கலை அறிவியல் பட்டதாரி. இயற்கை வழி விவசாயம் செய்கிறேன். என்னைப் போன்ற இளைஞர்கள் விவசாயத்துக்கு வருவது அரிதாகிக் கொண்டு இருக்கிறது. கேளிக்கைகளையும், சோம்பேறித்தனங்களையும் அரசே ஏற்படுத்திக் கொடுக்கும்போது, வேலை செய்யும் எண்ணம் எப்படி வரும்?

நவநாகரிகம் ஆட்டம் போடும் இந்தக் காலத்தில், கிராமத்தைவிட்டு, நகரங்களில் வேலை பார்க்கவே பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்த நிலை தொடர்வது தேசத்துக்கு எவ்வளவு பெரிய ஆபத்தைக் கொண்டு வரும் என்பதை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை.

இந்த நிலையைத் தவிர்க்க, படிக்கும்போதே பள்ளியில் மாதிரித் தோட்டம் போட்டு மாணவர்களை விவசாயத்தில் ஈடுபடுத்துவதுடன், விவசாயத்தை ஒரு பாடமாகவும் வைக்க வேண்டும். கல்வி மூலமாகத்தான் மாற்றத்தைக் கொண்டு வரமுடியும்.

100 நாள் வேலைத் திட்டம் சிலருக்கு பலமாக இருக்கலாம். ஆனால், விவசாயத்துக்குப் பாதகமாகத்தான் இருக்கிறது. இதில் அரசு மாற்றம் கொண்டு வரவேண்டும். அதேபோல, இயற்கை விவசாயத்தை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதும் அரசின் கடமையாகும். அதுதான் நீடித்து, நிலைத்து மனிதகுலத்துக்குத் தொடர்ந்து உணவளிக்கக் கூடிய ஒரே விவசாயமாக நிலைத்திருக்கும்.

-எஸ்.செந்தில்குமார், தஞ்சாவூர்

சந்தைத் தேவையை சந்திக்க விதை!.

இலவச உரம் மற்றும் விதைகள், மற்றும் மானிய விலையில் கிடைக்கும் உபகரணங்கள் பெறுவதற்கான தகுதிகள் என்னென்ன? இதைப் பெறுவதற்கு யார், யாரை அணுக வேண்டும்? எவ்வளவு நிலம் இருந்தால் இந்தச் சலுகைகள் கிடைக்கும்? மேற்படி விவரங்கள் எல்லாம், இன்னும்கூட பல விவசாயிகளுக்குத் தெரியவே இல்லை. இதனால் சில விவசாயிகள், அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் அமைப்புகளின் உதவியை நாடுகிறார்கள். அவர்களில் பலரும் விவசாயிகளுக்குத் தேவையான வழிகாட்டலைச் செய்யாமல், தாங்களே சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் விவசாயிகளுக்காக உரிய ஆவணங்களைக் கொடுத்து மானியத் தொகையை வாங்கிக் கொடுக்கிறார்கள். அப்படி கொடுக்கும்போது, ரூ.500 மதிப்புள்ள ரசீதை நீட்டுகிறார்கள். அதைக் கட்டாயமாக விவசாயிகள் வாங்கி ஆக வேண்டும். இல்லையென்றால், அடுத்த முறை இதுபோன்ற அரசு சலுகைகளை பெற முடியாதபடி செய்து விடுகிறார்கள்.

இத்தகைய அவல நிலையைப் போக்க, எந்தெந்த காலங்களில், எந்தவிதமானப் பயிர்களுக்கு எவ்விதமான அரசு மானியங்கள் வழங்கப்படுகின்றன. அந்தப் பயன்களைப் பெறுவதற்கானத் தகுதிகள் என்னென்ன இதையெல்லாம், கிராமங்கள் தோறும் முக்கியமான இடங்களில் அரசு தெளிவாக எழுதி வைத்தால், சுரண்டல்காரர்களிடமிருந்து நாங்கள் தப்பிக்க முடியும். இதுநாள் வரை அரசு வழங்கும் சலுகைகளை அனுபவிக்காத விவசாயிகளும் பயன்பெறுவார்கள்.

பின்குறிப்பு பசுமை விகடனிலும் இந்தச் சலுகைகள் பற்றி விரிவான செய்திகளை வெளியிடுங்கள்.

-ஜி. துள்ளுகுட்டி, விருதுநகர்

இது வாசகர்களாகிய உங்களுடைய பக்கம்...

நீங்கள் வாள் வீசுவதற்கான களம் மட்டுமல்ல... சாமரம் வீசுவதற்கான களமும் கூட!

ஆம்... கெட்டதை அழிப்பதற்காக வாளைத் தூக்கும் அதேநேரம்... நல்லதை பாராட்ட சாமரத்தையும் நீங்கள் தூக்கலாம்.

விவசாயத்தில் நீங்கள் கண்டறிந்து பயன்பெற்றது; கேட்டறிந்து பயன்பெற்றது; பார்த்தறிந்து பயன்பெற்றது என்று பலனுள்ள விஷயங்கள் எதுவாக இருந்தாலும்... அது மற்றவர்களுக்கு பயன்படும் எனில்... இங்கே நீங்கள் எழுதலாம்.

விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளோடு தொடர்பு கொள்ளும்போது... ஏதாவது பிரச்னை ஏற்படலாம். அது உங்கள் நெஞ்சைக் கொதிக்க வைக்கலாம். அந்தக் கோபத்தை இங்கே நீங்கள் இறக்கி வைக்கலாம்.

'இதை மட்டும் அரசாங்கம் செய்துட்டா... விவசாயத்துக்கும்... விவசாயிகளுக்கும் ரொம்பவும் பலனுள்ள விஷயமா இருக்கும்' என்று சமயங்களில் ஏதாவது நல்ல யோசனை தோன்றும். அதேசமயம், 'ம்... இதை யாருகிட்ட போய் சொல்றது?' என்று அது அப்படியே மறைந்தும் போய்விடும். அப்படியில்லாமல், தோன்றியவுடனேயே... இங்கே நீங்கள் பதிவு செய்யலாம்.

நீங்கள் எழுதும் விஷயங்கள் பிரசுரிக்கத் தகுதியானவையாக இருக்கவேண்டியது முக்கியம். விஷயத்தைத் தெளிவாக... கூடுமானவரையில் சுருக்கமாக எழுதி அனுப்புங்கள்.

பிரசுரமாகும் ஒவ்வொரு கடிதத்துக்கும் பயனுள்ள புத்தகம் சிறப்புப் பரிசாக வழங்கப்படும். உங்களின் முகவரி மற்றும் தொடர்பு எண்களை முழுமையாக எழுதத் தவறாதீர்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி
'பசுமை மேடை'
பசுமை விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை-2.

பசுமை மேடை
பசுமை மேடை
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism