தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய, ஒகனேக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீர் எடுக்கும் மையம், பம்பிங் ஸ்டேஷன் மற்றும் பைப் லைன் பணிகளுக்காக மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. இதுவரை சுமார் இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதில் சில மரங்கள் நூறாண்டு பழமை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி தாறுமாறாக மரங்கள் வெட்டப்படுவது... சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதுபற்றி நம்மிடம் பேசிய ‘சமூக பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் வளர்ச்சி மைய'த்தின் பொறுப்பாளரான சரவணன், "வளர்ச்சித் திட்டங்களுக்காக மரங்களை வெட்டுவது தவிர்க்க முடியாத காரியம்தான். ஆனால், 'வளர்ச்சிப் பணி என்ற பெயரில் ஒரு மரம் வெட்டப்பட்டால், அதற்குப் பதிலாக பத்து முதல் பதினைந்து மரங்களை உடனே நடவேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி அதிகாரிகள் கவலையேபடுவதில்லை என்பதுதான் வேதனை" என்றவர்,
|