Published:Updated:

காற்றுச் சுவர் தடுப்பு... நல்ல ம்கசூலுக்கு வாய்ப்பு !

காற்றுச் சுவர் தடுப்பு... நல்ல ம்கசூலுக்கு வாய்ப்பு !

காற்றுச் சுவர் தடுப்பு... நல்ல ம்கசூலுக்கு வாய்ப்பு !

காற்றுச் சுவர் தடுப்பு... நல்ல ம்கசூலுக்கு வாய்ப்பு !

Published:Updated:
காற்றுச் சுவர் தடுப்பு... நல்ல ம்கசூலுக்கு வாய்ப்பு !
ஆச்சர்யம்  
காற்றுச் சுவர் தடுப்பு... நல்ல மகசூலுக்கு வாய்ப்பு !
காற்றுச் சுவர் தடுப்பு... நல்ல ம்கசூலுக்கு வாய்ப்பு !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பளிச்... பளிச்...
உயிர்வேலியாக அமைகிறது.
சுத்தமானக் காற்று கிடைக்கிறது.
இயற்கை எரு கிடைக்கிறது.
காற்றுச் சுவர் தடுப்பு... நல்ல ம்கசூலுக்கு வாய்ப்பு !

ஜீரோ பட்ஜெட் வேளாண்மையின் நான்காவது சக்கரமான வாபாசம் பற்றிப் பார்த்தோம். அதில், தாவரங்கள் நீரை உறிஞ்சுவதில்லை, மாறாக நீராவி மூலக்கூறுகளைத்தான் உறிஞ்சுகின்றன என்றும் பார்த்தோம்.

90% அளவுக்குப் பாசனநீரை சேமிப்பதையும் தரிசு நிலங்களைப் பழத் தோட்டங்களாக மாற்றுவதையுமே ஜீரோ பட்ஜெட் விவசாயிகள் இலக்காகக் கொள்ள வேண்டும். தோட்டக்கலைப் பயிர்களைப் பாசனம் செய்து விளைவிக்கும்போது கிடைக்கும் விளைச்சலுக்கு ஈடான உற்பத்தியை, தரிசு நிலங்களிலிருந்தும் பெறமுடியும் என்பதால் விவசாயத்தில் நம்மால் செய்ய முடிந்தது அனைத்தையும் செய்து பார்ப்போம்.

மண்ணின் மேற்பரப்பில் 20 செ.மீ. உயரத்துக்கு தாள்மூடாக்கு அமைக்கும்போது நீர் ஆவியாவது தடுக்கப்பட்டு, ஏறத்தாழ 40% நீர் சேமிக்கப்படுகிறது. கூடவே, இரவு நேரங்களில் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி மண்ணுக்குக் கொடுக்கிறது இந்த மூடாக்கு. இதன் மூலம் 30% நீர் சேமிக்கப்படுகிறது. தாள்மூடாக்கின் மீது உயிர்மூடாக்கு விரிந்து படரும்போது அதன் மூலமாக தாள்மூடாக்கில் உள்ள ஈரப்பதம் காக்கப்பட்டு 20% அளவுக்கு நீர் மிச்சமாகும். ஆக, மொத்தம் 90 சதவிகிதம் மிச்சமாகிறது.

ஒரு தாவரத்தைச் சுற்றி இது போல மூடாக்கு அமைக்கும்போது, அந்தத் தாவரத்துக்குத் தேவையான நீரில் 90% மிச்சமாகிறது. கணக்குப் பார்த்தால், ஒரு ஏக்கருக்குத் தேவையான நீரை வைத்து பத்து ஏக்கரில் விவசாயம் செய்ய முடியும் என்பது புரியும். நம்மால் நீரை உருவாக்க முடியாது, ஆனால் நீரைச் சேமிக்க முடியும் என்பதை கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்பட ஆரம்பியுங்கள்.

காற்று... ஜாக்கிரதை..!

இலைகளில் உள்ள துளைகள் வழியாகக் காற்று மண்டலத்தோடு இணைப்பு ஏற்பட்டு, வாயு பரிமாற்றம் (கார்பன்-டை ஆக்ஸைடை உறிஞ்சுதல்) நடத்துகின்றன தாவரங்கள் என்று பார்த்தோம். இலைகளுக்கு மேல் அதிக வேகமில்லாமல் மெதுவாகக் காற்று சுழன்றால் மட்டும்தான் வாயு பரிமாற்றம் நடக்க முடியும். மண்ணில் இருந்து உறிஞ்சப்படும் நீராவி மூலக்கூறிலிருந்து, உணவு தயாரிப்பதற்குத் தேவையான அளவு நீரை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை உடனடியாக நீராவியாக வெளியேற்றி விடுகின்றன. அதாவது, வேர் உறிஞ்சும் நீரில் 5 சதவிகிதத்தை மட்டும்தான் செடிகள் பயன்படுத்துகின்றன. மீதி அனைத்தும் இலைகளால் வெளியேற்றப்பட்டு விடும்.

சிலசமயங்களில் பண்ணைக்குள் கடும் வெப்பக்காற்று வீசும்போது, இந்த நீராவி அதிகமாக வெளியேறி, தாவரங்களுக்கு நீர்ப்பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றது. அப்போது இலைகளின் வேண்டுதலின் பேரில் வேர்கள் மண்ணிலிருந்து அதிகளவில் நீராவி மூலக்கூறுகளை உறிஞ்சி இலைகளுக்கு அனுப்பும். அதனால் மண்ணில் ஈரப்பதம் குறைந்து தாவரத்தை வாட (காய) வைத்து விடும். தவிர, அளவுக்கு அதிகமான நீராவிப் போக்கால் மண்ணில் உவர்த்தன்மை கூடும். இதைத் தடுக்க வேண்டுமானால், வெப்பக்காற்று தாவரத்தை நேரடியாகத் தாக்குவதைத் தடுக்க வேண்டும்.

அதேபோல வேகமாக பண்ணைக்குள் காற்று வீசும்போதும் மரக்கிளைகள் உடைதல் போன்ற இழப்புகள் ஏற்படுகின்றன. தவிர, வேகமாக வீசும் காற்று நம் நிலத்தின் மேற்பகுதியில் உள்ள வளமையான மண்துகள்களையும் வாரி அள்ளிக்கொண்டு போய் விடும். இந்த மேல் மண் உருவாக ஆகும் காலம் எவ்வளவு தெரியுமா? சுமார் 500 ஆண்டுகள். இப்படி பண்பட்ட மண் காற்றால் அரிக்கப்படும்போது, கண்டிப்பாக பயிர் உற்பத்தி குறையும். சாதாரணமாக மணிக்கு எட்டு கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் காற்று வீச ஆரம்பித்தாலே தாவரங்களுக்குப் பிரச்னை ஆரம்பமாகி விடும். அதனால்தான் நம் பண்ணையின் எல்லையில் வேகமாக வீசும் காற்றைத் தடுத்து நிறுத்த வேண்டிய அல்லது கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

காற்றுத் தடுப்புச் சுவர் (வேலி)!

சுவர், வேலி என்றவுடன் கட்டுமானப் பொருட்களை வைத்து உருவாக்க வேண்டுமோ என்றெல்லாம் எண்ண வேண்டாம். இந்த வேலியையும் பசுந்தாவரங்களால்தான் அமைக்கப் போகிறோம். பல்வேறு மர வகைகள், குறும்புதர்கள், பல்வேறு அளவும் உயரமும் கொண்ட பல்வேறு பயன்பாடுகளுக்குத் தக்கபடியான தாவரங்களைப் பண்ணையின் மேற்கு, தெற்கு எல்லைகளில் வளர்க்க வேண்டும். வேகமாக வீசும் காற்று, பல அடுக்குகளில் உள்ள இந்தத் தாவரங்களில் மோதி வரும்போது வேகம் குறைந்து பண்ணைக்குள் மெதுவாக வீசத் தொடங்குகிறது. இப்படிக் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்திக் கசிய விடுவதற்காக எல்லையில் வளர்க்கப்படும் தாவரங்கள்தான் 'காற்றுத் தடுப்புச் சுவர்'.

இதன் மூலம், மேலே நாம் பார்த்த முக்கியமான பிரச்னைகளான நீராவிப்போக்கும், மண் அரிமானமும் தடுக்கப்படுவதோடு வேறு சில நன்மைகளும் இருக்கின்றன. பயிருக்கு வேண்டிய நுண்ணியத் தட்ப வெப்ப நிலை ஏற்படுகிறது. தோட்டத்துக்கு வேலியாகவும் இருக்கிறது. எல்லையில் உள்ள மரங்கள் மூலம் பறவைகளுக்குப் புகலிடம் கிடைப்பதால், அவற்றின் எச்சம் நம் தோட்டத்தில் விழுந்து இயற்கை எரு கிடைப்பதோடு, பூச்சிகளையும் ஒழிக்க முடிகிறது. பண்ணைக்குள் சுத்தமானக் காற்று கிடைக்கிறது. பண்ணைக்குள் இருக்கும் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை வேகம் கூடுகிறது. காற்றுத் தடுப்பு வேலிகளால் இப்படிப் பல நன்மைகள் இருக்கின்றன.

காற்றுத் தடுப்புச் சுவர் பற்றிப் பல ஆராய்ச்சிகள்கூட நடத்தப்பட்டு, நன்மை பயக்கும் விளைவுகள் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. வான்டென் பெல்ட் என்ற விஞ்ஞானி, 1990-ம் ஆண்டில் வறண்ட பகுதியில் ஆய்வு செய்தார். பேர், பையிங்டன் எனும் விஞ்ஞானிகள் 1989-90-ம் ஆண்டுகளில் மிதவெப்பப் பகுதிகளில் ஆய்வு நடத்தினர். இவர்கள், காற்றுத் தடுப்புச் சுவர்கள் மூலம் கோதுமை திராட்சை, மாதுளை, கரும்பு, வாழை, நெல், காபி, சப்போட்டா, முந்திரி, மா ஆகிய பயிர்களின் விளைச்சல் பெருகி இருப்பதை ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறார்கள்.

ஜீரோ பட்ஜெட் வேளாண்மையின் அடிப்படை விஷயங்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் பற்றிப் பார்த்து விட்டோம். இனி, ஒவ்வொரு பயிரைப் பற்றியும் அவற்றைச் சாகுபடி செய்வது பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.

- தாக்கல் செய்வோம்

காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்கள் சில

புகை மற்றும் மாசுக்களை உறிஞ்சும் மரங்கள்

1. வேம்பு, 2. முடைமாமரம் , 3. கருந்தும்பி, 4. மஞ்சள் கடம்பை.
காற்றிலுள்ள புளோரைடு நச்சைத் தாங்கும் மரங்கள்

1. சரக்கொன்றை , 2. எட்டி
காற்றிலுள்ள தூசுத் தும்புகளை உறிஞ்சும் மரங்கள்

1. முள் முருங்கை, , 2. மாமரம்
காற்றிலுள்ள மாசுக்களை உறிஞ்சும் மரங்கள்

1. வில்வ மரம், 2. கருந்தும்பி, 3. மாமரம், 4. மலைவேம்பு, 5. தேக்கு.

காற்றுத் தடுப்புத் தாவரங்கள் !

நிலத்தின் எல்லையில் காற்றுத் தடுப்புச் சுவருக்காக (வேலி) வளர்ப்பதற்கு ஏற்றத் தாவரங்கள்

1. கட்டுமான மரங்களான தேக்கு, வாகை, எட்டி, மூங்கில்... போன்றவை

2. பூச்சி விரட்டிக்குப் பயன்படும் வேப்ப மரம் ஆமணக்கு, வெள்ளை மருது, வில்வ மரம்... போன்றவை.

3. பழங்களைக் கொடுக்கும் இலந்தை, மா, எலுமிச்சை, புளி, கிச்சிலி, சாத்துகுடி, கொய்யா, பப்பாளி, சப்போட்டா, மாதுளை... போன்றவை

4. நைட்ரஜனை நிலைப்படுத்தும் முருங்கை, அகத்தி, கிளரிசிடியா, சவுண்டல், முள்முருங்கை... போன்றவை (இவற்றில் பல,
தீவனங்களாகவும் பயன்படும்).

5. மேற்கண்ட மரங்களின் நிழலில் வளரும் தாவரங்களான மிளகாய், மஞ்சள், இஞ்சி, சேம்பு, வாழை, நறுமணச் செடிகள்,
மூலிகைச்செடிகள், கோகோ, காபி, ஆமணக்கு, பாக்கு, மிளகு, வெற்றிலை, ஏலக்காய், லவங்கம், கிராம்பு, ஜாதிக்காய், வெனிலா,
சர்க்கரைவள்ளி, அவரை... போன்றவை.

தகவல் கொடுக்க வாங்க !

சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தைப் பின்பற்றி விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு ஒரு அழைப்பு. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஜீரோ பட்ஜெட் விவசாயிகளை ஒருங்கிணைக்க தகவல் சேகரிக்கப்படுகிறது. உங்கள் நிலத்தின் பரப்பளவு, சாகுபடி
செய்யும் பயிர்களின் விவரம், எப்போது முதல் ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தைப் பின்பற்றி வருகிறீர்கள் என்பது உள்ளிட்ட தகவல்களுடன், உங்கள் தொடர்பு முகவரி மற்றும் தொலைபேசி, அலைபேசி எண்களை எழுதி அனுப்புங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி
ஜீரோ பட்ஜெட் பகுதி,
ஆசிரியர், பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600002.

 

காற்றுச் சுவர் தடுப்பு... நல்ல ம்கசூலுக்கு வாய்ப்பு !
காற்றுச் சுவர் தடுப்பு... நல்ல ம்கசூலுக்கு வாய்ப்பு !
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism