Published:Updated:

தென்னையில் கூட்டுப்போட்டால் 35 ஆயிரம் ரூபாய் !

தென்னையில் கூட்டுப்போட்டால் 35 ஆயிரம் ரூபாய் !

தென்னையில் கூட்டுப்போட்டால் 35 ஆயிரம் ரூபாய் !

தென்னையில் கூட்டுப்போட்டால் 35 ஆயிரம் ரூபாய் !

Published:Updated:
தென்னையில் கூட்டுப்போட்டால் 35 ஆயிரம் ரூபாய் !
வழிகாட்டி
ஆறுச்சாமி
தென்னையில் கூட்டுப்போட்டால் 35 ஆயிரம் ரூபாய் !
தென்னையில் கூட்டுப்போட்டால் 35 ஆயிரம் ரூபாய் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தென்னையில் கூட்டுப்போட்டால் 35 ஆயிரம் ரூபாய் !

தென்னையை வைத்தவன் தின்றுவிட்டு செத்தான், பனையை வைத்தவன் பார்த்துவிட்டு செத்தான்' என்பார்கள். வாழும் காலத்திலேயே நடவு செய்தவர்களுக்கு பலன் தரக்கூடியது தென்னை என்பதைத்தான் உணர்த்துகிறது இந்தச் சொலவடை!

அத்தகையத் தென்னையின் சாகுபடி பரப்பளவை தமிழகத்தில் அதிகரிக்கும் நோக்கில், புதிதாக தென்னங்கன்றுகளை நடவு செய்பவர்களுக்கு, 'தென்னை சாகுபடி விரிவாக்கத் திட்டம்' (Expansion of Area under Coconut) மூலம் நிதி உதவி வழங்குகிறது தென்னை வளர்ச்சி வாரியம்.

தமிழ்நாட்டில் நிலம் வைத்துள்ள விவசாயிகள், இந்தத் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறலாம். அதிகபட்சம் 4 ஹெக்டேர் வரை நிதி உதவி அளிக்கப்படுகிறது. ஒரு ஹெக்டேர் நிலத்தில் தென்னங்கன்றுகளை நடவு செய்ய, எட்டாயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது.

இதன்மூலம் பலன் பெற விரும்பும் விவசாயிகள், அருகில் உள்ள மாநில வேளாண்மை துறை அலுவலகத்தை அணுகலாம். மேல் விவரங்களுக்கு தென்னை வளர்ச்சி வாரியத்தின் மண்டல அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

குழுவாக இணைந்து தென்னை சாகுபடி செய்பவர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டமும் வாரியத்திடம் இருக்கிறது. 'ஒருங்கிணைந்தத் தென்னை உற்பத்தி வளர்ச்சித் திட்டம்' (Integrated Farming for Productivity Improvement) எனப்படும் இதன் மூலம் உதவி பெற நினைப்பவர்கள், தமிழ்நாடு கூட்டுறவுச் சட்டத்தின் கீழ், சங்கம் ஒன்றைத் தொடங்க வேண்டும். அதன் பதிவு எண் கிடைத்த பிறகு, வாரியத்தின் மண்டல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் 25 முதல் 30 ஹெக்டேர் நிலத்தில், ஒரு சேர தென்னை சாகுபடி செய்ய வேண்டும். ஹெக்டேருக்கு 35 ஆயிரம் ரூபாயை, முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு என இரண்டு தவணைகளில் வழங்குவார்கள்.

இந்த உதவியைப் பெற விரும்பும் விவசாயிகள், 'புதியத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தென்னை விளைச்சலைப் பெருக்க வேண்டும். மற்ற விவசாயிகளுக்கு செயல் விளக்க பண்ணையாகவும் இருக்க வேண்டும். அதற்கு தகுந்தபடி பண்ணையை எளியத் தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்க வேண்டும். வாரியத்தின் அதிகாரிகள் அவ்வப்போது தோட்டத்தை ஆய்வு செய்வார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் விதமாக வளர்ச்சி இல்லை என்றால், நிதி உதவி வழங்குவதை நிறுத்தி விடுவார்கள்' போன்ற சில நிபந்தனைகளை ஏற்கவேண்டும் என்பதை மனதில் கொள்ளவும்.

தொடர்புக்கு தென்னை வளர்ச்சி வாரியம், மண்டல அலுவலகம், திரு.வி.க. தொழிற்பேட்டை, சிட்பெட் ரோடு, கிண்டி, சென்னை-32. தொலைபேசி 044-22252664.

- தொடர்ந்து சந்திப்போம்

தென்னையில் கூட்டுப்போட்டால் 35 ஆயிரம் ரூபாய் !
தென்னையில் கூட்டுப்போட்டால் 35 ஆயிரம் ரூபாய் !
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism