Published:Updated:

குப்பைக் கோழிகள் !

குப்பைக் கோழிகள் !

குப்பைக் கோழிகள் !

குப்பைக் கோழிகள் !

Published:Updated:
குப்பைக் கோழிகள் !
 
இயற்கை
கூடுதலாக முட்டை போடும்
குப்பைக் கோழிகள் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 

'குப்பைக் கோழிகள்'!

இரண்டாம் உலகப்போர் சமயத்தில், பலரும் இறைச்சிக் கோழிகளையும், முட்டைக் கோழிகளையும் வளர்த்து வந்தார்கள். அந்தப் பண்ணைகளில் பெருமளவில் நோய்கள் தாக்கி கோழிகள் இறந்து போயின' என்று பார்த்தோம். அதேசமயத்தில் ஒரு பண்ணையாளர் குழுவினரும் இறைச்சிக்காக, முட்டைக்காக என இரண்டு வகையான கோழிகளையும் அன்போடு வளர்த்து வந்தனர். இவர்கள் கோழிகளுக்கும் கழிச்சல், வலிப்பு போன்ற அனைத்து நோய்களும் வந்தன. மருத்துவர்களின் உதவியை நாடாமல், அவர்களே தங்கள் கோழிகளுக்கான உணவுகளை ஆராய்ந்தபோது, 'புரதம், வைட்டமின் பற்றாக்குறையால்தான் நோய்கள் வருகின்றன' என்று கண்டுபிடித்தார்கள்.

குப்பைக் கோழிகள் !

உடனடியாகக் கோழிகளைத் தனித் தனியாகப் பிரித்து வைத்து தானியங்களையும், கிளிஞ்சல்களையும், இலைகளையும் தீவனமாகக் கொடுக்கத் தொடங்கினர். அதன் பின்பு பலவித நோய்களும் கொஞ்சம் கொஞ்சமாக விலகி, முட்டை உற்பத்தியும் இருபது சதவிகிதம் அதிகரித்தது. தீவனச் செலவும் வெகுவாகக் குறைந்தது. இதைக் கண்ட அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்கள். அதோடு அந்தப் பண்ணையாளர்கள் மாட்டுச்சாணியை சாப்பிடும் பன்றிகள் நன்கு கொழுப்பதை அறிந்து வைத்திருந்தார்கள். அதனால் எதார்த்தமாக கோழிகளுக்கு பசுஞ்சாணியைத் தின்னக் கொடுத்தபோது, கோழிகள் ஒன்றையன்று கொத்துவதைக் கூட நிறுத்தி விட்டன.

இவர்களுக்கும் நவீன விஞ்ஞானிகள் பல ஆலோசனைகளை வழங்கத்தான் செய்தார்கள். ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்த இவர்களிடம் வேலையாட்கள் போதவில்லை. கொட்டில்களில் சேர்ந்து கொண்டிருந்த கோழிக் குப்பைகளைக்கூட, இவர்களால் அகற்ற முடியவில்லை. அதனால் இவர்களது கொட்டிலில் கோழிக் குப்பைகள் பெருகிக் கொண்டே இருந்தன. அதன் மேலேயே அடுக்கடுக்காக எச்சம் விழுந்து விழுந்து ஒரு ஆண்டு கழிந்தபின் குப்பைகள் தூள்தூளாக ஆகின. ஆனால், கோழிகளுக்கு எந்த நோயும் பரவவில்லை. பல பண்ணைகளில் இந்த விஷயம் பரவ, அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்து ஆராய்ச்சிப் பண்ணையில் இது பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கினார்கள்.

ஆய்வுக் கூடத்தில் இரண்டு கொட்டில்களை அமைத்து, ஒரு கொட்டிலில் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளித்து வந்தனர். இன்னொன்றில் கோழிக் குப்பையையும், வைக்கோலையும் பரப்பி இரண்டிலும் சம எண்ணிக்கையில் சம வயதுள்ள கோழிகளை விட்டனர். சில வாரங்கள் கழித்து ஆராயும்போது குப்பையில் இருந்த கோழிகள் ஆரோக்கியமாக இருந்ததுடன், அதிக முட்டைகளை இட்டன. கிருமிநாசினி தெளித்தக் கொட்டிலில் இருந்த கோழிகளில் வெகுவாக முட்டைகளின் எண்ணிக்கை குறைந்தன.

அதன் பிறகுதான், குப்பைகள் இருந்த கொட்டிலில் அதைக் கிளறிக் கிளறி கோழிகள் எதையோ சாப்பிட்டுக் கொண்டே இருக்கின்றன என்று பார்த்து, அதில் புரதம் மிகுந்த பூஞ்சைகளும், காளான்களும் உற்பத்தியாவதைக் கண்டு பிடித்தனர். தவிர, அதில் பென்சிலின், செப்டோமைசின் குடும்பத்தைச் சேர்ந்த ஆன்டிபயாட்டிக் மருந்துகளும், பி-12 என்ற வைட்டமினும் உற்பத்தியாவதைக் கண்டுபிடித்தனர். 'இந்த ஆன்டிபயாட்டிக்குகளால்தான் கோழிகளுக்கு நோய்கள் பரவவில்லை. பி-12 வைட்டமினால்தான் முட்டை உற்பத்தி அதிகரித்தது. தவிர, இந்த வைட்டமின் ரத்த சோகையையும் குணப்படுத்துகிறது. மேலும் பசுவின் சாணியில் இதே வைட்டமின் அதிகளவில் இருப்பதால்தான் சாணியைத் தின்றக் கோழிகளும் நன்கு வளர்ந்தன' என்று விஞ்ஞானிகள் ஆய்வறிக்கை எழுதினர். கூடவே, 'கிருமிநாசினிகள் தெளிக்கப்படும்போது வைட்டமின்களையும், ஆன்டிபயாட்டிக்குகளையும் உற்பத்தி செய்யக்கூடிய உயிரிகள் கொல்லப்படுகின்றன' என்றும் அறிவித்தனர்.

ஆனால், இன்னமும், மனிதர்களுக்கான மருத்துவத்தில் உள்ளது போலவே, கால்நடை மருத்துவத்திலும் கிருமிகள்தான் நோய்களை உண்டு பண்ணுகின்றன என்று நவீன விஞ்ஞானம் சொல்லிக் கொண்டிருக்கிறது. 'மண்ணில் கிருமிகள் இருப்பதால், கால்நடைக் கழிவுகளிலும் கிருமிகள் இருக்கலாம். அவற்றால் கால்நடைகளுக்கு நோய் தொற்றலாம்' என்றெல்லாம் யூகம் செய்து, அதற்கானத் தீர்வுகளையும் போதித்து வருகிறார்கள், துறைசார்ந்த விஞ்ஞானிகள். அவற்றை ஏகப்பட்ட விவசாயிகள், பண்ணையாளர்கள் பின்பற்றியும் வருகிறார்கள். ஆனபோதும், கோழிகளுக்கோ... மற்ற மற்ற கால்நடைகளுக்கோ வருகிற எந்த நோயையும் இவர்களால் தவிர்க்க முடிவதில்லை. வெள்ளைக் கழிச்சல், ரத்தக் கழிச்சல், அம்மை, ஈரல் பாதிப்பு, நீலநாக்கு, காணை என ஏகப்பட்ட நோய்கள் வந்து கொத்துக் கொத்தாக மடியத்தான் செய்கின்றன கோழிகளும் கால்நடைகளும்.

இதுபோல ஒவ்வொரு பிரச்னையையும் பார்த்துவிட்டு, 'அதனால் இருக்குமோ... இதனால் இருக்குமோ...' என்று குளிர்பதனம் செய்யப்பட்ட அறைகளில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள் விஞ்ஞானிகள். கால்நடைகளோடு அன்போடு பழகிப் பார்த்து அதன் கஷ்டங்களைப் புரிந்து கொள்பவர்களால் மட்டும்தான் இதற்குத் தீர்வு கண்டுபிடிக்க முடியுமே தவிர, விஞ்ஞானிகளால் ஒன்றுமே செய்ய முடியாது. இப்படிப்பட்ட விஞ்ஞானிகளுக்கு, மேலே நாம் பார்த்த சம்பவமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அரைகுறை விஞ்ஞானிகளின் பேச்சைக் கேட்காமல், அமெரிக்கப் பண்ணையாளர் குழுவினரின் பாணியைப் பின்பற்றி நாமும் பயனடைவோம்.

- போற்றுவோம்

குப்பைக் கோழிகள் !
குப்பைக் கோழிகள் !
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism