Published:Updated:

பிராயச்சித்தம் தேடப் பாருங்க...பிரளயத்துல சிக்கிடாதீங்க !

பிராயச்சித்தம் தேடப் பாருங்க...பிரளயத்துல சிக்கிடாதீங்க !

பிராயச்சித்தம் தேடப் பாருங்க...பிரளயத்துல சிக்கிடாதீங்க !

பிராயச்சித்தம் தேடப் பாருங்க...பிரளயத்துல சிக்கிடாதீங்க !

Published:Updated:

10-06-2010
பிராயச்சித்தம் தேடப் பாருங்க...பிரளயத்துல சிக்கிடாதீங்க !
முறையீடு
கோவணாண்டி
'பிராயச்சித்தம் தேடப் பாருங்க....பிரளயத்துல சிக்கிடாதீங்க !'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிராயச்சித்தம் தேடப் பாருங்க...பிரளயத்துல சிக்கிடாதீங்க !

பிரதமருக்கு கோவணாண்டி கடும் எச்சரிக்கை !

கண்கெட்ட பிறகு, சூரிய நமஸ்காரம் செய்யுற சோனியாவின் குமாஸ்தா, பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, கோவணாண்டி வணக்கம் சொல்லிக்கறேணுங்கோ!

பிராயச்சித்தம் தேடப் பாருங்க...பிரளயத்துல சிக்கிடாதீங்க !

'விவசாய வளர்ச்சி குறைந்துவிட்டது. குறைந்தது, 4 சதவிகித வளர்ச்சியாவது வேண்டும். அப்பொழுதுதான், பெருகி வரும் மக்கள் தொகைக்குச் சோறு போடமுடியும். இந்த இலக்கை அடைய பல்கலைக்கழகங்களும், வேளாண் விஞ்ஞானிகளும், பாடுபட வேண்டும். மேலும் வழக்கமான விவசாய முறையைப் பின்பற்றக்கூடாது. புதிய முறையைப் புகுத்த வேண்டும். பயிரிடும் நிலத்தின் பரப்பை அதிகரிக்க வாய்ப்பில்லை. எனவே, தானிய விளைச்சல் திறனைக் கூட்டுவதற்கான வழிமுறைகளைக் காணவேண்டும்'னு உத்தரகாண்ட் மாநில பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுல பட்டையைக் கிளப்பி இருக்கீங்களே... அதுக்காகத்தான் இந்த வணக்கம்!

ஐயா, மன்மோகன்ஜி, இந்தக் கவலை உங்களுக்கு எப்பவோ வந்திருக்கணும்.

'சிறப்புப் பொருளாதார மண்டலம்'கிற பேருல விளைநிலங்களை எல்லாம் வளைச்சு வளைச்சு பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் கொடுக்க ஆரம்பிச்சீங்களோ... அப்ப வந்திருக்கணும்.

கடனைக் கட்ட முடியாம... கொத்துக் கொத்தா விவசாயிக தற்கொலை பண்ணி செத்தாங்களே... அப்பவாவது யோசிச்சு இருக்கணும்.

விளைய வச்சாலும், விலை கிடைக்காம, நிலத்தை வித்துட்டு... கொத்துக் கொத்தா நகரத்துக்கு நகர்ந்தாங்களே விவசாயிங்க... அப்ப கவலைப்பட்டிருக்கணும்.

அப்பவெல்லாம் விட்டுட்டு, இப்ப ஒப்பாரி வெச்சு என்ன பிரயோஜனம். 'பொருளாதார வளர்ச்சியில, நாடு 8 சதவிகிதம் எகிறிக் குதிக்குது... ஏழை பாழைங்க கையில பணம் தண்ணியா புரளுது.. வாங்கும் சக்தி உயருது'னு குத்தாட்டம், குதியாட்டம் போட்டீங்களே... இப்ப குத்துதே.. குடையுதே'னு சொன்னா எப்படி?

'பசுமைப் புரட்சி'ங்கறதே வெறும் பம்மாத்துனு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சிருக்கற சமயத்துல, அதைப் பத்தி சிலாகிச்சிப் பேசுறீங்களே... இது உங்களுக்கே நல்லாயிருக்கா?

'அளவுக்கு அதிகமாக ரசாயன உரங்களையும், பூச்சிகொல்லிகளையும் பயன்படுத்தினது தப்பா போச்சு. இனிமே இயற்கையோடு இணைஞ்சு விவசாயம் செஞ்சாதான் நிலைத்த நீடித்த விவசாயத்தைக் காப்பாத்த முடியுமும்'னு 'பசுமைப் புரட்சி'யோட பிரம்மாக்களே ஒப்புக்கிட்டாங்க. அதுல ஒருத்தரான வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கூட அதை ஆமோதிக்கறதோட, இயற்கை விவசாயத்தைப் பரப்புறதுக்கான வேலைகளையும் செய்துகிட்டு வர்றாரு. ஆனா, இந்த நாட்டோட தலைமைப் பதவியில உக்கார்ந்துகிட்டு, நாட்டுல என்ன நடக்குதுனே தெரியாம, விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் என்ன பிரச்னைனே புரிஞ்சுக்காம, மைக் கிடைச்சுட்டுதுனு இஷ்டத்துக்கு உளறிக் கொட்டுறீங்களே!

ஏற்கெனவே பல ஆயிரம் கோடிகளை அள்ளி எறைச்சிக் கொண்டு வந்த ஒங்க பசுமைப் புரட்சிதான், இத்தனை வருஷமா இந்த நாட்டுக்குச் சோறு போட்டுக்கிட்டிருந்துச்சுனு சொல்லிக்கிட்டிருந்தீங்க. ஆனா, 'பசுமைப் புரட்சி பஞ்சராகிப் போச்சு'ங்கறதை இப்ப நீங்க உத்ரகாண்ட் மாநிலத்துல பேசினதுல இருந்தே புரிஞ்சுக்க முடியுது.

அப்படியிருந்தும் அடங்கற மாதிரி தெரியலியே. மறுபடியும் ஆராய்ச்சி, கீராய்ச்சினு எங்க பணத்தை மொங்காம் போடப் பார்க்கறீங்க! எங்க கோவணாண்டிகளோட உழைப்பைச் சுரண்டி வெளிநாட்டுக்காரன் காலடியில வெச்சுக் கும்பிடறதுலயுமே குறியா இருக்கீங்க!

'வளர்ச்சி இல்லை... கிளர்ச்சி இல்லை'னு தலையைச் சுத்தி மூக்கைத் தொடறதவிட, நேரடியாவே சொல்லிட்டுப் போகவேண்டியதுதானே ஒங்க மனசுல நிறைஞ்சுருக்கற அந்த விஷயத்தை. அதாவது, 'மான்சான்டோ கம்பெனியோட, பி.டி. விதைகளை ஊரு முழுக்க வித்துக் கொடுக்கறேன்'னு அமெரிக்காவோட சத்தமில்லாம ஒப்பந்தம் போட்டாச்சு. ஆனா, இங்க பி.டி. விதைகளுக்கு எதிர்ப்பு கிளம்பி கிடக்கு. எப்படிடா அதை விற்கிறதுனு யோசிச்சிக்கிட்டே இருந்தீங்க. இப்ப சமய சந்தர்ப்பம் பார்த்து, சந்தடி சாக்குல அதை எடுத்து விட ஆரம்பிச்சிருக்கீங்க.... இதானே உண்மை.

ஆனா, இதனால நாளைக்கு ஏதாவது பின் விளைவு வந்தா, அதுக்கு நீங்க பொறுப்பேத்துக்க தயாரா? அடச்சே... நான் ஒரு கூமுட்டை. இதுக்கு ஒங்ககிட்ட போய் உத்தரவாதம் கேக்கறேன் பாருங்களேன்.

என்னிக்கு, போபால்ல அமெரிக்காக்காரனுக்கு பல்லாக்கு தூக்கினீங்களோ... அன்னிக்கே இந்தியாவோட மானம், மரியாதை, உசுரு எல்லாமே கப்பலேறிப் போயாச்சு. இதுக்குப் பிறகு பேசறதுக்கு என்ன இருக்கு?

இதோ... ஒங்க கூட்டாளி அமெரிக்க அதிபர் ஒபாமா, தன் நாட்டுக்கு ஒரு பிரச்னைனதும் சும்மா சிறுத்தைக் கணக்கா சீறுறாரு. அந்தாளுக்கு இருக்குற ஆக்ரோஷத்துல கோடியில ஒரு பங்காவது உங்களுக்கு இருக்கா? அதோட பங்காளி நாடுதான் இங்கிலாந்து. ஆனா, அதால தனக்கு ஒரு பிரச்னைனதும், சும்மா சட்டையைப் பிடிச்சு உலுக்குறாரு ஒபாமா. அந்த வீரம் உங்களுக்கு இல்லாம போச்சே.

இங்கிலாந்து எண்ணெய் கம்பெனி, மெக்ஸிகோ நாட்டுக்குப் பக்கத்துல கடலுக்குள்ள குழாயைப் போட்டு எண்ணெய் எடுத்தப்ப, திடீர்னு குழாய் வெடிச்சு, கடல் தண்ணி முழுக்க எண்ணெயா மிதக்குது. இதனால கடல்வாழ் பிராணிக, கடலோரத்துல வசிக்கற பறவைகனு பலதும் அநியாயமா உசுரை விட்டுக்கிட்டிருக்குதுங்க.

இது, தெரிஞ்சதுமே, 'கழுத்துல கத்தி வெப்பேன்... பூட்ஸ் காலை வெச்சு நொறுக்குவேன்'னு உருட்டி மிரட்டி, 15 நாளைக்குள்ள பல ஆயிரம் கோடி ரூபாயை நஷ்டஈடா வாங்கிட்டாரு ஒபாமா.

இத்தனைக்கும் அங்க ஆபத்து கடல்வாழ் பிராணிகளுக்குதான். அதுக்கே அந்த ஆளு தையா தக்கானு குதிச்சதுல, தன்னால வழிக்கு வந்துடுச்சு இங்கிலாந்து.

ஆனா, அந்த அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ரசாயனக் கம்பெனியால, இங்க நம்ம ஊரு போபால்ல 20 ஆயிரம் பேர் செத்துப் போனாங்க... 5 லட்சம் பேர் நடைபிணமா வாழ்ந்துகிட்டிருக்காங்க.... தலைமுறை தாண்டியும் அதோட பாதிப்பு தொடர்ந்துகிட்டிருக்கு. ஆனா, அதுக்குக் காரணமான சண்டாளனுங்களை சட்டைப் பிடிச்சு உலுக்க வேண்டிய ஒங்க முன்னோருங்க... சல்யூட் அடிச்சு, பல்லக்குல (விமானம்) ஏத்திக் கொண்டு போயில்ல காப்பாத்தி விட்டிருக்காங்க.

அமெரிக்கா நாட்டுப் பறவை, மீனு... இதெல்லாத்தையும்விட, இந்தியாவுல இருக்கற மனுஷங்க உசுரு அம்புட்டு மலிவாவா போயிடுச்சு ஒங்களுக்கு? அமெரிக்காவுல... குளுகுளு தீவுல சுதந்திரமா திரியற கொலைகாரன் ஆண்டர்சனை, உடனே இந்தியாவுக்கு அனுப்புனு இப்பவாச்சும் கேக்கலாமில்லியா?

சொந்த நாட்டு மக்கள் கொத்துக் கொத்தா செத்து கிடந்தப்பகூட, பேரழிவுக்குக் காரணமான கொலைகாரனைப் பத்திரமா பல்லக்குல ஏத்தி அனுப்புன கல்நெஞ்சக்காரனுங்க வாழற இந்த நாட்டுல, அதோட வாரிசா வந்துருக்கற ஒங்ககிட்ட மட்டும் நியாயத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?

28 வருஷமாகியும் பாதிக்கப்பட்டவங்களுக்கு உரிய நஷ்டஈட்டை வாங்கிக் கொடுக்க வக்கில்லை. ஆனா, கமிட்டி, கருமாதினு வெட்டி பந்தா விட்டுக்கிட்டு அலையறீங்க. இந்த லட்சணத்துல அணு உலைக்கு வக்காலத்து வேற! அதைத் தவிர, புதுசு புதுசா எங்க நாட்டுக்கு வந்து தொழிற்சாலைங்கள தொறந்து வையுங்கனு கேக்கறதுக்காக இப்ப ஒங்க நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை வேற அங்க அனுப்பி வெச்சுருக்கீங்க!

அய்யா சாமிகளா, இதுவரைக்கும் நீங்க பண்ணின அநியாயமெல்லாம் போதும். நானும் ஒங்கள ஏறுக்கு மாற திட்டினதும் போதும். நீங்க செஞ்ச பாவத்துக்கு பிராயச்சித்தமா, இனியாச்சும் நாட்டை நல்ல வழியில நடத்தப் பாருங்க.

மறுபடியும் ஆராய்ச்சி, அது, இதுனு எங்க தலையில மிளகா அரைக்காம, விவசாயத்தை வாழவைக்கணும்கற ஒரே நல்லெண்ணத்தோட வேலையைப் பாருங்க. விவசாயிகளோட விளைபொருளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யுங்க. ஒங்க கால்ல விழுந்து கெஞ்சிக் கேட்டுக்கிறேன். இதை மட்டும் நீங்க செய்து கொடுங்க. அதுக்குப் பிறகு பாருங்க... விவசாயம் 40 சதவிகிதம் கூட செழிக்கும். இல்லைனா, 40 சதவிகிதம் பின்னோக்கிப் போறதை ஒங்க அப்பனே வந்தாலும், தடுத்து நிறுத்த முடியாது, ஆமாஞ் சொல்லிப்புட்டேன்!

இப்படிக்கு
கோவணாண்டி

பிராயச்சித்தம் தேடப் பாருங்க...பிரளயத்துல சிக்கிடாதீங்க !
பிராயச்சித்தம் தேடப் பாருங்க...பிரளயத்துல சிக்கிடாதீங்க !
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism