Published:Updated:

ஏறுது,செவ்வாழை... இறங்குது,தேயிலை !

ஏறுது,செவ்வாழை... இறங்குது,தேயிலை !

ஏறுது,செவ்வாழை... இறங்குது,தேயிலை !

ஏறுது,செவ்வாழை... இறங்குது,தேயிலை !

Published:Updated:

10-06-2010
ஏறுது,செவ்வாழை... இறங்குது,தேயிலை !
மரத்தடி மாநாடு
ஏறுது, செவ்வாழை... இறங்க்குது,தேயிலை !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏறுது,செவ்வாழை... இறங்குது,தேயிலை !

ரோட்டி' ஏகாம்பரத்தைத் தேடித் தோட்டத்துக்கு வந்த 'வாத்தியார்' வெள்ளைச்சாமி, மோட்டார் அறைக்குள் இருந்து யாரோ அடிக்கும் சத்தமும்... குழந்தை அழும் சத்தமும் கலந்து வந்ததைக் கேட்டு, பதறி ஓடினார். அங்கே... கருப்பு நிறத்தில் உலக்கைத் தடிமனில் நீளமாக ஒரு பாம்பு, கிட்டத்தட்ட உயிரை விட்டுக்கொண்டிருந்தது... ஏரோட்டியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல்! ஒரு வழியாக அது இறந்துபோக, வெற்றிக் களிப்புடன் வியர்வையைத் துடைத்துக் கொண்டே வெளியில் வந்த ஏரோட்டி...

ஏறுது,செவ்வாழை... இறங்குது,தேயிலை !

''மோட்டாரைப் போடலாம்னு ரூமுக்குள்ள வந்தேன். 'உஷ்... உஷ்'னு சத்தம். எங்கிருந்துடானு பாத்தா, என் காலுக்குப் பக்கத்துல பொந்துல இருந்து பாம்பு ஒண்ணு தலையை நீட்டிக்கிட்டு சீறிக்கிட்டிருக்கு. ஒரு நிமிஷம் ஆடிப் போய்ட்டேன். அப்புறம் சுதாரிச்சுக்கிட்டு கம்பை எடுத்துக்கிட்டு வந்தா, பொந்துக்குள்ள சுருண்டுக்கிச்சு. குச்சியை வெச்சு குத்தினாலும் வெளியில வரல. அது சீறினதை வெச்சுப் பார்த்தா... 'கழுதை விரியன்' பாம்பா இருக்குமோனு சந்தேகம். உடனே, வெளிய மேய்ஞ்சுக்கிட்டுருந்த ஆட்டுக் குட்டியை இழுத்துக்கிட்டு வந்து மோட்டார் ரூம் முன்னால கட்டிப் போட்டேன். ஆட்டு வாசனைக்கு அந்தப் பாம்பு கொஞ்ச நேரத்துல வெளிய வந்துச்சு. 'ஆகா, கழுதை விரியன்தான்'னு சொல்லிக்கிட்டே... கதையை முடிச்சுட்டேன்" என்றபடியே ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

"ஓ... கழுதை விரியனா... என்ன அடிச்சாலும், சாமானியத்துல சாகாதே. குழந்தை அழுகுற மாதிரி வேற சத்தத்தைக் கொடுத்து, நம்ம கவனத்தை வேற திருப்பும். கடிச்சுருந்தா... உடனே உசுரு போயிருக்கும். நல்லவேளை, உனக்கு ஆயுசு கெட்டி..." என்று வாத்தியார் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வந்து சேர்ந்தார் 'காய்கறி' கண்ணமா. அவரிடமும் பாம்புக் கதையை ஏரோட்டி விலாவாரியாகச் சொல்ல...

"விதி முடிஞ்சாத்தான் விரியன் கடிக்கும்னு சொல்வாங்க. காலுக்கடியில இருந்த பாம்புகிட்ட இருந்து நீ தப்பிச்சுருக்கன்னா உனக்கு ஆயுசு கெட்டினுதான அர்த்தம்'' என்று அவருக்கு திருஷ்டி கழித்த காய்கறி,

''பரவாயில்லய்யா, உனக்கும் மூளை இருக்குனு இப்ப நான் ஒப்புக்கிறேன். ஆட்டை வெச்சு பாம்பை வெளியில வர வெச்சுட்டியே'' என்று கலாய்க்க... இறுக்கமான சூழல் மறைந்து, இலகுவான சூழல் உருவானது.

கூடையிலிருந்த பிளம்ஸ் பழங்களை ஆளுக்கு இரண்டாகக் கொடுத்த காய்கறி, தொடர்ந்தார்.

''இந்த பிளம்ஸ் பழம், போன வருஷம் நாப்பது, அம்பது ரூபாய்க்கு வித்துக்கிட்டிருந்துச்சு. இந்த வருஷம் என்னடானா... கிலோ எண்பது ரூபா, நூறு ரூபானு சொல்றாங்க. இப்படியே பழம், காயெல்லாம் விலை ஏறிக்கிட்டே போச்சுனா... என்ன ஆகும்னே தெரியலையே?'' கவலையுடன் சொன்னார்.

''விளைச்சல் குறையறதால விலை ஏறுறது கால் பணம்தான். ஆனா, இந்த வியாபாரிங்களா ஏத்தி விடறது முக்கால் பணம். இதுமாதிரி சமயத்துலதான், அவங்க காட்டுல மழை. ஆனா, இதனால சம்சாரிகளுக்கு சல்லிக்காசு பிரயோஜனமில்லங்கறதுதான் உண்மை..." என்று அலுத்துக் கொண்ட வாத்தியார்,

"இந்தப் பக்கம் காய்கறி விலையெல்லாம் ஏறுது. ஆனா, பாரு தேயிலை விலை இறங்கிட்டே போகுது. அதை என்னானு சொல்றது? குன்னூர்ல தேயிலை ஏலம் ரொம்ப மந்தமாகிடுச்சாம். எப்பவுமே இல்லாத அளவுக்கு இப்போ குறைந்தபட்ச தேயிலை விலை கிலோ 36 ரூபாய்னு சரிஞ்சு போயிருக்கு. வடமாநிலத்துல இருந்தெல்லாம் வியாபாரிக வந்திருந்தும், பெருசா ஏலம் போகல. அதனால பசுந்தேயிலையோட விலையும் குறையும்னு சொல்றாங்க. கணக்குப் பார்த்தா... நீலகிரி மாவட்ட தேயிலை வர்த்தகத்துல கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டமாகிப் போச்சாம். தோட்டத்தைக்கூட பராமரிக்க முடியாத அளவுக்கு விவசாயிகள், சின்னச்சின்ன கம்பெனிகளெல்லாம் திணறிக்கிட்டு இருக்காங்களாம்'' என்று சோக தகவலைத் தட்டிவிட்டார்.

''இதேமாதிரிதான் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் விவசாயிகளும் புலம்பிக்கிட்டிருக்காங்க'' என்று ஆரம்பித்த ஏரோட்டி,

''போன சீசன்ல தட்டைப் பயறுக்கு இந்தப் பகுதியில நல்ல விலை கிடைச்சதால, நிறைய விவசாயிகள் தட்டைப்பயறு போட்டுருந்தாங்க. இப்போ அறுவடை நடந்துக்கிட்டுருக்கு. வரத்து அதிகமா இருக்கறதால, விலை குறைஞ்சு போயிடுச்சாம். கேரளாவுல இளம் தட்டைப்பயறுக்கு நல்ல கிராக்கி. அதனால கேரளா வியாபாரிக அறுவடை நடக்குறப்போ பச்சையாவே வாங்கிக்கறாங்களாம். அப்படி இருந்தும் விலை கிடைக்கலையாம். போன சீசன்ல கிலோ பன்னெண்டு ரூபாய்க்கு வித்தது, இப்போ ஆறு ரூபாய்க்குதான் போகுதாம். அதனால ரொம்ப ஏமாந்து போய்க் கிடக்குறாங்க விவசாயிக'' என்று சொன்னார்.

"அட, என்னய்யா.... ஆரம்பத்துல இருந்தே ஒரே சோகக் கதையா இருக்கே...?" என்று காய்கறி அலுத்துக் கொள்ள...

"இதோ, நம்மகிட்ட ஒரு சந்தோஷ சங்கதி இருக்கே..." என்று குஷியான வாத்தியார்,

''அதே கோபிச்செட்டிப்பாளையத்துல வாழை விவசாயிகளுக்கு ஓரளவுக்கு விலை கிடைச்சுருக்கு. கோபி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் செவ்வாழைத் தார் ஒண்ணுக்கு 550 ரூபாய் வரை விலை கிடைச்சதுல மகிழ்ச்சியில இருக்காங்க விவசாயிக. கோபி, நம்பியூர், டி.என்.பாளையம் பகுதியிலெல்லாம் ஆயிரக்கணக்கான ஏக்கர்ல வாழை விவசாயம்தான். அதிகமா, கதலி, நேந்திரம், செவ்வாழைதான் போடுவாங்க. அறுவடை முடிஞ்சதும் பெரும்பாலும் கேரளாவுக்குதான் அனுப்புவாங்க. போன சீசன்ல கதலிக்கும், செவ்வாழைக்கும் சரியான விலை கிடைக்கலை. அதனால நிறைய விவசாயிக இது ரெண்டையும் விட்டுட்டு, வேற ரகங்களுக்கு மாறிட்டாங்க. கொஞ்ச நாளைக்கு முன்ன வீசுன சூறாவளியில, பாதி மரங்கள் வேற சாய்ஞ்சுடுச்சு. ரெண்டு மாசமா செவ்வாழை வரத்து குறைஞ்சுக்கிட்டே போகவே, கிராக்கி ஏறிக்கிடுச்சு'' என்று சொல்லி விட்டு,

''செம்மொழி மாநாட்டுல கள் விற்பனை செய்யப்போறதா... நம்ம ஆளுங்க சில பேரு சீறிக்கிட்டிருந்தாங்க. அங்க என்னதான் நடக்குதுனு பார்க்கறதுக்காகவாவது நானும் செம்மொழி மாநாட்டுக்குப் போறேன்'' என்று சொல்லிக் கொண்டே கிளம்ப, நிறைவுக்கு வந்தது அன்றைய மரத்தடி மாநாடு.

வாத்தியார் சொன்ன கொசுறு
கால்நடையிலயும் போலி டாக்டர்!

காலாவதியான மருந்துகளை விற்பனை செய்த வழக்கு தொடர்பா, தமிழ்நாடு முழுக்க சோதனை நடத்தினாங்க. அந்த சமயத்துல...

‘விவசாயத் துறையிலும் நிறையப் போலிகள் இருக்காங்க... அதையும் கண்டு பிடிக்கணும்‘னு பசுமை விகடன் ஆசிரியர் எழுதியிருந்தார். இந்த நிலையில, திண்டுக்கல் மாவட்டக் கால்நடைத் துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையத் தலைவர் எல்லாரையும் இணைச்சு ஒரு குழுவை அமைச்சு, மாவட்டத்துல திடீர் சோதனை பண்ணச் சொல்லியிருக்கார் கலெக்டர் வள்ளலார். வடமதுரை பக்கத்துல ‘பிளாத்து’ன்ற பகுதியில இளங்கலை விலங்கியல் படிப்பு படிச்சுட்டு, Ôகால்நடை மருத்துவர்Õனு சொல்லிக்-கிட்டு ஆடு, மாடுகளுக்கு வைத்தியம் பாத்துக்கிட்டுத் திரிஞ்ச கார்த்திக்கேயன்ங்கறவர பிடிச்சு, காவல் நிலையத்துல ஒப்படைச்சுருக்கு அந்தக் குழு.

ஏறுது,செவ்வாழை... இறங்குது,தேயிலை !
ஏறுது,செவ்வாழை... இறங்குது,தேயிலை !
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism