Published:Updated:

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

Published:Updated:

10-06-2010
தண்டோரா
தண்டோரா
பசுமைக் குழு
இலவசப் பயிற்சிகள்
பழத்தோட்ட பராமரிப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தண்டோரா
தண்டோரா

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜூலை-7-8 தேதிகளில் பயறு வகையில் புதியத் தொழில்நுட்பம்; 12-13 தேதிகளில் பழ மரங்கள் சாகுபடி மற்றும் பழத்தோட்ட பராமரிப்பு; 14-15 தேதிகளில் விஞ்ஞான முறையில் கறவைமாடு வளர்ப்பு; 21-22 தேதிகளில் அடுமனைப் பொருட்கள் தயாரிப்பு; 27-28 தேதிகளில் பண்ணை இயந்திர பயன்பாடு; 29-30 தேதிகளில் அலங்கார மீன் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காட்டாங்குளத்தூர் அஞ்சல், காஞ்சிபுரம் 603 203. தொலைபேசி 044-27452371.

நன்னீர் இறால்!

சென்னை, மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் நன்னீர் இறால் வளர்ப்புத் தொழில்நுட்பம் என்ற பயிற்சி. ஜூலை-14 மற்றும் ஆகஸ்டு-10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தொடர்புக்கு பேராசிரியர், மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், கால்நடை நலக்கல்வி மையம், மாதவரம் பால்பண்ணை, சென்னை-600 051. தொலைபேசி 044-25556750.

கட்டணப் பயிற்சிகள்

பஞ்சகவ்யா மருந்து!

சேலம், சுரபி கோசாலையில் ஜூன்-27 மற்றும் 28 தேதிகளில் பஞ்சகவ்யா மருந்துகள் தயாரிப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் பசுவின் பொருட்களான சாணம், சிறுநீர், பால்... போன்றவற்றைப் பயன்படுத்தி மருந்து முதல் சோப்புத் தயாரிப்பு வரை கற்றுக் கொடுக்கப்படும். கட்டணம் ரூ.400 மட்டும். பயிற்சிக் கையேடு, குறிப்பேடு, மதிய உணவு வழங்கப்படும்.

முன்பதிவு செய்து கொள்ளவும், தொடர்புக்கு சுரபி கோசாலை, சுவாமி தேஜோமயானந்தா ஆசிரமம், நாமமலை அடிவாரம், தெற்கு அம்மாப்பேட்டை, சேலம்-14. அலைபேசி 94432-29061, 94421-40594.

அஞ்சல் வழிக் கால்நடை!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்கம் வெள்ளாடு வளர்ப்பு, கறவை மாடு வளர்ப்பு குறித்து அஞ்சல் வழிக் கல்வியை வழங்குகிறது. கல்வித் தகுதி 8-ம் வகுப்பு. ஒரு பயிற்சிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.20. ஒரு பயிற்சிக்குக் கட்டணம் ரூ.200. விண்ணப்பம் வேண்டுவோர் வேண்டுகோள் கடித்ததுடன், சுயவிலாசமிட்ட அஞ்சல் உறையில் ரூ.10 மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டி அனுப்பவும். விண்ணப்பக் கட்டணத்தை அஞ்சல் ஆணை அல்லது டி.டி-யாக அனுப்பலாம். டி.டி-யை ஏதாவது ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், The Director of Extension Education, Tamil Nadu Veterinary and Animal Sciences University, Chennai என்ற பெயருக்கு எடுக்கவேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி விரிவாக்கக் கல்வி இயக்குநர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை வளாகம், சென்னை-600 051. தொலைபேசி 044-25554375, 25551586.

காய்கறியைப் பதப்படுத்தலாம் வாங்க!

தண்டோரா

டாக்டர்.ஜே.சி. குமரப்பா கிராமியத் தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவனம், பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்துதல், பழச்சாறு ஜாம், ஸ்குவாஷ் தயாரித்தல், மசாலாப் பொருட்கள் தயாரிப்புப் பயிற்சிகளை அளிக்கிறது. ஒவ்வொரு பயிற்சிக்கும் கட்டணம் ரூ.100 மட்டும். தங்குமிடம் இலவசம். பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு முதல்வர், டாக்டர்.ஜே.சி. குமரப்பா கிராமியத் தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவனம், காந்திநிகேதன் ஆசிரமம், தே.கல்லுப்பட்டி, மதுரை-625702. தொலைபேசி 04549-272365.

உலகமயமும், விவசாயமும்!

திருவண்ணாமலை நாயுடுமங்கலம் கூட்டுரோட்டில் ஜூலை 10-11 ஆகிய தேதிகளில் ‘உலகமயமும், விவசாய பாதிப்பும்’ என்ற பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. தமிழ்நாடு விவசாய சங்க மாநிலச் செயலாளர் துரை.மாணிக்கம், பேராசிரியர் மே.து.ராஜ்குமார், தேவபேரின்பன்... போன்றவர்கள் கருத்துரை வழங்குகிறார்கள். கட்டணம் ரூ.100. தங்குமிடம், உணவு வழங்கப்படும். முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு 97513-67654.

தண்டோரா
தண்டோரா
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism