Published:Updated:

கடலையோடு கூட்டணிப் போடும் முள்ளங்கி!

விகடன் விமர்சனக்குழு
கடலையோடு கூட்டணிப் போடும் முள்ளங்கி!
மகசூல்
காசி.வேம்பையன்
கடலையோடு கூட்டணிப் போடும் முள்ளங்கி!
மதிப்புக் கூட்டினால் மகா லாபம்!
கடலையோடு கூட்டணிப் போடும் முள்ளங்கி!
கடலையோடு கூட்டணிப் போடும் முள்ளங்கி!

ழக்கமாக கடலைக்கு இடையில் துவரை, எள்... போன்ற பயிர்களைத்தான் ஊடுபயிராக விவசாயம் செய்வார்கள். கொஞ்சம் மாற்றியோசித்து, கடலைக்கு இடையில் முள்ளங்கியைப் பயிர் செய்து, இரண்டிலுமே மனம் நிறைவான மகசூலை எடுக்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், ஆச்சான்பட்டியைச் சேர்ந்த செந்தில்.

காலை நேரத்தில் தோட்டத்து வேலையில் மும்முரமாக இருந்த செந்தில், அதைத் தொடர்ந்தபடியே நம்மிடம் பேசினார்.

''எனக்கு இறவைப் பாசனத்தோட நாலு ஏக்கர் நிலமிருக்கு. தண்ணீர் நிலவரத்தைப் பொறுத்து மாத்தி மாத்தி ஏதாவது பயிரைப் போட்டுக்குவேன். ரெண்டு வருஷத்துக்கு முன்ன வரைக்கும் ரசாயன விவசாயம்தான் செஞ்சுக்கிட்டிருந்தேன். பெரிசா லாபம் ஒண்ணுமில்லை. வரவுக்கும் செலவுக்கும் சரியா இருக்கும். அந்த சமயத்துலதான் நண்பர் ஒருத்தர் மூலமா இயற்கை வழி விவசாயத்தைத் தெரிஞ்சுகிட்டு, முழுமையா இயற்கைக்கு மாறிட்டேன்.

எப்பவுமே சுழற்சி முறையில வருஷத்துக்கு ஒரு தடவை நிலக்கடலை சாகுபடி செஞ்சுடுவேன். அந்த மாதிரி இந்த வருஷம் மார்கழிப் பட்டத்துல 66 சென்ட் நிலத்துல கடலை போட்டப்போதான் முள்ளங்கியை ஊடுபயிரா பண்ணுனேன். ரெண்டுமே ரொம்ப நல்லா வந்துச்சு'' என்றவர், 66 சென்ட் நிலத்துக்கான கடலை, முள்ளங்கி சாகுபடிப் பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.

''மணற்பாங்கான மண், செம்மண் வகையில் கடலை நன்கு வளரும். மானாவாரிக்கு, ஆடிப் பட்டம். இறவைக்கு, மார்கழிப் பட்டம் ஏற்றது. நிலத்தில் ஒரு டிராக்டர் எருவைக் கொட்டிக் களைத்து, குறுக்கு-நெடுக்காக இரண்டு சால் உழவு செய்ய வேண்டும். பின் வரப்பு வெட்டி சுத்தம் செய்து, இன்னொரு உழவு செய்யவேண்டும். பிறகு, ஏர் பூட்டி, அதை ஓட்டிக் கொண்டிருக்கும்போதே, ஏரைத் தொடர்ந்து அரையடி இடைவெளியில் கடலையை விதைக்க வேண்டும். 66 சென்ட் நிலத்துக்கு 40 கிலோ விதைக்கடலை தேவைப்படும் ('ஜெ.எல்-24' என்ற 110 நாள் வயது கொண்ட ரகத்தை விதைத்திருக்கிறார் செந்தில்). விதைக் கடலையை சுத்தப்படுத்தி, 10 லிட்டர் அமுதக்கரைசலில் ஒரு கிலோ சூடோமோனஸைக் கலந்து, அதில் முக்கி எடுத்து,

கடலையோடு கூட்டணிப் போடும் முள்ளங்கி!

நிழலில் உலர்த்திய பின்பு விதைக்க வேண்டும். விதைப்பு சமயத்தில் மண்ணின் ஈரப் பதம் புட்டுப் பதத்தில் இருக்க வேண்டும். இறவைப் பாசனம் என்றால், அதன்பிறகு, எட்டு அடி நீளம், ஐந்து அடி அகலத்தில் பாத்தி எடுத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கடலை, விதைத்த ஏழு முதல் பத்து நாட்களுக்குள் முளை விடும்.

கடலை விதைத்த 15\ம் நாளுக்கு மேல், ஒரு கிலோ முள்ளங்கி விதையைக் கடலைச் செடிக்கு இடையில் விதைக்க வேண்டும். உடனே களை எடுத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இப்படி களையெடுக்கும்போது, கடலைச் செடிகள் தளதளவென வருவதோடு, முள்ளங்கி விதைகளும் மண்ணுக்குள் சென்று விடும். தொடர்ந்து களை இருப்பதைப் பொறுத்து முன்று களைகள் வரை எடுக்க வேண்டியிருக்கும்.

மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து பத்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. முதல் மற்றும் இரண்டாவது தண்ணீரில் 200 லிட்டர் அமுதக்கரைசலைக் கலந்துவிட வேண்டும். 20\ம் நாளுக்கு மேல் அசுவிணித் தாக்குதல் ஏற்பட்டால், டேங்குக்கு

(10 லிட்டர்) 300 மில்லி தஞ்சாவூரான் பூண்டுக் கரைசலைத் (பார்க்க பெட்டிச் செய்தி) தெளிக்க வேண்டும். 66 சென்ட் நிலத்துக்கு ஏழு டேங்க் தேவைப்படும். மீண்டும் ஏதாவது பூச்சித் தாக்குதல் வந்தால் மறுபடியும் தெளிக்கலாம்.

கடலையோடு கூட்டணிப் போடும் முள்ளங்கி!

35 -ம் நாளுக்கு மேல் 5 லிட்டர் தேமோர்க் கரைசல், 3 லிட்டர் அமுதக்கரைசல், 50 மில்லி மீன் அமிலம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கரைசலை, பத்து லிட்டர் நீருக்கு, ஒரு லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து தெளித்தால்... நன்கு பூ எடுக்கும். 45\ம் நாளுக்கு மேல் 200 லிட்டர் பழக்கரைசலைப் (பார்க்க.. பெட்டிச் செய்தி) பாசன நீரில் கலந்து விட வேண்டும். 55-ம் நாள் 3 லிட்டர் இளநீர்,

2 லிட்டர் மோர், 5 லிட்டர் அமுதக்கரைசல் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, இக்கரைசலை பத்து லிட்டர் நீருக்கு, ஒரு லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

முள்ளங்கி நடவு செய்த 35\ம் நாளில் அறுவடைக்குத் தயாராகி விடும். நான்கு நாளுக்கு ஒரு அறுவடை என தொடர்ந்து ஏழு அறுவடை செய்யலாம். ஒரு முறைக்கு 300 கிலோ வீதம் 2,100 கிலோ வரை முள்ளங்கி கிடைக்கும்.

கடலை விதைத்த 65-ம் நாளில் இருந்து விழுது இறங்கி காய் வைக்க ஆரம்பித்து விடும். 90-ம் நாளில் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட வேண்டும். தண்ணீர் வற்றிய பிறகு, ஒரு கடலைச் செடியைப் பறித்து காயை உடைத்துப் பார்க்க வேண்டும். தொலியின் உள்பகுதி கறுப்பாக இருந்தால், நிலத்தை ஈரப்படுத்திவிட்டு, அறுவடை ஆரம்பிக்க வேண்டியதுதான். ஒரு செடிக்கு

கடலையோடு கூட்டணிப் போடும் முள்ளங்கி!

20 முதல் 40 காய்கள் கிடைக்கும். காய்களை ஆய்ந்த பிறகு கடலைக் கொடிகளைக் காயவைத்து ஆடு, மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தலாம். அல்லது நிலத்துக்கு உரமாகவும் கொடுக்கலாம். 66 சென்டில் 14 மூட்டைகள் வரை (40 கிலோ மூட்டை) கடலை கிடைக்கும்.'

சாகுபடிப் பாடம் முடிந்ததும், ''முள்ளங்கியை கிலோ 5 ரூபாய்க்கு வித்ததுல மொத்தம் 10,500 ரூபாய் கிடைச்சுது. கடலையை ஒரு மூட்டை ஆயிரம் ரூபாய்னு கேட்டாங்க. அது கட்டுப்படியாகாத விலைங்கறதால... எண்ணெய், வறுகடலைனு நானே மதிப்புக் கூட்டிட்டேன். 14 மூட்டைக் கடலையை உடைச்சதுல, 280 கிலோ பருப்பு கிடைச்சது. அதுல 130 கிலோ பருப்பைச் செக்குல ஆட்டினேன். 57 லிட்டர் எண்ணெய், 72 கிலோ புண்ணாக்கு கிடைச்சுது. எண்ணெய் ஒரு லிட்டர் 110 ரூபாய்னும், புண்ணாக்கு கிலோ 20 ரூபாய்னும் வித்துட்டேன். மீதி 150 கிலோ பருப்பை வறுத்து, ஒரு கிலோ 90 ரூபாய்னு வித்துட்டேன். இதனால எனக்குக் கூடுதல் லாபமா 5,000 ரூபாய் கிடைச்சுது'' என்றார் சந்தோஷமாக.

கடலையோடு கூட்டணிப் போடும் முள்ளங்கி!

படங்கள் மு.நியாஸ் அகமது

கடலையோடு கூட்டணிப் போடும் முள்ளங்கி!

தஞ்சாவூரான் பூண்டு கரைசல்

தஞ்சாவூரான் பூண்டு (இதை அரிவாள்மனைப் பூண்டு, ரயில் பூண்டு, மண்ணெண்ணெய் பூண்டு என்றும் அழைப்பார்கள்) கால் கிலோ எடுத்துக் கொண்டு, துண்டுத் துண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும். 2 லிட்டர் கோமூத்திரம், 50 மில்லி வேப்பெண்ணெய், 25 மில்லி புங்கன் எண்ணெய், 50 மில்லி மீன் அமிலம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, இதில் பூண்டுத் துண்டுகளைப் போட்டு 12 மணி நேரம் ஊற வைத்தால், கரைசல் தயார்.

பழக்கரைசல்

அழுகிய அனைத்து வகைப் பழங்களையும்
10 கிலோ அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஒரு பாத்திரத்தில் இட்டு, நன்றாக பஞ்சாமிர்தம் போன்று பிசைந்து, 3 லிட்டர் கோமூத்திரம், 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஒரு வாரம் ஊற வைத்தால்... பழக்கரைசல் தயார்!

கடலையோடு கூட்டணிப் போடும் முள்ளங்கி!
கடலையோடு கூட்டணிப் போடும் முள்ளங்கி!