Published:Updated:

கேழ்வரகு உற்பத்தியில் கலக்கும் கிருஷ்ணகிரி!

கேழ்வரகு உற்பத்தியில் கலக்கும் கிருஷ்ணகிரி!
சாதனை
எஸ்.ராஜாசெல்லம்
மாநிலத்தில் முதலிடம்... கேழ்வரகு உற்பத்தியில் கலக்கும் கிருஷ்ணகிரி!
கேழ்வரகு உற்பத்தியில் கலக்கும் கிருஷ்ணகிரி!
கேழ்வரகு உற்பத்தியில் கலக்கும் கிருஷ்ணகிரி!

கேழ்வரகு (ராகி) உற்பத்தியில் சத்தமில்லாமல் சாதனை செய்து கொண்டிருக்கிறார்கள், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள். கடந்த சில ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் கிருஷ்ணகிரி மாவட்டம்தான் கேழ்வரகு உற்பத்தியில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்திருக்கிறது.

ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டமாக இருந்த காலம் வரை, உற்பத்தியில் மாநிலத்தில் முதலிடம் பிடித்துக் கொண்டிருந்தது தர்மபுரி. இதற்கு முக்கிய காரணமே ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய இரண்டு தாலூகாக்கள்தான். இவையிரண்டும் புதிதாக உருவான கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள் சேர்ந்துவிடவே... அந்தப் பெருமை இப்போது கிருஷ்ணகிரிக்கு கிடைக்க ஆரம்பித்துவிட்டது.

ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை தாலூகா பகுதிகளில் பெரும்பாலும் மானாவாரி நிலங்கள். இங்குள்ள மண்வளமும், இயற்கை வளமும் கேழ்வரகு பயிருக்கு உகந்ததாக இருப்பதால், அது செழித்து வளர்கிறது. ஒருகாலத்தில் நம் பிரதான உணவுப்பண்டமாக இருந்த கேழ்வரகின் உள்ளூர் பயன்பாடு தற்போது குறைந்திருந்தாலும்... பிஸ்கட், ஊட்டச்சத்து பானங்கள் தயாரிக்க தேவையான மாவுப்பொருட்கள் ஆகியவற்றின் தயாரிப்பிலும், உணவுக்காகவும், கால்நடைகளுக்கும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

ஓசூர் தாலூகாவுக்கு உட்பட்ட பாகலூர், பெலத்தூர், தட்டிகானப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி மற்றும் தேன்கனிக்கோட்டை தாலூகாவுக்கு உட்பட்ட மலைபகுதிகளான கெலமங்கலம், தளி, அஞ்செட்டி, பெட்டமுகிலாளம், உரிகம், எருமத்தனஅள்ளி, கேரெட்டி உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி முறையில் பயிரிடப்பட்ட கேழ்வரகு அறுவடை ஏறத்தாழ முடிந்து விட்டது. இறவை முறையில் பரவலாகப் பயிரிடப்பட்ட கேழ்வரகு தற்போது அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

கேழ்வரகு உற்பத்தியில் கலக்கும் கிருஷ்ணகிரி!

அஞ்செட்டியை அடுத்த புதூரில் கேழ்வரகு பயிரிட்டிருக்கும் தீர்த்தகிரி, ''இந்த வட்டாரத்துல தலைமுறை தலைமுறையா ஆரியம் (கேழ்வரகைத்தான் இப்படி சொல்கிறார்) பயிர் பண்ணுறோம். ஒரு ஏக்கருக்கு 12 படி ஆரியம் விதையில நாத்து விடுவோம். 14 முதல் 18 நாள் நாத்து வளர்ந்ததும், ஏற்கெனவே உழவடிச்சு வெச்சுருக்குற நிலத்துல நடவு போடுவோம். பாசன வயல்ல நட்டா... யூரியா, டி.ஏ.பி. உரங்களை லேசா போடுவோம். மானாவாரி நடவுல பெரும்பாலும் உரம் போடுறதில்லை. நடவுக்கு முன்ன ஆடு, மாடுகளை வெச்சு பட்டி போடுற எருவுதான் அதுக்கு உரம். பெரும்பாலும் பூச்சிமருந்தும் தெளிக்க மாட்டோம். இதுக்கு பெரிய முதலீடு இல்லைங்கிறதால விளைச்சல் குறைஞ்சாகூட பெரிய அளவில் நஷ்டமில்லை.

கேழ்வரகு உற்பத்தியில் கலக்கும் கிருஷ்ணகிரி!

மூணு மாசத்துல அறுவடைக்கு வந்துரும். விளைச்சலைப் பொறுத்து ஒரு ஏக்கருக்கு ஏழு முதல் பத்து மூட்டை (ஒரு மூட்டை நூறு கிலோ கொண்டது) ஆரியம் கிடைக்கும். இப்போதைய நிலவரப்படி கிலோ பத்து ரூபாய் வரைக்கும் விற்குது. பத்து மூட்டைக்கு பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும். அது, இதுனு செலவைக் கழிச்சா... குறைஞ்சது ஏழாயிரம், எட்டாயிரம் கையில நிக்கும்'' என்று சொன்னார்.

ஓசூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் வேளாண் உதவி இயக்குநரான நாகராஜிடம் நடப்பாண்டு கேழ்வரகு விளைச்சல் பற்றி கேட்டபோது, ''இந்த மாவட்டத்துல ஒவ்வொரு வருஷமும் சுமார் அறுபதாயிரம் ஹெக்டேர் பரப்பில் இந்த அறுவடை நடக்குது. பெரும்பாலும் மானாவாரிதான். குறிப்பா... மலை சார்ந்த ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளோட இயற்கை அமைப்பும் இதோட அதிக விளைச்சலுக்கு முக்கிய காரணம்.

இங்குள்ள காடுகளை நம்பி பெரும்பாலான விவசாயிங்க ஆடு, மாடுகளை வளர்க்குறாங்க. அதன் மூலம் கிடைக்குற எரு, கேழ்வரகுக்கு நல்ல தொழுவுரமாகுது. மானாவாரியில ஒரு ஹெக்டேருக்கு ரெண்டு டன் வரையும், இறவையில் ஒரு ஹெக்டேருக்கு மூணு முதல் நாலு டன் வரையும் மகசூல் எடுக்க முடியுது.

கேழ்வரகு உற்பத்தியில் கலக்கும் கிருஷ்ணகிரி!

கிருஷ்ணகிரியில் மட்டும் நடப்பு வருஷத்துல ஒரு லட்சத்து இருபதாயிரம் டன் உற்பத்தி செய்யப்பட்டிருக்கு. கடந்த வருஷத்தை விட 37 ஆயிரம் டன் அதிகம்'' என்று பெருமையாகச் சொன்னவர்,

''எங்க துறை மூலமா 'நிறிஹி28' என்ற மேம்படுத்தப்பட்ட உயர் விளைச்சல் ரகத்தை சிபாரிசு செய்யுறோம். இந்த ரகம்

120 நாட்கள்ல அறுவடைக்கு வந்துரும். குறிப்பா பனிக் காலத்துல கேழ்வரகுல தீவிர தாக்குதல் நடத்தற குலைநோய்த் தாக்குதல் இந்த ரகத்துல அறவே கிடையாது. அதோடு வறட்சியையும் தாக்குப்பிடிச்சு வளரும். இதோட தாள் சுவையா இருக்கறதால கால்நடைகளும் விரும்பி சாப்பிடும்.

கேழ்வரகுக்கு ஊடுபயிரா மொச்சை, அவரை, துவரை, ஆமணக்கு, கடுகு இதையெல்லாம் பரவலா விதைக்கலாம். இதுவும் விவசாயிகளுக்கு ஒரு கூடுதல் வருமானமா அமையுது'' என்றார் கூடுதல் உற்சாகத்துடன்.

இறவையிலும் மானாவாரியிலும்!

கேழ்வரகு உற்பத்தியில் கலக்கும் கிருஷ்ணகிரி!

கேழ்வரகு சாகுபடி குறித்து வேளாண் உதவி இயக்குநர் நாகராஜ் தந்த தொழில்நுட்பத் தகவல்கள் இறவை சாகுபடிக்கு ஓர் ஏக்கருக்கு இரண்டு கிலோ விதையைப் போட்டு, மேட்டுப்பாத்தி அமைத்து நாற்று விடவேண்டும். 13 முதல் 15 நாட்களுக்குள் நாற்றை எடுத்து ஒவ்வொரு பயிராக நடவு செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை 22.5 செ.மீட்டர் முதல் 30 செ.மீட்டர் வரை (மண் வளத்தைப் பொறுத்து) இடைவெளி விடவேண்டும். நாற்றுக்கு நாற்று 15 முதல் 22.5 செ.மீட்டர் வரை இடைவெளி இருக்க வேண்டும்.

மானாவாரி நிலத்தில் நாற்று தேவையில்லை. உழவு செய்து அப்படியே விதைத்து விடவேண்டும். ஏக்கருக்கு எட்டு கிலோ விதை தேவைப்படும். சுமார் 25 நாட்கள் பயிர் வளர்ந்ததும், மாட்டு ஏர் மூலம் ஓட்டி பயிரைக் களைத்து விடவேண்டும். இப்படிச் செய்வதால் சிறப்பான விளைச்சல் கிடைக்கும். பயிர்கள் அடர்த்தியாக இருந்தால், கதிர்கள் சிறுத்துப் போய் விளைச்சல் குறையும்.

கேழ்வரகு உற்பத்தியில் கலக்கும் கிருஷ்ணகிரி!
கேழ்வரகு உற்பத்தியில் கலக்கும் கிருஷ்ணகிரி!
                            
      
பின் செல்ல