Published:Updated:

மண்புழு மன்னாரு

மண்புழு மன்னாரு
   
மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

குட்டையும், நெட்டையுமான காளை மாடுகள ஏர்லயும், வண்டியிலயும் கட்டுனா, நெட்டையான மாட்டுக்கு மட்டும் அதிகமான சுமை போகும். அதனால மாட்டோ முன் கழுத்துல சீழ் வெச்சு புண் வந்துடும். இதை கவனிக்கமா விட்டா... மாடு படுத்த படுக்கையாகிடும். புண்ணை குணமாக்க, மஞ்சள் அரளி இலையை அரைச்சி தினமும் ரெண்டு வேளைக்கு பத்து போடுங்க. மூணு நாளைக்குள்ள புண்ணு இருந்த இடம் தெரியாம மறைஞ்சுடும்.


மண்புழு மன்னாரு

'தலைமுடி எதுக்கும் உதவாது'னு நினைச்சுக்கிட்டு இருந்தா... அதை மறந்துடுங்க. தலைமுடியை கழிவுநீர்ல ஒரு நாள் முழுக்க போட்டு வெச்சுருந்தா, அந்தத் தண்ணிய தலைமுடி சுத்திகரிச்சுடும் தெரியுமோ?! இப்படி சுத்திகரிக்கப்பட்டத் தண்ணியை செடி, கொடிகளுக்குப் பாய்ச்சுனா... அருமையான விளைச்சலுக்கு உத்தரவாதம்னு
வட இந்தியாவுல கண்டுபுடிச்சு பயன்படுத்தறாங்க.


மண்புழு மன்னாரு

வ்வொரு பயிருக்கும் ஒவ்வொருவிதமா இடைவெளி விடணும்கிறதுதான் அடிப்படை. இதை சுலபமா மனசுல ஏத்தி வெச்சுக்கறதுக்காக... இப்படி சொல்லி வெச்சுருக்காங்க நம்ம முன்னோருங்க. அதாவது- 'நண்டு ஓட குறுவை, நரியோட சம்பா, காராம் பசு ஓட கரும்பு, வண்டியோட வாழை, தேரோட தென்னை...' இதன்படி சரியான இடைவெளிவிட்டு பயிர் செய்யுறப்பதான்... நல்ல விளைச்சல் கிடைக்கும்கிறது அவங்களோட அனுபவப் பாடம்!


மண்புழு மன்னாரு

யற்கை விவசாயம் செய்றவங்களுக்கு ரசாயன முறையில மண் பரிசோதனை செய்யுறதுல நம்பிக்கை இருக்காது. அதுக்காக, மண்ணு நல்லா இருக்கானு தெரிஞ்சுக்காம இருக்க முடியுமா? ஒரு லிட்டர் அளவு இருக்கிற கண்ணாடி பாட்டில் எடுத்துக்குங்க. அதுல உங்க நிலத்தோட மண்ணை அரை கிலோ போடுங்க. பாட்டில் நிறையற வரை தண்ணி ஊத்துங்க. ஒரு மணி நேரம் கழிச்சி பாட்டிலைப் பார்த்தா... அடிப்பகுதியில மணலும், மேல் பகுதியில மண்ணும் இருக்கும். மணலோட அளவு அதிகமா இருந்தா, நிலத்துல சத்துக் குறைவா இருக்குனு அர்த்தம். மண் அதிகமா இருந்தா, நிலம் வளமா இருக்குனு புரிஞ்சுக்குங்க.


மண்புழு மன்னாரு

வெங்காயத்தில் இலைப்பேன் தாக்குதல் வந்தா, ஒட்டுமொத்த மகசூலுக்கும் பாதிப்பு வந்துடும். அதைக் கட்டுப்படுத்த புகையிலைக் கரைசல் கைகொடுக்கும். 5 கிலோ புகையிலையை 15 லிட்டர் தண்ணியில கலந்து 24 மணி நேரம் ஊற வெச்சா... கரைசல் தயார். ஒரு டேங்குக்கு அரை லிட்டர் கரைசல்ங்கற விகிதத்துல கலந்து தெளிங்க. அடுத்த, ஒரு வாரம் கழிச்சி மறுபடியும் இதே அளவு தெளிச்சா... இலைப்பேன் இல்லாம போயிருக்கும்.


மண்புழு மன்னாரு

மணக்கு பயிர் செய்யுறப்ப 'இலைக் கருகல் நோய்' வந்து தாக்கும். 'இலைதானே கருகுது'னு சும்மா விட்டுற முடியாது. இலையைப் பாதிச்சா... ஒட்டுமொத்த செடியும், ஆட்டம் கண்டுடும். அதுக்கு ஊமத்தை இலைக் கரைசல் கைகொடுக்குமுங்க. பத்து கிலோ ஆமணக்கு விதையைப் பயன்படுத்தறதா இருந்தா... ஒரு கிலோ ஊமத்தை இலையைப் பயன்படுத்தி கரைசல் தயார் செய்ங்க. அதுல ஆமணக்கு விதையை 24 மணி நேரம் ஊற வெச்சு, பிறகு நிழல்ல உலர்த்தி விதைப்பு செய்யுங்க. நோய், நொடி தாக்காம இருக்கறதோட... செடியும், ஜோரா வளர்ந்து விளைச்சல் கொடுக்கும்.


மண்புழு மன்னாரு

சில மாடுகளுக்கு எப்பப் பார்த்தாலும் மூக்குல தண்ணியா கொட்டும். இதைக் கண்டுக்காம விட்டா... விதம்விதமான நோய்களுக்கு வெத்தலை-பாக்கு வெச்சு அழைச்ச கதையாகிடும். இப்படி தண்ணி வடியறதைக் குணப்படுத்த... அஞ்சு மிளகு எடுத்து, கைப்பிடி அளவு வேலிப்பருத்தி இலையோட சேர்த்து அரைச்சுடுங்க. இதோட நூறு மில்லி தண்ணியைக் கலந்து, தினமும் மூணு வேளை கொடுங்க. இப்படி மூணு நாளைக்கு கொடுத்துட்டு வந்தா... மூக்குல தண்ணிக் கொட்டுறது நின்னுடும்!


மண்புழு மன்னாரு

சாலாப் பால், பாதாம் பால்னு நாம மட்டும் ருசியா குடிக்கிறோம். அந்தப் பாலைக் கொடுக்கிற மாட்டுக்கும் மசாலா உருண்டை கொடுக்கலாம் தெரியுமோ..! மஞ்சள், மிளகு, வசம்பு, சித்தரத்தை, பேரரத்தை, கஸ்தூரி மஞ்சள், காட்டுச் சீரகம், கடுகுரோகிணி, வாயுவிலங்கம், குங்குமப்பூ, செண்பகமொக்கு, கோரைக் கிழங்கு, பரங்கிப் பட்டை, ஓமம், கண்டத் திப்பிலி, அரிசித் திப்பிலினு எல்லாத்தையும் பத்து கிராம் வீதத்துல எடுத்து, பொன் வறுவலா வறுத்து எடுத்துடுங்க. அதை உரல்ல போட்டு இடிச்சி, சலிச்சி பத்திரப்படுத்துங்க. மாடுகளுக்கு சுகம் இல்லாம இருக்குறப்ப... சோடா உப்பு கலந்த தண்ணியில இந்த மாவு மொத்தத்தையும் சேர்த்து, உருண்டைப் பிடிச்சு கொடுங்க. மாடுங்க நோய், நொடி இல்லாமா திடகாத்திரமா இருக்கும்.


மண்புழு மன்னாரு

ப்பவும் ஆடு, மாடுங்கள கவனமா பார்த்துக்கிட்டு இருக்கணும். மேய்ச்சலுக்குப் போறப்ப அடிபட்டா, அது புண்ணாகிடும். பல நாளைக்கு கவனிக்கமா விட்டுட்டா... புண்ணுல புழு வைச்சிடும். இப்படியாகிட்டா... புண்ணுக்குள்ள இருக்கிற புழுங்கள முதல்ல வெளியில துரத்தணும். அப்பதான் புண்ணு சீக்கிரமா ஆறும். இதுக்கு எட்டி இலைகள பறிச்சி, மையா அரைச்சி, புண்ணுல பத்து போடுங்க. புண்ணுல ஈ, மொய்க்கமா இருக்க, சுத்தமான வெள்ளைத் துணியால கட்டுப்போடுங்க. சில நாட்களுக்கு இதை செஞ்சுட்டு வந்தா... புழுவெல்லாம் வெளியில வந்துடும். புண்ணும் ஆறிடும்!

 

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு
                            
      
பின் செல்ல