மகசூல்

என்.சுவாமிநாதன்

நான்காம் ஆண்டு சிறப்பிதழ்

'ஹெலிகோனியா"... திறந்தவெளியில் 'தில்'லான கொய்மலர் சாகுபடி!

தென்னை, வாழைக்கு உன்னத ஊடுபயிர்..!

தென்னையை வாடல்நோய்க்கும், வாழையை சூறைக்காற்றுக்கும் காவு கொடுத்துவிட்டு கண்ணீரோடு புலம்பும் விவசாயிகள் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகம். என்றாலும், வந்தவரை லாபம் என்று இந்த இரண்டு பயிர்களையும் தொடரத்தான் செய்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் வாழைக்கு ஊடுபயிராக கொய்மலர்களை சாகுபடி செய்து, குஷியான வருமானம் ஈட்டி வருகிறார், தக்கலையிலிருந்து 2.கி.மீ. தொலைவில் உள்ள வெட்டுக்காட்டுவிளையைச் சேர்ந்த சசிகுமார். வழக்கமாக பசுமைக் குடிலுக்குள் வளரும் கொய்மலர்களை வாழைக்கு இடையிலும், திறந்தவெளியிலும் சாகுபடி செய்து சாதித்துக் கொண்டிருக்கிறார் இந்தப் புதுமை விவசாயி.

வாழைக்கேற்ற கொய்மலர் வாழை...!

மலர் பறிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சசிகுமாரை சந்தித்தபோது, உற்சாகம் பொங்கப் பேசினார்.

''எனக்குனு சொந்தமா நிலம் கிடையாதுங்க. 75 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்துதான் வாழை போட்டிருந்தேன். அப்பதான், ஆராய்ச்சி நிலையத்துக்காரங்க (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தோவாளை மலர் ஆராய்ச்சி நிலையம்) அழகுப் பூவா பயன்படுத்துற 'ஹெலிகோனியா’ ரகத்தை அறிமுகப்படுத்தி நடவு செய்யச் சொன்னாங்க. 'இதுவும் வாழை மாதிரியான ஒரு தாவரம்தான். இலையும்கூட அதே மாதிரி வரும். ஆனா, இது முக்கியமா பயன்படறது பூவுக்காகத்தான். அதாவது கொய்மலர்னு சொல்லப்படுற அலங்காரப் பூவுக்காக இது பயன்படுது. இதுக்கு தனியா பசுமைக் குடில் அமைக்கத் தேவையில்ல. தென்னை, வாழைக்கு ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் செய்யலாம்'னு சொன்னாங்க. சரினு 75 சென்ட்ல வாழைக்கு ஊடுபயிரா நடவு செஞ்சேன். அது அருமையா வந்துச்சு. அதனால இப்ப வாழையை 50 சென்ட் நிலத்துல சுருக்கி, அதுல ஊடுபயிராவும்... 25 சென்ட்ல தனிப் பயிராவும் கொய்மலரை சாகுபடி செஞ்சுகிட்டிருக்கேன்.

ரகரகமா இருக்குது பூ!

தோட்டங்களுக்கு வேலி அமைக்குற வேலைக்காக அடிக்கடி திருவனந்தபுரம் போயிட்டு வருவேன். அப்படி போயிட்டு வர்றப்பல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கொய்மலர் செடிகளை வாங்கிட்டு வந்து நட்டிருக்கேன். 5 ரூபா செடியிலிருந்து 500 ரூபா செடி வரைக்கும் ரகம் வாரியா நட்டிருக்கேன். எங்கிட்ட இருக்கும் ரகத்துல சிலது தினசரி பூக்கும். சில ரகங்கள் வாரம் ஒரு முறை பூக்கும். 6 மாதத்துக்கொரு முறை பூக்கிற ரகங்களும் இருக்கு. நான் ட்ராபிக்ஸ், வேகினேரியா (ரெட்), வேகினேரியா (மஞ்சள்), அங்குஸ்டா, தக்கோமி, கென்யா ரெட், ஃபையர் பேர்ட், ஃபையர்பிளாஷ், ஸ்கார்லெட், செக்ஸி பிங், ஷீ, கரிபியா, ஆலன்கார்லே, கோல்டன் டார்ச், ஐரீஷ்னு கிட்டத்தட்ட 45 ரகங்கள் போட்டிருக்கேன். ஒரே ரகத்தை நடவு செய்தா... சந்தை வாய்ப்பு இருக்காது. பல ரகங்களையும் கலந்து நடுறப்பதான், தோட்டத்துல பல ரக பூக்களும் இருக்கும். வியாபாரிங்க கேட்குற 'பூ’வையும் கொடுக்க முடியும். ரகத்துக்கேற்ப விலையும் மாறுபடும்.

ஹெலிகோனியா ரகத்தை கொலம்பியா நாட்டிலிருந்து இறக்குமதி பண்றாங்க. ரகத்தைப் பொறுத்து 8 ரூபாய்ல இருந்து 800 ரூபாய் வரைக்கும் செடிகள் விக்குது. ஆனா, ஒரு தடவை செடிகளை வாங்கி நட்டாலே, அதில் இருந்து பக்கச் செடிகள் முளைச்சு வரும்'' என்று முன்னுரை கொடுத்தவர், தான் கொய்மலர் சாகுபடி செய்த முறைகளைப் பற்றி சொன்னதைப் பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

ஏக்கருக்கு 2,500 செடிகள்!

''கொய்மலர்களை நல்ல மழையுள்ள சமயங்களில் நடவு செய்யலாம். செடிக்கு, செடி நான்கு அடியும், வரிசைக்கு வரிசை நான்கு அடியும் இடைவெளி விடுவது நல்லது. நடவு செய்யும்போது, ஒரு அடி ஆழம், இரண்டு அடி அகலத்தில் குழி எடுத்து, தொழுவுரம் அல்லது கோழி எருவைப் போட்டு நடவேண்டும். தனிப்பயிராக செய்யும்போது ஒரு ஏக்கருக்கு 2,500 செடிகள் வரை நடவு செய்யலாம். வாழையில் ஊடுபயிராக 50 சென்டிலும், தனிப்பயிராக 25 சென்டிலும் மொத்தம் 1,225 செடிகளை நடவு செய்துள்ளேன். நடவு செய்தபின் வாரம் ஒருமுறை நீர் தேங்காத அளவுக்கு

பாசனம் செய்யவேண்டும். நடவு செய்த 85-ம் நாளில் மண்ணை நன்றாகக் கிளறிவிட்டு, செடியினுடைய அடிபாகத்தில் (மூட்டில்) சிறிய பாத்தி போன்று அமைத்து, ஒரு கைப்பிடி அளவு பாக்டம்பாஸ் மற்றும் பொட்டாஷ் கலவையைப் போட வேண்டும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இடையிடையே தொழுவுரம் அல்லது கோழிஎருவையும் போட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

முறையான பராமரிப்பு இருந்தால்... 90-ம் நாள் 'பூ’ பூக்கத் துவங்கும். மொட்டு விட்டதிலிருந்து 15-ம் நாளில் அறுவடை செய்யலாம். பக்கச்செடிகள் மூலம் படிப்படியாக பூக்கள் அதிகரித்து முதல் ஆண்டில் 1,400 பூ வரை கிடைக்கும். ஆண்டின் முடிவில் ஒவ்வொரு செடியிலிருந்தும், குறைந்தது ஒன்பது பக்கச்செடிகள் வரை வளரும். இதனால், ஆண்டுக்கு ஆண்டு மகசூல் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

என் தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு வயது இரண்டு. ஹெலிகோனியா ரகத்தில் இதுவரை எந்த நோயும் தாக்கியதில்லை. 'வெளவால்’ மட்டும் 'பூ’வின் நிறத்தால் கவரப்பட்டு அடிக்கடி 'பூ’வைக் கடிக்கும். இதனால பெரிய பாதிப்பு இருக்காது.

தென்னை, வாழைக்கு உன்னத ஊடுபயிர்!

தென்னை, வாழைக்கு இடையே ஹெலிகோனியா ரகங்களை ஊடுபயிராகவும் பயிர் செய்யலாம். தென்னையில் ஊடுபயிராக செய்யும்போது ஏக்கருக்கு 2,300 செடியும், வாழையில் 1,000 செடிகளும் நடவு செய்யலாம். ஆனால், வாழைக்கு ஊடுபயிராக ஹெலிகோனியா நடும்போது, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வாழையைப் போட முடியாது'' என்று சொல்லி முடித்த சசிகுமார்,

''அறுவடை செய்த கொய்மலரை திருவனந்தபுரம் வியாபாரிங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். ஒவ்வொரு ரகத்துக்கு ஏத்த மாதிரி விலையில மாறுபாடு இருக்கும். குறைந்தபட்சம் ட்ராபிக்ஸ், ஆங்குஸ்டா ரகங்கள் ஒரு பூ ஏழு ரூபாயும், வேகனீரியா (ரெட்) பத்து ரூபாயும், ஐரீஸ் இருபது ரூபாயும், செக்ஸிபிங் முப்பது ரூபாயும் விலைபோகுது. பல ரகங்களையும் போட்டிருக்கறதால குத்தகைப் பணமெல்லாம் கொடுத்தது போக, குறைந்தபட்சம் மாதம் 2,500 ரூபாய்க்கு குறையாம வருமானம் வருது'' என்றார் மகிழ்ச்சியுடன்.

மணல் கலந்த வண்டலில் வளமாக வளரும்..!

கொய்மலர்கள் குறித்து தோவாளை மலரியல் ஆராய்ச்சி நிலையத்தின் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர். முனைவர். சொர்ணப்ரியாவிடம் பேசினோம்.

''ஹெலிகோனியா மலர்கள் இப்பகுதியில் நல்ல மகசூலை தருகிறது. மழை தொடங்கும் நேரமான ஜூன் மாதம் நடவுக்கு ஏற்றக் காலம். ஹெலிகோனியாவில் உலகளவில் 422

ரகங்கள் உள்ளன. அவற்றில் 40 ரகங்கள் இந்த மாவட்டத்தில் நல்ல மகசூலைத் தருகின்றன. இதில் 28 ரகங்களை வணிக ரீதியாக பயன்படுத்தலாம். இம்மலர்களுக்கு 25 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அவசியம். 6 முதல் 7 வரை கார அமிலத் தன்மையுடைய மண்ணில் நன்றாக வளரும். குறிப்பாக 6.2 கார அமிலத் தன்மையுள்ள மண்ணில் நன்றாக வளர்கிறது. மணல் கலந்த வண்டல் மண்ணில் நன்றாக வளரும். குறிப்பாக தமிழகத்தில் வாழை விளையும் அனைத்து மண்ணிலும் இதை சாகுபடி செய்யலாம். நல்ல தண்ணீர் வசதியிருந்தால், பூ நன்றாக வரும். தண்ணீர் வசதி குறைந்தால், பூவின் அளவு சிறியதாக வரும்.

விற்பனையில் வில்லங்கமில்லை...!

இந்த ரகத்தில் சில பூக்கள் செங்குத்தாகவும், சில தலைகீழாகவும் இருக்கும். வளர்ச்சியைப் பொறுத்த மட்டில் சில ரகங்கள் குட்டையாகவும், சில நெட்டையாகவும் வளரும். குட்டை ரகத்தில் 'பூ’ செங்குத்தாக மற்றும் சாய்வாக இருக்கும். இவற்றுக்கு செடிக்கு செடி இரண்டு அடி இடைவெளி விட்டால் போதும். உயரமான ரகங்களில் பூக்கள் தலைகீழாக தொங்கும். இதற்கு செடிக்கு செடி நான்கு அடி இடைவெளி விட வேண்டும்'' என்றவர்,

''ஹெலிகோனியா ரகங்களை கொய்மலர்களாக பயன்படுத்தலாம். செடி மற்றும் பூக்களுக்கு விற்பனை வாய்ப்பு இருப்பதால், நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை. ரெட் கிரிஸ்மஸ், ட்ராபிக்ஸ், ஐரிஷ், செக்ஸிபிங், பெட்ரோ ஆர்டிஸ் ரகங்களுக்கு நல்ல சந்தை

வாய்ப்பு உள்ளது. இவை பூங்கொத்து, மேடை அலங்காரம், வணிக நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களில் அழகுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. கன்னியாகுமரியிலிருந்து, கேரளாவுக்கு செல்லும் இம்மலர்களுக்கு ஐந்து ரூபாயிலிருந்து முப்பது ரூபாய் வரை விலை கிடைக்கிறது. சந்தை வாய்ப்பைப் பொறுத்தவரை சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், மும்பை, கல்கத்தா, என பெருநகரங்களை ஒட்டியுள்ள விவசாயிகளுக்கு வாய்ப்பு நன்றாக உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அருகில் திருவனந்தபுரம் இருப்பதால் விற்பனையில் சிக்கல் இல்லை. மற்ற மாவட்ட விவசாயிகள் ஹோட்டல், வணிக நிறுவனங்களில் ஆர்டர் பிடித்து சந்தை வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு சோதனை அடிப்படையில் பயிரிட்டு பின் நல்ல பலனைப் பெறலாம்'' என்று ஆலோசனைகளையும் சொன்னார்.

பூ விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்..!

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பகுதியை, பூக்களின் பூமி என்றே சொல்லலாம். அந்தளவுக்கு இப்பகுதி முழுவதும் 'பூ’ சாகுபடி நடக்கிறது. பாரம்பர்யம் மிக்க பூ சந்தையும் இங்கு உண்டு. இப்பகுதி விவசாயிகளின் நெடுநாளைய கோரிக்கையை ஏற்று கடந்த 2008-ம் ஆண்டு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இங்கு மலரியல் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் பாரம்பர்ய ரகங்கள் மற்றும் புதிய ரகங்களைக் கண்டுபிடித்தல், உற்பத்திப் பெருக்கம், தொழில்நுட்பங்கள், பராமரிப்பு முறைகள், பூச்சி, நோய் மேலாண்மை, அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம், தென்னை, வாழைக்கிடையில் பூக்களை ஊடுபயிராக பயிரிடுதல் போன்றவை குறித்த தொடர் ஆராய்ச்சிகளும், விவசாயிகளுக்கு கற்றுக் கொடுத்தலும் நடைபெறுகிறது. இங்கும் 'ஹெலிகோனியா' ரகங்கள் ஆய்வுக்காக நடவு செய்யப்பட்டுள்ளன. பூக்களுக்காக தமிழகத்தில் இயங்கும் ஒரே ஆராய்ச்சி மையம் இதுவே. மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் சந்தேகங்களுக்கு இங்கு விளக்கம் பெறலாம். ஆராய்ச்சி நிலைய தொலைபேசி 04652-285009