மகசூல்

நந்தினி செந்தில்நாதன்

"சின்ன வெள்ளாமை...தோதான வருமானம் !"

"ஏக்கர் கணக்கில் ஒரே விவசாயம் செஞ்சி ஏமாறுறதை விட அஞ்சு சென்ட், பத்து சென்ட், அரை ஏக்கர்னு இருக்குற இடத்தை பல பாகமா பிரிச்சு, விதவிதமான பயிரை வச்சா... ஒண்ணு கைவிட்டாலும், ஒண்ணு தூக்கி விட்டுடும். அதுக்கு என் தோட்டம்தான் உதாரணம்" என்கிறார் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அய்யம்பாளையம் புதூரைச் சேர்ந்தவர் சின்னச்சாமி.

இவர்... தக்காளி, பீட்ரூட், அரசாணி, பூசணி, பாகல், புடலை, வெங்காயம், கீரை, சாம்பார் வெள்ளரி என ஒரே நேரத்தில் ஒன்பது வகையான காய்கறிகளை பயிரிட்டு அறுவடை செய்துகொண்டிருக்கும் முன்னோடி விவசாயி.

"எனக்கு கிணத்துப் பாசனத்துல ஏழு ஏக்கர் பூமியிருக்குதுங்க. ரெண்டு ஏக்கர்ல தென்னை காய்க்குது. மத்த நிலத்தில வெங்காயம், மக்காச் சோளம், நிலக்கடலைனு ஏதாவது ஒரு வெள்ளாமை செஞ்சாலும் பெருசா வரும்-படியில்லை. இந்த சமயத்திலதான் இயற்கை விவசாயத்துல ஆர்வம் வந்திச்சு. பல இடங்களுக்குப் போயி மண்புழு உரம், பஞ்சகவ்யா, பூச்சி விரட்டி தயாரிக்குறதுக்கு கத்துகிட்டேன். அப்பதான் குறைஞ்ச நாள்ல வருமானம் எடுக்கறதுக்கு காய்-கறிதான் ஏத்த வெள்ளாமைனு தெரிஞ்சுகிட்டேன்.

பாகப் பிரிவினை..!

காய்கறி வெள்ளாமையை ஏக்கர் கணக்குல செய்யாம, பல பாகமா பிரிச்சு பலவிதமான காய்கறிகளை இயற்கை முறை-யில விளைய வைக்கிறேன்.

50 சென்ட்ல சின்ன வெங்காயம், 50 சென்ட்ல தக்காளி,

50 சென்ட்ல பெரிய வெங்காயம், 25 சென்ட்ல பீட்ரூட்,

5 சென்ட்ல நாட்டுரக அரசா-ணிக்-காய், 5 சென்ட்ல நாட்டு-ரகப் பூசணி, 5 சென்ட்ல சாம்பார் வெள்ளரி, 5 சென்ட்ல பீர்க்கன், 5 சென்ட்ல பாகல்,

5 சென்ட்ல புடலை, வெங்காயத்துல ஊடுபயிரா கொத்த-மல்லி, அங்கங்க பாசிப் பயிர், பீன்ஸ், பொரியல்-தட்டை, ஒரு பாத்தியில பாலக்கீரைனு பாத்து, பாத்து பயிர் பண்ணிகிட்டிருக்கேன். இதெல்லாம் ரெண்டு ஏக்கருக்-குள்ள முடிஞ்சுடும். மீதமிருக்-கற மூணு ஏக்கராவுல பி.ஏ.பி. வாய்க்கால்ல தண்ணி வந்தாத்தான் வெள்ளாமை செய்வேன்" என்று சொன்ன சின்னச்சாமி, தக்காளி அறு-வடை நடந்து கொண்டிருந்த நிலத்துக்கு அருகிலேயே நாட்டுத் தக்காளி நாற்றுகள் தளதளத்திருப்பதைச் சுட்டிக்காட்டி, தொடர்ந்தார்.

வேலையாள் பிரச்னை இல்லை...!

"இப்ப மகசூல்ல இருக்கற தக்காளி அறுவடை முடியுற நேரத்துல, இந்த நாத்து காய்ப்புக்கு வந்துடும். ஆக, என் தோட்டத்தில எப்பவும் தக்காளி மகசூல் இருந்துகிட்டே இருக்கும். சில காய்கறிகள் அறுவடை முடிஞ்சதும், மிளகாய், கத்திரி, நிலக்கடலைனு மாத்தி, மாத்தி பயிர் செய்வேன்" என்றவர் பாசன முறைகள் குறித்து பேசினார்.

"என் தோட்டத்துல தெளிப்புநீர்ப் பாசனம், சொட்டுநீர்ப் பாசனம் ரெண்டும் இருக்கு. தக்காளிக்கு சொட்டுநீர்ப் பாசனம்... வெங்காயம், பீட்ரூட்டுக்கு தெளிப்புநீர்ப் பாசனம் செய்றேன். இடையில கத்திரி, மிளகாய் நட்டா... அதுக்கு சொட்டுநீரும், நிலக்கடலை நட்டா தெளிப்பு நீரும் கொடுக்குற மாதிரி குழாய்க போட்டிருக்கேன்.

10 அடி இடைவெளியில அரை ஏக்கருக்கு தெளிப்புநீர்ப் பாசனம் அமைக்க 20 ஆயிரம் ரூபாய் செலவாகுது. ரெண்டடி முதல் மூன்றரை அடிவரை பயிருக்கு ஏத்தாப்ல அப்பப்ப மாத்திக்குற மாதிரி அரை ஏக்கருக்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க 14,000 ரூபாய் செலவு பிடிக்குது. எந்த வெள்ளாமையா இருந்தாலும், தொடர்ந்து

7 போகம் வரை இந்த சொட்டு நீர் கருவிகள் உழைக்கிறதால ஆள் பற்றாக்குறை பிரச்னை என்னை பெருசா பாதிக்கல. இந்தச் செலவை ஏழு போகத்துலயும் கொஞ்சம், கொஞ்சமா எடுத்துக்கலாம்.

வருஷத்துக்கு 60 ஆயிரம்...!

என்கிட்ட விளையிற காய்கள்ல மாதந்தோறும் முந்நூறு கிலோவை கேரளாவுல இருக்கிற ஒட்டல்காரர் நேரடியா வாங்கிக்கறாரு. இயற்கை-யில விளையறதால மார்க்கெட் விலையை விட ரெண்டு ரூபா அதிகமா கிடைக்குது. அவருக்கு வருஷம் முழுவதும் நான் காய் கொடுத்து-கிட்டிருக்கேன். ரெண்டு ஏக்கரில் காய்கறி சாகுபடி செய்ய வருஷத்துக்கு 30 ஆயிரம் வரை செலவாகுது. எல்லா பயிரையும் கொஞ்சம், கொஞ்சமா வெள்ளாமை செஞ்சிருக்குறதால அதிக வேலையாள் தேவைப்படாது. எல்லா வேலைகளையும் நாங்களே பாத்துக்குவோம். அதோட இயற்கையில செய்றதால இடுபொருள் செலவும் ரொம்ப குறைச்சல். வருஷத்துக்கு

10 டன் காய்கள் கிடைக்குது. சராசரி விலை கிலோவுக்கு 8 ரூபாய்னு வச்சிகிட்டாலும்,

80 ஆயிரம் கிடைக்கும். செலவு 30 ஆயிரம் போக, 50 ஆயிரம் வருமானம் கிடைக்கும். இதுபோக வெங்காயம் மூலம் 10 ஆயிரம் கிடைக்கும். ஆக.. ரெண்டு ஏக்கரிலிருந்து வருஷத்துக்கு 60 ஆயிரத்துக்குக் குறையாம வருமானம் கிடைக்குது" என்று சொன்னார்.

விதை நெல்லுக்கு கூடுதல் விலை!

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் வட்டாரம், செய்துங்கநல்லூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை நெல் விற்பனையின்போது விவசாயிகளிடம் கூடுதல் தொகை வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு படிக்கப்படுகிறது.

இதைப்பற்றி நம்மிடம் பேசிய ஜெபமணி என்ற விவசாயி, 'உரம், விதையெல்லாத்தையும் மானிய விலையில அரசாங்கம் கொடுக்குது. ஆனா, செய்துங்கநல்லூர், வல்லநாடு பகுதி வேளாண்மை விரிவாக மையங்கள்ல நெல் விதை வாங்க போனா... 50 கிலோ எடையுள்ள விதை மூட்டைக்கு 655 ரூபாய்னு பில் போட்டுட்டு, 905 வரையிலும் பணத்தை பிடுங்குதாங்க. எங்களுக்கான மானியத் தொகையை கோல்மால் பண்ணி எடுத்துடுதாங்க. எதுக்காக பணத்தை எடுக்கிறோம்னு பில்லுல எழுதறதே இல்ல. காலாவதியான உரத்தையெல்லாம் தலையில கட்டுறாங்க’ என்று புலம்பித் தள்ளினார்.

இது குறித்து வேளாண்மை உதவி இயங்குநரான ராஜன் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, ''விவசாயிக தர்ற பணத்துக்கு விதை போக, மீதியில நுண்ணுயிர் சத்துக்கள் அடங்கிய உயிர் உர பாக்கெட், மீதிக்கு இன்சூரன்ஸ் போட்டு கொடுக்கோம். கோல்மால் எதுவுமில்ல’’ என்று சொன்னார்.

-எஸ். சரவணப் பெருமாள்.
படங்கள் எல்.ராஜேந்திரன்

ஈரியோபைட் சிலந்தியை விரட்டும் கற்றாழை!

இரண்டு ஏக்கரில் இருக்கும் 14 வயதுடைய, 140 தென்னையும் சின்னச்சாமிக்கு வருமானம் கொடுத்து வருகிறது. தோப்பு முழுவதும், மட்டை மூடாக்கு போட்டு, சொட்டுநீர்ப் பாசனம் செய்கிறார். ஒவ்வொரு தென்னைக்கு அருகிலும், சோற்றுக் கற்றாழை செடி மடல் விரித்து நிற்கிறது. அதுகுறித்து சின்னச்சாமி கூறுகையில், "தென்னையைத் தாக்கி சேதப்படுத்துற ஈரியோபைட் சிலந்தி, தஞ்சாவூர் வாடல் நோய், கருந்தலைப் புழுதாக்குதல், குருத்து அழுகல் நோய் இது எல்லாத்தையும் கசப்புத் தன்மை கொண்ட சோற்றுக் கற்றாழை கட்டுப்படுத்துனு கேள்விப்பட்டேன். அதனால, உடனே அதை நட்டு வெச்சுட்டேன். இப்போ என் தோட்டத்துலயும் ஈரியோபைட் சிலந்தி தாக்குதல் இல்லை" என்று சொன்னார்.