கண்டுபிடிப்பு

காசி.வேம்பையன்

கருவிகள் உலகில் புதிய மைல் கல்

கத்திரி,மிளகாய்,பருத்தி,கிழங்கு,பயிர்கள் பலவிதம்...களைக் கருவியோ ஒரே விதம்

பளிச்...பளிச்...

ஏக்கருக்கு 1,000 ரூபாய் வரம் மிச்சம்

கருவியின் மொத்த எடை 120 கிலோ

களையெடுப்பதற்காக பல்வேறு கருவிகள், வழக்கத்தில் இருக்கின்றன. ஆனாலும், குறிப்பிட்ட ஒரு பயிருக்கு மட்டுமே பயன்படுத்தக் கூடிய அளவிலேயே அவை இருக்கின்றன. அதுமட்டுமல்ல... அவற்றைப் பயன்படுத்துவது தொடங்கி, பல்வேறு விஷயங்களிலும் சின்னச் சின்ன சிரமங்கள் இருப்பதாக விவசாயிகள் தரப்பிலிருந்து 'எதிரொலி' கேட்கிறது. இத்தகையச் சூழலில், இப்பிரச்னைக்கு ஒரு தீர்வாக பல பயிர்களில் களையெடுக்கும் ஒரே கருவி யை வடிவமைத்திருக்கின்றனர் திருச்சி மாவட்டம், குமுளூரில் இருக்கும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள்.

"இதைப் பயன்படுத்தி கத்திரி, மிளகாய், பருத்தி, கிழங்கு என பல்வேறு பயிர்களிலும் களை எடுக்க முடியும்’' என்று பெருமையாக அறிமுகம் கொடுத்த கல்லூரியின் முதல்வர் தாஜூதீன், தொடர்ந்தார்...

ந்
"விவசாயத்துல களையெடுக்குறதுக்கான கூலி மட்டுமே மொத்த செலவுல 25%-50% வரை ஆகுது. அதைக் குறைக்கற வகையில களையெடுக்குற கருவியை வடிவமைக்கணும்னு எங்க மாணவர்கள் எடுத்த முயற்சியின் விளைவுதான் இந்தக் கருவி. பயன்பாட்டுல களையெடுக்குற கருவிகள் நிறைய இருந்தாலும், ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனியா இருக்கறதால, அது செலவு அதிகம் பிடிக்கிற விஷயமா இருக்கு. அதனாலதான் எல்லாப் பயிருக்கும் பயன்படுத்துற மாதிரியான இந்தக் கருவியை அஞ்சி வருஷத்துக்கு முன்ன இறுதியாண்டு படிச்ச மாணவர்கள் வடிவமைக்க ஆரம்பிச்சாங்க. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருஷமும் இறுதியாண்டு படிக்கிற மாணவர்கள் சின்னச்சின்ன மாற்றங்களை செஞ்சு... இப்போ முழுமையான ஒரு வடிவத்துக்கு அந்தக் கருவி வந்திருக்கு.

பல்வேறு இடங்கள்ல பல பயிர்களுக்கிடையில சோதனைகளை செஞ்சு பாத்துட்டுதான் இதை வெளியிட்டிருக்கோம். ஒரு அடி முதல் மூணரை அடி இடைவெளி விட்டு செய்யப்பட்டிருக்கற, எல்லாவிதமான பயிர்களுக்கும் இந்தக் கருவியைப் பயன்படுத்தறதால குறைவான செலவுல களை எடுத்துடலாம்'' என்று சொன்னவர், கருவியைப் பற்றி மேலும் பல தகவல்களைத் தந்தார்.

இந்தக் கருவியில் பயன்படுத்தியிருக்கும் பாகங்கள் எல்லாமே உள்நாட்டு தயாரிப்புகள்தான். அதனால ஏதாவது பழுது வந்தாலும், உடனடியாக சுலபமாகவே சரி செய்துடமுடியும் என்பதுதான் இதன் சிறப்பு. குறைந்த செலவில் அதிக சக்தியைக் கொடுக்கும் 5 ஹெச்.பி. (குதிரைத் திறன்) கொண்ட ‘லம்பாடி’ இன்ஜினின் ‘க்ஷி’ வடிவ பிளேடுகள் பொருத்தப்பட்ட பட்டைகள், சக்கரங்கள், பெல்ட், கிராங்க் இதையெல்லாம் இணைத்துதான் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு அடி உயர இரும்புச் சக்கரங்களை செய்து, அவை மண்ணில் அழுந்தாமல் செல்லும் வகையில் 20 குத்து பிளேடுகளும் இணைக்கப்பட்டுள்ளன. களையெடுக்கும் பிளேடுகளை பயிரின் இடைவெளியைப் பொருத்து மாற்றியமைக்கவும் முடியும். ஒரு வரிசை முதல் மூன்று வரிசை வரை களையெடுப்பது போல பிளேடுகளை இதில் இணைக்கலாம். ஆழமாக கிளறுவதற்காக நீண்ட கம்பிகளும் இதில் உண்டு. கருவியைத் திருப்புவதற்கு சுலபமாக இடதுபுறத்தில் கிளட்ச் அமைக்கப்பட்டுள்ளது. கருவியின் மொத்த எடை 120 கிலோ. எனவே, எளிதாகக் கையாள முடியும்.

மேற்கண்ட விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட தாஜூதீன், "எங்க துணைவேந்தர் முருகேசபூபதி கூட இதை இயக்கிப் பார்த்து பாராட்டிட்டு போனார். இந்தக் கருவிக்கு 45,000 ரூபாய்னு விலை நிர்ணயம் செய்திருக்கோம். இதை விற்பனை செய்ய டெண்டர் விடப்போறோம்’’ என்றபடியே... ஒரு கருவியை நிலத்தில் இறக்கி, இயக்கி காண்பிக்கக் சொன்னார். கணநேரத்தில் களைகள் காணாமல் போயின.

பொதுவாக, இதுபோன்ற தயாரிப்புகள் இருப்பதாக செய்திகள் பரபரக்கும். கடைசியில் பார்த்தால், கருவியை எங்கே தேடினாலும் கிடைக்காது. 'ஸ்டாக் இல்லை' என்று சொல்லியே தட்டிக் கழித்து விடுவார்கள் என்று பல்கலைக்கழகத்தின் மீது பொதுவான குற்றச்சாட்டு வைக்கப்படுவதுண்டு.

எனவே, கண்டுபிடித்தது போதாது... கையோடு விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப கருவிகள் கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

படங்கள் மு. நியாஸ் அகமது

ஒரு மணி நேரத்தில் அரை ஏக்கர் களை காலி!
இக்கருவி மூலம், ஒரு மணி நேரத்தில் அரை ஏக்கரில் களை எடுக்கலாம். 1 நாளில் மூன்று முதல் நான்கு ஏக்கர் வரை களை எடுக்க முடியும். ஒரு மணி நேரத்துக்கு அரை லிட்டர் டீசல் தேவைப்படும். கருவியைப் பயன்படுத்தும்போது, களைகள் அகற்றப்படுவதோடு, பயிரின் சல்லி வேர்கள் அறுபட்டு புதிய வேர்கள் முளைப்பதால் மகசூல் கூடும். களைகளை அகற்றிய பிறகு, ஆட்களைக் கொண்டு அப்புறப்படுத்திவிட வேண்டும். ஒரு பெண் வேலையாள் இருந்தால், ஒரு ஏக்கர் களையை அப்புறப்படுத்திவிட முடியும்.