வழிகாட்டி

ஆறுச்சாமி

பால் பண்ணை வைக்க, 5 லட்சம் கடன் !

ஆடு, மாடு, கோழி வளர்ப்போர் வாழ்வில் பெரும்பாலும் வறுமை வருவதில்லை. இதனாலேயேதான் பெரியளவில் பண்ணையாக வளர்க்க விரும்புவோருக்கு கடன் கொடுத்து கைத்தூக்கி விடத் தயாராக இருக்கிறது எஸ்.பி.ஐ. வங்கி (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா). குறிப்பாக, பால் பண்ணை அமைப்பதற்கு அடிப்படைத் தேவையான கறவை மாடுகள் வாங்க கடன் தருகிறது. இதற்கென ‘டைரி ப்ளஸ்’ என்ற பெயரில் கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். பத்து கறவை மாடுகள் வாங்க ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

இந்தக் கடனைப் பெற விதிமுறைகள் பலவும் கடைபிடிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் கடைபிடித்தால்தான் கடன் வழங்கப்படும். கடன் பெறுபவரின் வயது 65-க்கு மேல் இருக்கக் கூடாது. பத்து மாடுகளுக்கும் தேவையான தீவனம் வளர்க்க இரண்டு ஏக்கர் சொந்த நிலம் இருக்க வேண்டும். கூட்டுறவு பால் சங்கம் அல்லது பிரபல தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் வழங்குபவராக இருக்க வேண்டும்.

கறவை மாடு என்றவுடன் கண்ட மாட்டையும் வாங்கிவிட முடியாது. அது கலப்பினக் கறவையாக இருக்க வேண்டும். கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாடுகளை வாங்குவது முக்கியம். ஐந்து லட்சம் வரை கடன் கொடுப்பதால், பால் பண்ணை நவீனமாக, அதாவது... புல் வெட்டும் இயந்திரம், பால் கறக்கும் இயந்திரம் போன்றவற்றை பயன்படுத்தவேண்டும். இவையெல்லாம் வேலை பளுவைக் குறைப்பதோடு, பால் உற்பத்தியையும் பெருக்கும்.

கடன் பெற்று பால் பண்ணை வைக்கும்போது வங்கி அதிகாரிகளின் ஆய்வு அடிக்கடி இருக்கும். எனவே, பண்ணையைச் சுத்தம், சுகாதாரத்துடன் பராமரிப்பது மிகமுக்கியம். இதன் மூலம் வங்கியில் உங்களுடைய மரியாதை கூடுவதோடு, மேற்கொண்டு உதவிகள் பெறவும் வழியை ஏற்படுத்தும்.

பால் பண்ணைத் தொடங்கிய ஆறு மாதத்தில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் மாதம் தோறும் கடனைத் திரும்பச் செலுத்தி முடிக்க வேண்டும். ஒரு லட்சம் வரை கடன் வாங்குவோர், அடமானம் எதையும் தரத் தேவையில்லை. அதற்கு மேல் என்றால், கடன் மதிப்புக்கு தக்க சொத்துகளை அடமானமாகக் கொடுக்க வேண்டும்.

மேலும் தகவல்களைப் பெற, அருகில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையில் உள்ள ஊரக வணிகப் பிரிவை அணுகலாம்.

-தொடர்ந்து சந்திப்போம்