ஏன்...எதற்கு?

சுபாஷ் பாலேக்கர்

"மாவுப் பூச்சிகளுக்கு மணி கட்டுமா ஜீரோ பட்ஜெட்?"

"சாண எரிவாயுக் கலனிலிருந்து வரும் சாணத்தில் ஜீவாமிர்தம் தயாரிக்கலாமா?"

து. ராமகிருட்டிணன், சோழன் மாளிகை.

"சாண எரிவாயுக் கலனில் சாணம் இருக்கும்போது, அதில் உள்ள நன்மை செய்யும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. ஆகவே, சாண எரிவாயுக் கலனில் இருந்து வெளியாகும் சாணத்தை ஜீவாமிர்தக் கரைசல் தயாரிக்கப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லி வருகிறேன். ஆனால், கனஜீவாமிர்தம் தயாரிக்க, இந்தச் சாணத்தைப் பயன்படுத்தலாம். அதுவும் பசுஞ்சாணம் 50%, எரிவாயுக் கலனில் இருந்து வெளியான சாணம் 50% என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். இப்படி பயன்படுத்தினால், பசுஞ்சாணத்தில் உள்ள நுண்ணுயிரிகள், எரிவாயுக் கலனில் இருந்து வெளியேறிய சாணத்துடன் சேர்ந்து பல்கி பெருகும்."

"நெற் பயிரில் தூங்கரோ வைரஸ் நோய் தாக்கியுள்ளது. அதை கட்டுப்படுத்தும் வழி சொல்லுங்கள்?"

ஜெ. விஜயகுமார், வெளுக்கம்பட்டு.

"அதிகமான குளிர் இருக்கும்போது தூங்கரோ வைரஸ் நோய் தாக்கலாம். அதைக் கட்டுப்படுத்த, முதல்கட்டமாக வயலில் அதிகமாக நீர் கட்டுவதைக் குறைக்கவும். காய்ச்சலும், பாய்ச்சலுமாக பாசனம் செய்யுங்கள். அடுத்து,

200 லிட்டர் தன்ணீரில் 5 லிட்டர் புளித்த மோர் கலந்து தெளிக்கவும். பத்து நாட்கள் இடைவெளி விட்டு, 200 லிட்டர் நீரில், 20 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைத் தெளித்தால், தூங்கரோ வைரஸ் நோய் கட்டுப்படும். பயிர்களில் ஏற்படும் வைரஸ் நோய்களுக்கு இதே தொழில்நுட்பத்தைப் பின்பற்றி நோயைக் கட்டுப்படுத்துங்கள்."

"கடந்த இதழில், 'மரவள்ளிச் செடியில் வெள்ளை நிறப் பூச்சிகள் தாக்கியுள்ளன. அதைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?' என வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு, தாங்கள் 'மரவள்ளியை வெள்ளை ஈ தாக்கியிருக்கலாம்; என்று கூறியிருந்தீர்கள். என்னுடைய அனுபவத்தில் மரவள்ளி உட்பட பப்பாளி, மல்பெரி, செம்பருத்தி, சப்போட்டா... போன்றவற்றில்கூட மாவுப் பூச்சிகள்தான் (Mealy bug) தாக்கி வருகின்றன. அநேகமாக அவருடைய தோட்டத்திலும் இதே பூச்சிகள்தான் தாக்கியிருக்க வேண்டும். அதைத்தான் அவர் வெள்ளை நிறப் பூச்சிகள் என்று கூறியிருப்பார் என கருதுகிறேன். இந்தப் பூச்சிகளை வேளாண் துறை, வேளாண் பல்கலைக்கழகம்கூட கட்டுப்படுத்த வழி சொல்லாமல் தடுமாறிக் கொண்டுள்ளன. எனவே, மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் தங்களிடம் இருந்தால், அதைக் கூறுங்கள். விவசாயிகளுக்கு பலனுள்ளதாக இருக்கும்."

தங்கம். முருகேசன், வேளாண்மை துறை முன்னாள் துணை இயக்குநர் (ஓய்வு), அரக்கன் கொட்டாய்.

"பூச்சி மற்றும் நோய் தாக்குதலைப் பொறுத்தவரை நேரடியாகப் பார்த்த பிறகுதான் உரிய தீர்வு வழங்க முடியும். அந்த விவசாயி வெள்ளை நிறப் பூச்சி என்றவுடன், அது ஒருவேளை வெள்ளை ஈ யாக இருக்கலாம் என்றுதான் சொல்லியிருந்தேன். அதேசமயம், அப்போது குறிப்பிட்டது போலவே மாவுப்பூச்சிக்கும், நீம் அஸ்திராவைத் தெளித்தாலே போதும். மேலும், மாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்த மக்காச் சோளம், தட்டைப் பயறு, சாமந்தி... போன்றவற்றை ஊடுபயிராக செய்தால், இவற்றைத் தேடிவரும் நன்மை செய்யும் பூச்சிகள் நீம் அஸ்திராவுக்கு கட்டுப்படாமல் மிஞ்சியிருக்கும் மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்திவிடும்

அடுத்து, நீம் அஸ்திரா தெளித்து 10 நாட்கள் இடைவெளியில் 200 லிட்டர் நீரில், 20 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து தெளிக்கவும். மாதம் தவறாமல் 15 நாட்களுக்கு ஒருமுறை ஜீவாமிர்தக் கரைசலைத் தெளித்து வரவும். இதையெல்லாம் செய்தால், மாவுப் பூச்சி தோட்டத்துப் பக்கம் எட்டிக்கூட பார்க்காது.