பயிற்சி

காசி.வேம்பையன்

தண்ணீர் சிக்கனம்...தேவை,இக்கணம்...!

பளிச்..பளிச்..

சென்னை, டெல்லி மாதிரியான பெருநகரங்களில் கார்களைக் கழுவ மட்டும், 5 கோடி லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள்.

உலகத்துல எந்தப் பொருளை வேண்டுமானாலும் உருவாக்கிவிடலாம். தண்ணியை மட்டும் உருவாக்க முடியாது. ஆனா, இயற்கையா உருவான தண்ணியைப் பாதுகாக்கறதுக்கு நம்மளால முடியும்.

பருவம் தப்பிடுச்சு, பூமி வெப்பம் அதிகமாகிடுச்சு, அதனால தண்ணீர் வளம், குறைஞ்சு போச்சு. இந்த மாதிரி சூழல்ல... கிடைக்கிற தண்ணியை எப்படி சரியாக பயன்படுத்தலாம்கிறதுதான் இன்னிக்கு நம்ம முன்னால இருக்கற சவால். இதுக்காக அரசு அதிகாரிகளையே எதிர்பார்க்கிறதைவிட, மக்களே களத்துல இறங்கணும். அரசாங்கம், தண்ணீர்உணவு சம்பந்தபட்ட இயக்கங்கள் இவங்களோட மக்களும் சேர்ந்து பங்கெடுத்துக்கிட்டா... நிச்சயமா மாற்றத்தைக் கொண்டு வரலாம். அதுக்கான முதல் முயற்சியாகத்தான் தமிழ்நாட்டில் முதல்முறையா இந்தப் பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி இருக்கோம்"

தண்ணீர் சிக்கன விழிப்பு உணர்வு பயிற்சிப் பட்டறை...

இப்படி நம்பிக்கையை நெஞ்சில் வார்ப்பவர் மனித உரிமை ஆர்வலர் வீ. சுரேஷ்.

தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்தும் முறைகளை பற்றிய விழிப்பு உணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும் விதமாக 'சமுதாயம் சார்ந்த நீர் மேலாண்மை’ குறித்த பயிற்சி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் சமீபத்தில் நடைபெற்றது. அங்கேதான் இப்படி தன்னுடைய கருத்துக்களை எடுத்து வைத்தார் சுரேஷ்.

"இன்னிக்கு தண்ணியில்லாம பல இடங்கள்ல கஷ்டப்படுறாங்க. அதேசமயம், பல இடங்கள்ல தண்ணீரை வச்சு கொண்டாட்டம் போட்டுகிட்டு இருக்குறாங்க. உதாரணமா... சென்னையில் தீம்பார்க் மாதிரியான கொண்டாட்டத் தலங்களில், 'செயற்கையா கடலை உருவாக்குறேன்... காஷ்மீரை உருவாக்குறேன்’னு சொல்லிகிட்டு பூண்டியில் இருந்து மெட்ரோ வாட்டர் கம்பெனி மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுக்குறாங்க. பூண்டி விவசாயிங்க வயித்துல அடிச்சுட்டுதான் இப்படி கொண்டாட்டம் போடுறாங்க. இந்தச் செய்தியே பலருக்கு தெரியாம இருக்குது. இன்னிக்கு சென்னை, டெல்லி மாதிரியான பெருநகரங்கள்ல கார் கழுவ மட்டும், 5 கோடி லிட்டர் தண்ணியை பயன்படுத்துறாங்க. ஆனா, ஆஸ்திரேலியா மாதிரி உள்ள வெளிநாடுகள்ல, கார்களைக் கழுவுவதற்கும், அழகுக்கு புல் வளர்க்கறதுக்கும், ரீசைக்கிளிங் செய்த கழிவுத் தண்ணியைத்தான் பயன்படுத்துறாங்க.

சில வருஷத்துக்கு முன்னாடி சட்டீஸ்கர் மாநிலத்துல சிவநாத் ஆத்தோட தண்ணியை விநியோகிக்கிற உரிமையை தனியார் நிறுவனத்துக்குக் கொடுத்தாங்க. அந்த நிறுவனம், ஆற்றை ஒட்டி இருக்குற வீடுகள்ல, விவசாய நிலங்கள்ல இருக்கும் கிணத்துல ஊறியிருந்த தண்ணிக்கும் வரி கட்டணும்னு பிரச்னை கிளப்புச்சு. மக்கள் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. போலீஸை ஏவிவிட்டு, மக்களை அடிச்சு துன்புறுத்தினாங்க.

தண்ணீரை மையமா வெச்சு இப்படியெல்லாம் பிரச்னைகள் நடக்க ஆரம்பிச்சுருக்கு. இது நாளுக்கு நாள் அதிகமாகிட்டேதான் போகும். அதனால, கிடைக்கற நீரை எப்படி பயன்படுத்திக்கிறதுங்கறதுலதான் நாம கவனம் செலுத்தணும். அதுக்காகத்தான் இந்த பயிற்சி" என்று விவரங்களை அடுக்கினார் சுரேஷ்

மூன்று நாள் பயிற்சியில், விவசாயிகளுக்கு நீரை சிக்கனமாக பயன்படுத்தும் முறைகளைப் பற்றிய குறும்படங்கள் காட்டப்பட்டன. அருகிலுள்ள கிராமங்களுக்கு அழைத்துச் சென்று அங்கு கிடைக்கும் நீரை அந்த மக்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள். அதிலுள்ள நல்ல விஷயங்கள், அவர்கள் செய்யும் தவறுகள் என ஒவ்வொன்றையும் பிரித்துக் காண்பித்து நேரடியாக பயிற்சியளித்தனர்.

நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டு வரும் கீரனூருக்கு அருகில் இருக்கும் பரம்பூர் கிராமத்துக்கும் விவசாயிகளை அழைத்துச் சென்றனர். அந்த கிராமத்தின் நீர்ப்பாசன சங்கத் தலைவர் சுப்பிரமணியன், ''ஒவ்வொரு போகத்துக்கும் எங்க ஊரு ஏரியில எவ்வளவு தண்ணி இருக்குனு பாத்துட்டு அதுக்கேத்தபடிதான் வெள்ளாமையை ஆரம்பிப்போம். தண்ணி குறைவா இருக்கும்போது, நாத்துப் பறிப்பு, நடவு, கருகும் பயிர், பூவெடுக்குற நேரம்னு அவசரமா தண்ணி தேவைப்படுறவங்களுக்கு முதல்ல கொடுப்போம். பிறகு, குறு விவசாயிகளுக்கு முழு நிலமும், சிறு விவசாயிகளுக்கு பாதியளவும், பெரு விவசாயிகளுக்கு மூன்றில் ஒரு பங்கும் தண்ணீர் கொடுப்போம். இந்தச் சங்கத்தை ஆரம்பிச்சதிலிருந்து 2003ம் வருஷம் மட்டும்தான் ஒரு போகம் சாகுபடி செஞ்சிருக்கோம். மத்தபடி எப்பவும் ரெண்டு போகம்தான்.

1990ம் வருஷம் பாசன மேலாண்மை துறையில் சங்க விவசாயிக தலா 100 ரூபாய் வீதம் 27 ஆயிரம் கட்டுனோம். துறை சார்பா ஒரு பங்கு பணத்தை போட்டு 52 ஆயிரமா கொடுத்தாங்க. இதை வங்கியில போட்டு, வட்டித் தொகையில மராமத்து வேலைகளை செய்றோம். அதுமட்டுமில்லாம எங்க சங்கத்துக்கு கட்டிடம், பள்ளிக்கூடத்துக்கு சைக்கிள் ஸ்டாண்ட், கோவில் கும்பாபிஷேகம்னு செஞ்சு கொடுத்திருக்கோம். எங்க சங்கத்தோட செயல்பாட்டை பாராட்டி பொதுப்பணித் துறையிலிருந்து சான்றிதழ் கொடுத்திருக்காங்க" என்றார் பெருமையாக.

படங்கள் மு. நியாஸ் அகமது