பிரச்னை

காடோடி,சேவியர்

'நாட்டு ரகங்கள் இருக்க... பி.டி.ரகங்கள் எதற்கு?'

மரபணு மாற்றப்பட்ட கத்திரியும்,மத்திய அரசின் 'கதகளி'யும்!

இப்போ, அப்போ' என மிரட்டிக் கொண்டிருந்த பி.டி. எனப்படும் மரபணு மாற்றப்பட்ட கத்திரி... இதோ வாசலுக்கு வந்து விட்டது. 'உலகிலேயே முதன்முதலில் மரபணு மாற்றப்பட்ட கத்திரியைப் பயிரிட்டது இந்தியாதான்' என்ற பெயர் கிடைக்கப் போகிறது என்றபடி, குஷிபொங்க மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்கு அனுமதியை வழங்கியிருக்கிறது ஜி.இ.ஏ.சி. எனப்படும் மரபணு பொறியியல் அங்கீகாரக் குழு.

இதையடுத்து, ''இனி எங்கும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் பெருகிவிடும். அறுபதுகளில் ரசாயனத்தை விவசாயிகளின் கையில் அள்ளிக் கொடுத்து, மண்ணை மலடாக்கிய ஆதிக்க சக்திகளின் அடுத்த அவதாரம்தான் இந்த பி.டி. விதைகள். இவற்றை அனுமதிக்கவே கூடாது'' என்று கடுமையான எதிர்ப்பு கிளம்பிவிட்டது இந்தியாவில்.

அதேசமயம், ''இதைப் பயிரிட்டால் விளைச்சல் ஆகா... ஓகோதான். பருவமழையைப் பற்றிய கவலை வேண்டாம். குறைந்த நிலமிருந்தாலே போதும். மகசூலை வைக்க இடமில்லாத அளவுக்கு விளைந்து தள்ளி விடும்'' என்றெல்லாம் சொன்னபடி காரியத்தை சாதிப்பதில் கண்ணாக இருக்கிறது மரபணு மாற்றப்பட்ட விதைகளை உருவாக்கி வரும் அமெரிக்க நிறுவனம்.

'பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்' (Bacillus thuringiensis) என்பதன் சுருக்கம்தான் பி.டி. இது, மண்ணில் உள்ள ஒரு நுண்ணுயிரி. இந்த நுண்ணியிரியில் பருத்தியைத் தாக்கும் காய்ப் புழுவைக் கொல்லும் நஞ்சு இருக்கிறது. இந்த நுண்ணுயிரியின் புரதத்தை எடுத்து, பருத்திச் செடியில் உள்ள மரபணுக்களில் செலுத்தி, அதன் மூலம் காய்ப்புழுத் தாக்காத பருத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அதுதான் பி.டி. பருத்தி. இந்தியாவில் முதலில் அறிமுகமானது பி.டி. பருத்தி விதைகள்தான். அதே தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருப்பதுதான் பி.டி. கத்திரியும்.

பருத்தி சொல்லும் பாடம்!

அமெரிக்காவின் மான்சாண்டோ நிறுவனம் தயாரிக்கும் இந்த மரபணு மாற்றுப் பயிர்களை இந்தியாவில் குத்தகைக்கு எடுத்திருப்பது மஹிகோ எனும் நிறுவனம். ஆனால், ''இந்த முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்” என விவசாய அமைப்புகளும், தன்னார்வ நிறுவனங்களும் களத்தில் குதித்திருக்கின்றன. அதற்கு வலுவான ஒரு காரணமும் இருக்கிறது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மரபணு மாற்றப்பட்ட பி.டி பருத்தியைக் கொண்டு வந்தார்கள். அதைக் கொண்டு வந்தபோது விட்ட உதாரைப் பார்த்தால், ஏதோ வேட்டியே மரத்தில் காய்க்கும் எனும் ரேஞ்சுக்கு இருந்தது. கடைசியில், பல இடங்களில் பி.டி. தொழில்நுட்பம் தோல்வி என்பதாகவே செய்திகள் வந்தன. சொன்னபடி காய்ப்புழுக்களின் தாக்குதல் கட்டுப்படாததோடு... விவசாயிகளுக்கு பெருமளவில் செலவு வைப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. இந்தப் பருத்தியின் இலைகளைச் சாப்பிட்ட ஆடு, மாடுகள் கொத்துக் கொத்தாய் மடிந்து போனதாக ஆந்திராவில் குற்றச்சாட்டுகள் வெடித்தன. பி.டி. பருத்தி விதைகளின் விலை ஆகாய உயரத்தில் இருக்கிறது. போதுமான விளைச்சல் இல்லாததால், விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர் என்றுகூட புகார்கள் படிக்கப்பட்டன. ஆனால், இதையெல்லாம் பி.டி. ஆதரவாளர்கள் கடுமையாக மறுத்தனர். என்றாலும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. இப்போது பருத்தியின் இடத்தில் வந்திருப்பது கத்திரிக்காய்.

நாட்டுரகங்கள் இருக்க பி.டி.ரகங்கள் தேவையில்லை!

இதைப்பற்றி பேசும் ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் சி. வையாபுரி, ''கத்திரிக்காய் நமது பாரம்பர்ய உணவு. இங்கே ஏகப்பட்ட நாட்டு ரக கத்திரிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக நம்முடைய நாவைக் கட்டி வைத்திருக்கின்றன. அவையெல்லாம் நன்றாக விளைந்து கொண்டுதான் உள்ளன. அப்படியிருக்க, அவசரம் அவசரமாக பி.டி. கத்திரியை திணிக்க வேண்டிய அவசியமென்ன... முழுக்க வியாபாரம் என்பதைத் தவிர, இதில் வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்.

பி.டி. கத்திரிக்கு அனுமதி வழங்கிவிட்டால்... இனிமேல் விளைந்து சந்தைக்கு வரும்போது எது எந்தக் கத்திரிக்காய் என்றே தெரியப் போவதில்லை. மரபணு மாற்றப்பட்டதா... இல்லையா என்பதை கண்டுபிடிக்கவும் முடியாது. மரபணு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சாப்பிட்டால், கேன்சர், அலர்ஜி, பார்கின்ஸன், மலட்டுத் தன்மை என பல நோய்கள் வரும். தாய்மைக் காலத்தில் இருக்கும் பெண்களின் கருவை பாதிக்கும் எனும் அச்சமும் நிலவுகிறது. உலகிலேயே மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காயைப் பயன்படுத்தப்போகும் முதல் நாடு இந்தியாதான். அதாவது உலகுக்கே சோதனைச்சாலை எலி போல ஆகப் போவது நாம்தான்! இன்று கத்திரிக்காய், நாளை வெண்டைக்காய் இப்படியே அனுமதித்தால், இயற்கை விவசாயம் என்னவாகும்?'' என்றெல்லாம் பதறல் கேள்விகளை முன் வைத்தார்.

அடுத்து வரப்போகிறது அரிசி!

ஆனால், மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் நுழைந்தால்தானே காசு அதிகம் பார்க்க முடியும். அதற்காக இந்தியா, சீனா ஆகியவற்றின் மீது குறி வைத்து குஷியோடு பாய்ந்து கொண்டிருக்கிறது அமெரிக்காவின் பி.டி. தொழில்நுட்பம்.

கத்திரியைத் தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்து வரப்போகிறது மரபணு மாற்றப்பட்ட அரிசி. இதைத் 'தங்க அரிசி' என்கிறார்கள். இதில் புரோ வைட்டமின் சத்து இருக்கிறது என்பது அவர்கள் சொல்லும் வசீகர வார்த்தை. இந்த அரிசியைச் சாப்பிட்டால் குறிப்பிட்ட வைட்டமின் நமது உடலுக்குக் கிடைக்குமாம். நமது உடலுக்குத் தேவையான அளவு வைட்டமின் கிடைக்க, எவ்வளவு அரிசி சாப்பிட வேண்டும் தெரியுமா? ஒரு நாளைக்கு ஒன்பது கிலோ!

விரிவான ஆய்வுகள் நடத்தப்படவில்லை

மரபணு மாற்று ஆலோசனைக்குழு (ஸிஞிகிசி), மரபணு நுட்ப அங்கீகாரக் குழு (நிணிகிசி), மரபணு நுட்ப சீராய்வுக் குழு (ஸிசிநிவி) என சகட்டுமேனிக்கு குழுக்களை வைத்திருக்கிறது இந்திய அரசு. ஆனால், இவையெல்லாம் அரசின் கண்துடைப்புக் குழுக்களாகி விடுமோ எனும் கவலைதான் மக்களுக்கு.

''பி.டி. எனப்படும் தொழில்நுட்பத்தை விவசாய நாடான இந்தியாவில் புகுத்தும் முன், இந்தக் குழுக்கள் செய்தது என்ன என்பது மிகப்பெரிய கேள்வி. விரிவான ஆய்வுகள் ஏதும் இதற்காக நடத்தப்படவில்லை. கம்பெனிகள் சமர்ப்பித்த ஆய்வறிக்கைகளை அப்படியே ஏற்று அனுமதி அளிக்கும் வேலைதான் இங்கே நடக்கிறது. இதன் விளைவுகள் பாதிப்பற்றவை என்பதற்கு எந்தவிதமான ஆதாரபூர்வ ஆய்வுகளும் இல்லை. இவற்றால் மற்ற விவசாயப் பயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் நேரும் சிக்கல்கள் குறித்தும் தெளிவில்லை. இதை நம்பிச் சாப்பிடலாம் என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. அப்படி இருக்கும்போது, அவசர அவசரமாக எதற்கு இந்த அங்கீகாரங்கள்" என்கிறார்கள் பி.டி. ரகங்களை எதிர்க்கும் இயற்கை ஆர்வலர்கள்.

உண்பது என்ன உணவு என்பதை அறியும் உரிமை, உண்ணும் ஒவ்வொருவருக்கும் உண்டு. விளைவிப்பது என்ன என்பதை அறியும் உரிமை ஒவ்வொரு விவசாயிக்கும் உண்டு. அந்த அடிப்படை விஷயங்களைத் தெளிவுபடுத்தும் கடமை அரசுக்கு உண்டு. மாற்றங்கள் தேவையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவை நல்ல மாற்றங்களாக இருக்க வேண்டும் எனும் கவலைதான் ஒவ்வொருவருக்கும்!

"மக்களைக் கேட்காமல் அனுமதிக்க மாட்டோம்!"

பி.டி. கத்திரி விவகாரத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பவே... ''மக்களைக் கேட்டுதான் முடிவெடுப்போம்'' என மத்திய சுற்றுச்சூழல் இணைஅமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை விட்டிருக்கிறார்.

உண்மையில், பி.டி. கத்திரிக்கான அனுமதி கடந்த ஜனவரி மாதமே அளிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் மாதத்திலேயே அறிவிப்பை வெளியிட, மத்திய அரசு தயாரானபோது, பல்வேறு அமைப்புக்களின் எதிர்ப்பு காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது.

அதுமட்டுமல்ல... உச்ச நீதிமன்றத்தில், மரபணு மாற்றப் பயிர்களை தடைசெய்யக் கேட்டு வழக்கு ஒன்று ஏற்கெனவே விசாரணையில் இருக்கிறது. வழக்கைத் தொடுத்திருக்கும் கிரீன்பீஸ் அமைப்பு, மரபணு மாற்று பொறியியல் அங்கீகாரக் குழுவின் தாறுமாறான நடவடிக்கைகளைப் பற்றி தெரிவித்தபோது அதிர்ந்துபோன உச்ச நீதிமன்றம், புஷ்பா பார்கவா, எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோரைப் பார்வையாளர்களாக நியமித்தது. அதில் புஷ்பா பார்க்கவா, 'அங்கீகாரக் குழு குறிப்பிடும் ஆய்வுகள் போதுமானவையல்ல. மரபணு மாற்றுப் பயிர்களுக்கான அனுமதியை கொஞ்ச காலம் நிறுத்தி வைப்போம். மரபணு மாற்றுப் பயிர்களால் மனிதர்களுக்கு, விலங்குகளுக்கு, சூழலுக்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றி விரிவாக ஆராய்ந்த பின்னர் அனுமதிப்பது பற்றிய முடிவெடுக்கலாம்' என்று அரசுக்கு தெரிவித்திருக்கிறார். மேலும் 'இந்தியாவில் இதுபோன்ற ஆய்வுகளைச் செய்யக் கூடிய ஆராய்ச்சி மையங்களே இல்லையென்பதால், சர்வதேசத் தரமுள்ள ஒரு ஆய்வு மையத்தை அமைப்பதற்கான வேலையை உடனே தொடங்குங்கள்' என்று பிரதமருக்கு சமீபத்தில் கடிதமும் எழுதியிருக்கிறார். அதைப்பற்றி பரிசீலிப்பாக மத்திய அரசும் அறிவித்தது.

சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் பதவி ஏற்றவுடன், அவரைச் சந்தித்த, 'மரபணு மாற்றுப் பயிர்கள் இல்லா இந்தியா'வுக்கான குழு-வினரிடம், 'உணவுப் பயிர்களில் மரபணு மாற்றம் தேவையில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து' என்று கூறியிருந்தார்.

ஆனால், அதெல்லாமே 'கதகளி' நாடகக் காட்சிகள் போல மறைந்து போக... அக்டோபர் 14-ம் தேதி கூடிய அங்கீகாரக் குழு, பி.டி. கத்திரிக்கான அனுமதிச் சான்றை வழங்கிவிட்டது. ஆனால், ஒரேயரு ஆறுதல்... வழக்கம்போல விளைவிப்பதற்கான அனுமதியையும் சேர்த்தே வழங்காமல், சான்று வழங்குவதோடு மட்டும் நின்றுகொண்டு, அனுமதியளிக்கும் பொறுப்பை அரசிடம் விட்டுவிட்டது.

'கத்திரி மீதான அத்தனை ஆய்வுகளும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். ஜனவரி அல்லது பிப்ரவரியில் நாடு முழுவதும் மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்தி, அதன் பின்னரே அரசு முடிவெடுக்கும்' என்று அறிவித்திருக்கிறார் இணைஅமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்

எனவே, முடிவு மக்களின் கையில்தான்.

இயற்கைக்கு மாறாக எது நடந்தாலும், அதன் விளைவு படுமோசமாக இருக்கும் என்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறோம். நிஷா, காத்ரீனா, ரீட்டா போன்ற புயல்களும், சமீபத்திய இந்தோனேஷியா சுனாமியும்கூட அதற்கான உதாரணங்கள். பி.டி கத்திரி மீதான உங்களது கருத்தை தாமதிக்காமல் அரசிடம் பதிவு செய்யுங்கள்... எதிர்கால சந்ததியை நஞ்சிலிருந்து காப்பாற்றி வரலாற்றில் நீங்களும் பதிவாகுங்கள்.

உலக அளவில் பி.டி.விதைகளின் நிலை?

'மரபணு மாற்றப்பட்ட எந்த விதைகளுக்கும் இந்த மண்ணில் இடமில்லை' என்று சொல்லி கதவை இறுக மூடிவிட்டது அயர்லாந்து. விற்கப்படும் எல்லா பொருட்களிலும் மரபணு மாற்றப்படாத விதைகளிலிருந்து உருவானது என லேபிளும் ஒட்டப்போகிறார்கள் அயர்லாந்தில். பால் பொருட்களைக்கூட மரபணு மாற்றப்படாதத் தாவரங்களை உண்ட பசுவின் பால் என முத்திரை குத்தப் போகிறார்களாம்.

ஆஸ்திரியா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், தென்கொரியா போன்ற பல்வேறு நாடுகள் இறக்குமதிப் பொருட்களில் மரபணு மாற்றப்படாதது என சான்றளிக்கப்பட்டதை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றன.

ஏற்கெனவே ஒரு முறை அணுகுண்டு போட்ட நினைவுகளை ஜப்பான் மறக்குமா என்ன? அமெரிக்காவின் அடுத்த மரபணு குண்டை அதிரடியாக மறுத்துவிட்டது. உணவுக்கு வெளி நாடுகளைச் சார்ந்திருக்கும் எகிப்துகூட கொள்கையில் உறுதியாக இருக்கிறது. ஏன், நமது வாலில் கிடக்கும் இலங்கை கூட இன்னும் முழுசாக பிடிகொடுத்துப் பேசவில்லை!

சீனா, இந்த மரபணு மாற்றுப் புரட்சியை பெரிய அளவில் ஊக்கப்படுத்தவில்லை.

இங்கிலாந்தைப் பொறுத்தவரையில், மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிரான பூட்டு லேசாகப் பழுதடைய ஆரம்பித்திருக்கிறது. இது ஒரு நல்ல பிசினஸ் என்பதால் நாமே களத்தில் இறங்கலாமே எனும் கனவு அவர்களுக்கு. அதேபோல ஆஸ்திரேலியாவும் பி.டி.-க்கு வால் பிடிக்க ஆரம்பித்துள்ளது.

அதேசமயம், மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ‘ஸ்டார்லிங்க்‘ எனும் சோளம் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கிறது என அமெரிக்கர்களே போர்கொடி தூக்குகின்றனர்.