கலை

எஸ்.கதிரேசன்

"மண்ணை நேசிச்சாலே...மனுஷனை நேசிக்குற மனசு வந்துடும்!"

"பசுமைக் கொடி' பறக்கவிடும் ஜனநாதன் !

பசுமை-1, பசுமை-2, பசுமை-3 ங்கிறது ஒரு தொடர் திட்டம். விஞ்ஞானத்தை விவசாயத்துக்குப் பயன்படுத்துறதுதான் நம்ம நோக்கம்"

"பாரம்பர்ய இயற்கை விவசாயம் பத்தின ஆராய்ச்சி நடத்தப் போறோம்"

"முட்டை போட முடியாத மலட்டுக்கோழி... குஞ்சு பொறிக்க முடியாத மலட்டு முட்டை மாதிரி... மறுபடியும் விதைக்க முடியாத மலட்டு விதை. இதை விதைச்சா நம்ம தாய்நாடு மலடாயிடாதா..?"

"செயற்கை உரமா அள்ளிக்கொட்டி, பூச்சி மருந்தை ஊத்தி ஊத்தி, நம்ம நெலத்துக்கெல்லாம் நோய் வந்துடுச்சி"

"இனிமேலாவது அடுத்தவனுக்காக விளைவிக்காம, நீங்க விளைவிச்சத நீங்களே சாப்புடுங்க..."

-இதெல்லாம் இயற்கை விவசாயிகள் இருவருடைய டீக்கடை பேச்சோ, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்தரங்க உரையாடலோ கிடையாது. அச்சு அசலாக நம்ம தமிழ் சினிமாவில் வந்திருக்கும் பொறி பறக்கும் வசனங்கள்தான்.

நம்பவே முடியவில்லை இல்லையா...!

ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும். ஆம்... தீபாவளிக்கு வெளி வந்திருக்கும் 'பேராண்மை' படத்தின் வசனங்கள்தான் அவை.

"அட, நமக்காகவும் யோசிக்கறதுக்கு, குரல் கொடுக்கறதுக்கு ஒரு ஆளு சினிமாவுக்குள்ள இருக்காருப்பா'னு விவசாயிகள் இனித் தெம்பாச் சொல்லிக்கொள்ளலாம். ஏற்கெனவே 'பசுமை விகடன்' வாசகர்களுக்கு அறிமுகமான இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்தான் அந்த ஆள்.

கிராமங்களை மையமாகக் கொண்டு தமிழில் ஏராளமான படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், கிராமங்களின் உண்மை நிலையை சரியாகப் பதிவு செய்த படங்கள் மிகக் குறைவு. அதிலும் விவசாயிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கையை பதிவு செய்த படங்கள் மிகமிகக் குறைவு. ஆனால், விவசாயத்தை... குறிப்பாக இயற்கை விவசாயத்தை உயர்த்திப் பிடிக்கும் படமாக வந்திருக்கிறது 'பேராண்மை'.

இயற்கை விவசாயம் நடப்பதற்கு தேவையான நிலங்களை ஆய்வு செய்வதற்காக 'பசுமை-1' என்ற பெயரில் செயற்கை விண்வெளி கலத்தை (ராக்கெட்) இந்தியா ஏவுவதில் இருந்து படம் தொடங்குகிறது.

மலைவாசி இளைஞனான துருவன், படித்து பட்டம் பெற்று, தான் பிறந்து வளர்ந்த காட்டுக்கே வன இலாகா அதிகாரியாக வருகிறான். அவனிடம், என்.சி.சி. பயிற்சி பெற கல்லூரி மாணவிகள் வருகின்றனர். நகர்ப்புற வாழ்க்கைச் சூழலில் பிறந்து வளர்ந்த அவர்களுக்கு வகுப்பு எடுக்கும் சாக்கில், படம் முழுவதும் நிறையவே 'பசுமை சேவை' செய்திருக்கிறார் ஜனநாதன். பசுமை-1 ராக்கெட்டை அழிக்க முயலும், அந்நிய சக்திகளை துருவனும் கல்லூரிப் பெண்களும் சேர்ந்து முறியடிக்கிறார்கள். இதன் மூலம் இன்றைய இளம்தலைமுறையின் மனதில் நல்ல பல விஷயங்களை விதைத்திருக்கிறார் ஜனநாதன். கூடவே, சினிமா என்கிற ஊடகத்தை புதிய திசையை நோக்கியும் திருப்பியிருக்கிறார்.

'பசுமை விகடன்' எழுத்து மூலமாக குரல் கொடுத்து வரும் ஒரு விஷயத்துக்கு, வெகுஜன ஊடகமான சினிமாவைப் பயன்படுத்தியிருக்கும் ஜனநாதனைச் சந்தித்தோம்.

'சுழன்றும்ஏர் பின்னது உலகம்' என்று வள்ளுவப் பெருந்தகை கூறி வைத்திருக்கிறார். உலக நிலப்பரப்புல விவசாயத்துக்காக பயன்படுற நிலம் கொஞ்சம்தான். அதுல நல்ல வளமான மண் உள்ள பெரும்பகுதி நம்ம நாட்டுலதான் இருக்கு. ஆனா, துரதிர்ஷ்டவசமா, பாரம்பர்ய இயற்கை விவசாயத்தை விட்டுட்டு, வேற பாதையில நாம போயிட்டோம். ரசாயனம், உரம், பூச்சி மருந்து, ஹை-பிரீடு விதைங்கனு விஞ்ஞானத்தோட விரலைப் பிடிச்சிக்கிட்டுப் போய் சொந்த முகத்தை இழந்துட்டோம்.

மண்ணை மலடாக்குறது, தாயை மலடாக்குற மாதிரியான விஷயம். அந்தத் தப்பைதான் இவ்வளவு நாளா செஞ்சுக்கிட்டு இருக்கோம். இதுல அந்நிய நாடுகளோட சதியும் நிச்சயமா கலந்திருக்கு. அதையெல்லாம் மீறி, நம்ம மண்ணையும், பாரம்பர்ய விவசாயத்தையும் காப்பாத்த வேண்டிய நெருக்கடியான காலகட்டத்துல இப்ப இருக்கோம். நாம ரெண்டு பேரும் அடிச்சிக்கிறதுக்கு நாம காரணமில்ல. மூணாவதா ஒரு சக்தி காரணமா இருக்கு. அந்தச் சக்தியைத்தான் இந்த படத்தோட வில்லனா (வெளிநாட்டு நடிகர்) சித்தரிச்சிருக்கேன்.

இளைய தலைமுறை நடிகரான 'ஜெயம்' ரவிய வெச்சி இந்தக் கதையைச் சொன்னதுக்கு காரணமே... இன்றைய இளைஞர்கள் மனசுல கொஞ்சமாச்சும் பாதிப்பு ஏற்படட்டும்னுதான். அது வீண்போகல... படம் பெரிய வெற்றியை அடைஞ்சிருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

சினிமாங்கறது இயல்பான ஒரு ஊடகமா மாறணும்னு நெனைக்கிறவங்கள்ல நானும் ஒருத்தன். இந்தப் படத்தோட வெற்றி மூலமா அதை நோக்கி சினிமா நகர ஆரம்பிச்சிருக்கிறது எங்களுக்கு புதுத்தெம்பையும் உற்சாகத்தையும் தந்திருக்கு'' என்று சொன்ன ஜனநாதனிடம்,

"பாரம்பர்ய விவசாயம் பற்றியெல்லாம் பேசுகிற படத்தை எடுத்திருக்கிறீர்கள். நீங்கள் விவசாயம் ஏதும் செய்துகொண்டிருக்கிறீர்களா?'' என்று கேட்டோம்.

"நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். ஆனா... அப்பா-அம்மாவுக்கு பூர்வீகம், விவசாய பூமியான தஞ்சாவூர் மாவட்டம், வடசேரி கிராமம். ஆனா, விவசாயத்தைப் பத்தி படமெடுக்கறதுக்கு, நெல்லு என் வாழ்க்கைய பாதிச்சிருக்கணும்னு அவசியமில்ல. மண்ணை நேசிச்சாலே, மனுஷன நேசிக்கிற மனசு வந்துடும். தன்னைப் போலவே இருக்கற சக மனுஷன நேசிக்கிற மனசு இருந்தாலே போதும்... நாம வாழ்ற மண்ணு, விவசாயம், சுற்றுச்சூழல், சமூகம்னு எல்லாத்தையும் நேசிக்கிற மனசு வந்துடும்" என்று வெகு இயல்பாக பதிய வைத்தார் ஜனநாதன்.

வழக்கமான பாணி சினிமாவில் இருந்து விலகி புதிதாக யோசிப்பதற்கே பயப்படும் நம் தமிழகத்தில், விவசாயத்தின் பக்கம் சினிமாவையும் திருப்பியிருக்கும் ஜனநாதன் பாராட்டுக்குரியவர்தான்.