மரத்தடி மாநாடு

உச்சத்திலிருக்கும் மஞ்சள்..!

விவசாயிகளை மதிக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு கௌரவப்படுத்த வேண்டும் என்று அரசு அலுவலகங்களில் வாசகங்கள் எழுதி வைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன். அதன் மூலமாகத்தான் விவசாயத்தை ஊக்குவிக்க முடியும். விவசாயிகளைத் தோழர்களாக மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். விவசாயிகள் முன்னேறினால்தான் நாடு முன்னேறும். விவசாயிகளுக்கு என்ன பிரச்னை என்றாலும், அதை உடனடியாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் தெரிவித்திருக்கிறார்"

-காலை நாளிதழில் வந்திருந்த செய்தியை உரக்கப் படித்துக் கொண்டிருந்தார் 'வாத்தியார்' வெள்ளைச்சாமி.

அருகில் அமர்ந்து ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்த 'ஏரோட்டி' ஏகாம்பரம், "சகல அதிகாரிகளும், கலெக்டர் சகாயம் மாதிரியே இருந்துட்டா, சம்சாரிகளுக்கு சங்கடமே இருக்காது" என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே... ஆஜரான 'காய்கறி' கண்ணம்மா,

"அதே சகாயத்தைப் பத்தி என்கிட்டகூட ஒரு சேதி இருக்கு..." என்று முன்னோட்டம் போட்டுவிட்டு,

''இந்த கலெக்டரோட முயற்சியால நாமக்கல் உழவர் சந்தையில வியாபாரம் சக்கைப்போடு போடுது. விவசாயிகளையும் முதலாளிகளா மாத்துறதுக்காக நாமக்கல் உழவர் சந்தையில ‘உழவன் உணவகம்‘னு ஒரு கடை ஆரம்பிச்சுருக்காங்க. தினமும் சாயங்காலம் நாலு மணியிலிருந்து எட்டு மணி வரைக்கும் நடக்குற இந்தக் கடையில 22 விவசாயிக, 23 வகையான கிராமிய பாரம்பர்ய உணவு வகைகளை விற்பனை செய்றாங்க. இது மூலமா விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறதால, அடுத்தக் கட்டமா மாவட்டத்துல இருக்குற எல்லா உழவர் சந்தையிலயும் 'உழவன் உணவகம்' ஆரம்பிக்கப் போறாங்களாம்" என்று தானும் குஷியோடு சொன்னார்.

"ஒனக்குகூட ஒலக நடப்பெல்லாம் தெரிஞ்சுருக்கும்போது, நானும் நாலு விஷயம் தெரியாமலா இருப்பேன்" என்று நக்கலாக ஆரம்பித்த ஏரோட்டி,

"நாமக்கல் உழவர் சந்தை உண்மையிலேயே உழவர்களுக்கு பலனா இருக்கு. ஆனா, சிவகாசி உழவர் சந்தைக்கு ஒரு விவசாயிகூட காய்களை விக்கிறதுக்கு வர்றதில்லையாம். உழவர் சந்தைக்கு பக்கத்துலேயே இருக்குற தினசரி மார்க்கெட்டுக்குத்தான் மக்கள் அதிகமா போறாங்களாம். அதனால விவசாயிகளும் ஜாகையை மாத்திக்கிட்டாங்க. ஆளே இல்லாத கடையில டீ ஆத்துன கணக்கா... அங்க வேலை செஞ்சுகிட்டுருந்த அதிகாரி, ஒரு கட்டத்துக்கு மேல தாக்குப் பிடிக்க முடியாம போக, இடமாறுதல் வாங்கிட்டுப் போயிட்டாராம். இப்ப அவரோட இடத்துக்கு புதுசா ஒருத்தர் வந்து, ஈ ஓட்டிகிட்டுருக்காராம்" என்று சிரித்தபடியே சொன்னார்.

"ஆளுக வரலைனா மூடிட வேண்டியதுதான... அந்த இடத்தை வேற எதுக்காவது உபயோகமா பயன்படுத்தலாம்ல. இப்படி வறட்டு இழுவை இழுத்துதான் அரசாங்கத்துக் காசை வீணடிப்பாங்க" பொங்கினார் காய்கறி.

"சரி சரி விட்டுத்தள்ளு கண்ணம்மா..." என்று சொன்ன வாத்தியார்,

"ஈரோடுல மஞ்சள் விலை உச்சத்துல இருக்கறதால மஞ்சள் விவசாயிகளெல்லாம் மகிழ்ச்சியில இருக்காங்க. ஒரு குவிண்டால் 9,400 ரூபாய்க்கு மேல போயிடுச்சாம். வேலையாள் கிடைக்காம ஏகப்பட்ட விவசாயிக மஞ்சள் வெள்ளாமைக்கு மங்கலம் பாடிட்டாங்க. மஞ்சள் வரத்து சுத்தமா குறைஞ்சு போச்சாம். அதுதான் மிச்சம் சொச்சம் இருக்குற விவசாயிகளுக்கு இந்தளவுக்கு விலை கிடைக்க காரணமாம். அப்படியே ஏற்றுமதி ஆர்டரும் கிடைச்சுடுச்சுனா, இன்னமும் நல்ல விலை கிடைக்கும்னு எதிர்பார்க்கறாங்க ஈரோடு விவசாயிக" என்று மகிழ்ச்சி தகவல் தந்தார்.

"நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்றேன் கேளுங்க... போன வருஷ தீபாவளி விற்பனையை விட இந்த வருஷம் 220 கோடி ரூபாயைத் தாண்டி விற்பனையில சாதனை படைச்சிருக்கு கவர்மென்ட் சாராயக்கடை ( டாஸ்மாக்). இந்த வருஷம் மட்டும் கூடுதலா 732 கடைங்களை திறந்திருக்காங்களாம். எந்தக் கடையிலயும் சரக்கு இல்லைனு குடிமகன்கள் திரும்பிப் போயிடக்கூடாதேனு எல்லா கடையிலயும் அதிகபட்சமா 15 லட்ச ரூபா சரக்கை இருப்பு வச்சிருந்தாங்களாம். அவ்வளவும் வித்துப் போச்சாம். சென்னை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள்லதான் அதிக விற்பனையாம்" என ஏரோட்டி சொல்ல,

‘'ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்தான் போ... நான் என்னமோ ஏதோ சொல்லப் போறியாக்கும்னு காதை வேற தீட்டிக்கிட்டு தயாராயிட்டேன்'' என்று காய்கறி சலித்துக் கொள்ள...

''அதை விடு கண்ணம்மா, நானொரு உருப்படியான தகவல் தர்றேன். கொடைக்கானல் மலையில, பட்டுப்போன மரங்களை பூக்க வைக்குற வேலையைச் செய்துகிட்டு வர்றாங்க அங்க தங்கியிருக்கிற வெளிநாட்டு ஆசாமிங்க...''

''என்னது பட்டுப்போன மரங்களைப் பூக்க வைக்கறாங்களா... என்ன, ஜீ பூம்பா வேலை மாதிரியில்ல இருக்கு..'' என்று அதிர்ந்தார் ஏரோட்டி.

''அட நீ வேறய்யா...'' என்று சொன்ன வாத்தியார்.

''காய்ஞ்சி, பட்டுப் போன மரத்தோட வேர், மரப்பட்டை இதுமேலயெல்லாம், அழகுக்காக வளர்க்கும் செடிகளை வேரோடு வெச்சு கட்டிடறாங்க. தினமும் ஸ்பிரே மூலம் தண்ணியைத் தெளிக்கறாங்க. மத்தபடி மண் எதுவும் இல்லாமயே... காய்ஞ்ச வேர், பட்டையிலயே அழகுச் செடி ஜம்முனு வேர் பிடிச்சி வளர ஆரம்பிச்சுடுது. அப்படியே பூத்துக் குலுங்கவும் ஆரம்பிச்சுடுது. பிளாஸ்டிக் பாத்திரம், மண் தொட்டினு செயற்கையான பொருட்கள்ல அழகுச் செடிகளை வளர்க்கறதை விட பட்டுப் போன மரங்கள்ல முளைக்க வைக்கறது சூழலுக்கும் உகந்ததா இருக்கும்னு சொல்றாங்களாம் அந்த வெளிநாட்டு ஆசாமிங்க'' என்றார்.

''கேக்கவே நல்லாயிருக்கு.... பார்க்கறதுக்கு அதைவிட நல்லாத்தான் இருக்கும். ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்தாகூட தேவலைதான்'' என்றபடியே கூடையைத் தூக்கி காய்கறி தன் தலையில் வைக்க...

''அட கையோட கொடைக்கானலுக்கு கிளம்பிட்டியா கண்ணம்மா...'' என நக்கலாகக் கேட்டார் ஏரோட்டி.

''ஏரோட்டறவன் இளிச்சவாயனா இருந்தா... மாடு, மச்சான்... மச்சான்னு கூப்பிடுமாம்... நானே, நாலு தெரு அலைஞ்சும் காய்கறி வித்தபாடில்லை. விலை கூடினதால வாங்கறதுக்கு சங்கடப்பட்டுக்கறாங்க மக்கள்னு கவலையோட கிளம்பறேன்... ஒனக்கு நக்கலா?'' என்று காய்கறி கடிக்க... சட்டென்று சைக்கிளை உதைத்தார் ஏரோட்டி. மாநாடு முடிவுக்கு வந்தது.

ஏரோட்டி சொன்ன கொசுறு!

காடு வளர்ப்புத் திட்டம், அந்தத் திட்டம் இந்தத் திட்டம்னு புதுசு புதுசா ஏகப்பட்ட திட்டங்களைப் போட்டு கோடி கோடியா காசைக் கொட்டி, கடைசியில அந்த திட்டமெல்லாம் எங்க போகுதுனே தெரியாது. அதேசமயத்துல, நாலு வழிச் சாலைனு சொல்லி, இருந்த மரங்களையெல்லாம் வேரோட வெட்டி எடுத்துப்புட்டாங்க. இதைப்பத்தியெல்லாம் கவலைப்படாம, சாலையோரம் இருக்குற மரங்களையெல்லாம் நாப்பது வருஷத்துக்கு மேல சத்தமில்லாம காப்பாத்திக்கிட்டிருக்காங்க மதுரைக்குப் பக்கத்துல இருக்க சோளங்குருணி கிராம மக்கள். எல்லாமே பழ வகை மரங்களா இருக்கறதால வருமானமும் கிடைக்குதாம். அந்த வருமானத்தை கிராமத்தோட வளர்ச்சிக்கு பயன்படுத்துறாங்களாம்.