நாட்டுமாடு

பொங்கல் சிறப்பிதழ்

ஆர் குமரேசன்

மாண்புமிகு நாட்டுமாடு

கோழி கூவுகிறதோ, இல்லையோ... கிழக்குச் சிவக்கிறதோ, இல்லையோ... 'ஜல், ஜல்' என்ற மணிச்சத்தமும், மாட்டுக்காரர் எழுப்பும் ‘ஹோய்... ஹோய்...' சத்தமும் ‘பொழுது விடிந்து விட்டது’ என்பதைப் பறைசாற்றும் காலமெல்லாம் மாறிவிட்டது. அலாரம் வைத்த கடிகாரங்கள்தான் இப்போது கிராமங்களையும் கூட துயிலெழுப்பிக் கொண்டிருக்கின்றன. அந்தளவுக்கு மாடுகள் அரிதாகிவிட்டன.

'தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பூப்போல வைத்துன்னை காப்பதென் பாடு'

என்று மாடுகளைக் கொண்டாடி தீர்க்கும் மணித்திரு நாடு இது. ஆனால், இன்றைக்கு பல இடங்களில் மாடுகள் இல்லாமல் வெறும் சம்பிரதாயத்துக்காகவே மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது- அடி பம்ப்பில் ஆடிப்பெருக்கு கொண்டா டப்படுவது போல!

'விவசாயம் குறைந்ததால் மாடுகள் குறைந்தனவா... மாடுகள் குறைந்ததால் விவசாயம் அழிகிறதா?' என்று பெரிய பட்டிமன்றமே நடத்தக்கூடிய அளவுக்கு நிலைமை எல்லை மீறிப்போய்விட்டது. ஏர் ஓடிய நிலங்களில் எல்லாம் இப்போது டிராக்டர்களின் ஆட்சி நடக்கிறது. ஏரில் பூட்டப்பட்ட மாடு களோ... இறைச்சிக்காக அடிமாடுகளாகிவிட்டன. இப்போது எங்கு திரும்பினாலும் பெருகிக்கிடப்பது... பாலுக்காக வளர்க் கப்படும் வெளிநாட்டு கலப்பின மாடுகள்தான். நாட்டுமாடு என்கிற இனத்தைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அப்படியே மாடுகள் கிடைத்தாலும்... 'இது நாட்டுரகமா..., திமிலைக் காணோமே...?' என்று மண்டையைச் சொறிகிறார்கள் பலரும்.

திருநெல்வேலி மாவட்டம், சுரண் டையில் சொந்தமாக கோசாலை வைத்திருக்கும் முத்துகிருஷ்ணண் (04633--261677), நாட்டுமாடுகளின் இன்றைய நிலை குறித்து கண்ணீர் கசிகிறார்.

“நம் முன்னோர்கள் மாடு வளர்க்கறதை கடமையாவும், புனிதமாவும் நினைச்சாங்க. ஆனா, அடுத்த தலைமுறைக்கு அதை சரிவரச் சொல்லிக் கொடுக்கத் தவறிட் டாங்க. முன்னெல்லாம் ஒவ்வொரு வீட்டு லயும் பாலுக்காகவும், உழவுக்காகவும் கண்டிப்பா ஒரு ஜோடி நாட்டு மாடு களாவது இருக்கும். இப்ப எங்க இருக்கு.

பள்ளிக்கூடத்துலயும் வீட்டுலயும், ‘நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு’னு திட்டி திட்டியே, ‘மாடு மேய்க்கிறதை கேவலமான வேலை’யா பிஞ்சுகளோட நெஞ்சுல பதிச்சிட்டோம். அதனால இன்னிக்கு மாடுகள வளக்கறதும், விவசாயம் செய் றதும் கொறைஞ்சுகிட்டே வருது. ஆகாத பசுமாட்டைக் கூட அடிமாட்டுக்கு விக்கவே மாட்டாங்க நம்ம பெரியவங்க. அப்படிப் பட்ட பண்பாட்டுல வளர்ந்த விவசாயிக, இன்னிக்கி மனசைக் கல்லாக்கிட்டு வேறவழியே இல்லாம கண்ணுல ரத்தம் வழிய வழியத்தான் மாட்டை விக்கறாங்க. அதுக்குக் காரணமே, 'இருக்கறதை விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்ட' மாதிரி நாட்டு மாட்டை விட்டுட்டு காசுக்கு ஆசைப்பட்டு கலப்பினத்துக்கு மாறினதுதான். கலப்பின மாட்டுக்கு பண்ணுற மாதிரி, நாட்டு மாட்டுக்கு தீவனச் செலவெல்லாம் பெரிசா ஆகாது. காடுகள்ல மேய்ஞ்சிட்டு, கழனி தண்ணிய குடிச்சிட்டு, நோய்-நொடி இல்லாம வளந்துடும்.

ரொம்ப வருசமா, இறைச்சிக்காக கேரளாவுக்கு போயிக் கிட்டிருந்த ஆயிரக்கணக்கான அடிமாடுகளை மீட்டு பராமரிச் சிட்டுருந்தேன். இப்போ என்னால முடியல. ஆசைக்கு கொஞ்ச மாடுகளை மட்டும் வெச்சிகிட்டு, மத்ததை ‘பிராணிகள் வதை தடுப்புச் சங்கம்‘ மூலமா அரசாங்க அனுமதி பெற்ற அமைப்புகளுக்கு இலவசமா கொடுக்கறேன்.

வெளிநாட்டுல கொடுக்கிற மாதிரி நாட்டுமாடு வளர்க்கறதுக்கு அரசாங்கம் மானியம் கொடுக்கணும். மாடு வளர்க்கிறதால கிடைக்கிற நன்மைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லணும். இதையெல்லாம் செஞ்சாத்தான் நம்ம பாரம் பரியத்தை எடுத்துச் சொல்ற நாட்டுமாடுகளை நாம காப்பாத்த முடியும். இல்லைனா... புத்தகத்துலயும், படத்துலயும் மட்டுந்தான் நம்ம குழந்தைகளுக்கு காங்கேயம் காளைகளையும், மணப்பாறை மாடுகளையும் காட்டமுடியும்'' என்றார் ஆதங்கத்துடன்.

காங்கேயம், உம்பளச்சேரி, மணப்பாறை ஆகிய வகை மாடுகள்தான் நாட்டுமாடுகளில் பெயர் பெற்றவை. இந்த மூன்று வகைகளுமே தற்போது மிக வேகமாக அழிந்து வருகின்றன.

அதைப்பற்றி ஏக்கத்தோடு பேசுகிறார் ஈரோடு மாவட்டம், செங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் பரம்பரையைச் சேர்ந்த நரேந்திரன் (94426-31377). தலைமுறை தலைமுறையாக காங்கேயம் மாடுகளை வளர்த்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த இவரிடம் தற்போது காங்கேயம் மாடுகள் இருநூறு வரை இருக்கின்றன.

''காங்கேயம் மாடுகளோட சிறப்பே... இதுகளுக்கு நோய், நொடி சீக்கிரம் தாக்காது. தீவனமே இல்லாட்டி கூட, பனைஓலை, கொழுக்கட்டைபுல்லுனு கிடைச் சதைச் சாப்பிட்டு தாக்குப்பிடிச்சுடும். உழவுக்கும், மத்த வெவசாயத்துக்கும் தோதா இருக்கும். எவ்வளவு நேரம் வேலை செஞ்சாலும் சோர்வாகாது. நல்ல உழைப்பாளி மாடுங்க. காங்கேயம் பசுவோட பால் குழந்தைகளுக்கு ரொம்ப நல்லதுன்னு சொல் வாங்க. அதே மாதிரி காளைகள் ஒன்றரை டன் பாரத்தை கூட சர்வசாதாரணமா இழுத்துடும். அதனால உழவுக்கும், மத்த வேலைகளுக்கும் இந்த மாடுக மாதிரி வேறங்கயும் மாடுக கிடையாது.

இவ்ளோ அருமையான காங்கேயம் மாடுக இப்ப குறைஞ்சுட்டு வர்றதுக்கு காரணம்... காங்கேயம் பசுக்களை யாரும் விரும்பாததுதான். காங்கேயம் பசு ரெண்டு, ரெண்டரை லிட்டர் பால்தான் கொடுக்கும். ஆனா... ஜெர்சி, சிந்து, மாடுக பால் அதிகமா கொடுக்கறதால, அதுகளை வளக்குறதில தான் சம்சாரிங்க ஆர்வம் காட்டுறாங்க. அதுக எந்த வேலைக்கும் பயன்படாது. பாலுக்கு மட்டுந் தான் ஆகும். காங்கேயம் பசுக்களை உழவு மாடாவும், வண்டி மாடாவும் கூட பயன்படுத்த முடியும். காங்கேயம் மாடுகளை வளர்க்க விவசாயிகளை நம்ம அரசாங்கம் ஊக்குவிக்கணும். விவசாயிகளும் காளைகளை மட்டும் வளர்க்காம, பசுக்களையும் வளர்த்து மாடுகளை பெருக்கணும்'' என்றார் ஏக்கத்துடன்.

திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழக வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ரெங்கநாதனிடம் (94431-89605) இதைப் பற்றிக் கேட்டபோது, ''பாலைத் தவிர வேறு வருமா னமே இல்லை என்ற காரணத்தால்தான் நாட்டுமாடு வளர்ப்பே குறைந்திருக்கிறது. நாட்டுமாடுகளிலிருந்து கிடைக்கும் சாணம், கோமியம் ஆகிய இரண்டும் மிக முக்கியமான உரங்களாகவும் கிருமிநாசி னியாகவும் இருக்கின்றன. நாமே சொந்தமாக இயற்கை உரங்களைத் தயாரிக்க இவை பயன்படு கின்றன. உரச்செலவு குறைந்து, மகசூல் அதிகரிப் பதோடு, இயற்கை முறையில் விளைந்த பொருள் என்பதால் கூடுதல் விலையும் கிடைக்கும் என்பதை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை. (கலப்பினப் பசுக்களிலிருந்து கிடைக்கும் சாணத்தை இயற்கை உரமாக பயன்படுத்தினால் பலன் இருக்காது என்று சுபாஷ் பாலேக்கர் போன்ற இயற்கை விவசாய விஞ்ஞானிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்).

சமீபகாலமாக உலகளவில் இயற்கை முறையில் விளையும் பொருட்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பும், அதனால் இயற்கை உரங்களுக்கு ஏற்பட்டுள்ள தேவையும் பாலைவிட நாட்டுப்பசுவின் கோமியத் துக்கும், சாணத்துக்கும், நல்ல வருவாயை பெற்றுத் தரக்கூடிய காலம் வந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிவிக்கிறது. இதை புரிந்து கொண்டால் நாட்டு மாடு வளர்ப்பு மீண்டும் புத்துணர்வு பெறும்.

வீட்டுத் தோட்டத்தில் கொஞ்சம் இடம் இருந்தாலும் பசுந்தீவனங்களை வளர்க்க வேண்டும். குறிப்பாக அகத்தி, வேலிமசால், குதிரைமசால், கிளரிசீடியா, சித்தகத்தி, சூபாபுல், கோ-1, கோ-3 போன்ற பசுந்தீவனங்களையும், புற்களையும் வளர்த் தாலே தீவனச் செலவைக் குறைத்து விடலாம். இதுபோன்ற நடவடிக்கைகள்தான் எதிர்காலத்தில் இந்திய விவசாயத்தை ஏற்றம் பெறச்செய்யும்'' என்று அடித்துச் சொன்னார்.

'இழந்ததைப் பெறுவோம் இயற்கை மூலமே' என்கிற வழியில் உலகமே மீண்டும் பாரம்பரியத்தை நோக்கி மெள்ள அடியெடுத்து வைத்துக் கொண்டு உள்ளது. இந்நிலையில் நமது சூழலுக்கு இயைந்து வரும் நாட்டுமாடுகளை நாம் இழந்து விடக் கூடாது.

மவுசு கூடிய மயிலைக்காளை

ஒரு காலத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாடுகள் வந்து போகும் அத்திக்கோம்பை, மணப்பாறை போன்ற புகழ்பெற்ற மாட்டுச் சந்தைகளுக்கு இப்போது இரண்டாயிரம் மாடுகள் வருவதே பெரும்பாடாக இருக்கின்றது. நாளுக்கு நாள் மாடுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றன.

வருகின்ற மாடுகளில் காங்கேயம் காளை ஜோடி அதிகபட்சமாக ரூ.90 ஆயிரம் வரைக்கும் விற்பனையாகிறது. மாட்டைப் பொருத்து விலை மாறுபடும். எட்டு மாதமான கன்றுகுட்டி ஆறாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை விலை போகிறது. பூச்சிக்காளை, செவலைக்காளை, மயிலைக்காளை, காரிகாளை என்று காங்கேயம் மாடுகள் நிறத்தை வைத்துதான் விலை போகின்றன. இவற்றில் மயிலைக்காளைக்கு மவுசு அதிகம்.

எச்சரிக்கை

மாடுகளை விற்கும்போது சில ஜகஜ்ஜால கில்லாடிகள் சில கோல்மால் வேலைகளைச் செய்வார்கள். அதைப்பற்றி ஒரு விவசாயி நம்மிடம் புட்டு புட்டு வைத்தார். ''பொதுவா சந்தையில விக்கிறதுக்கு மாடுகளைக் கொண்டு வர்ற சில வியாபாரிங்க, காளை மாட்டுக்கு புண்ணாக்குத் தண்ணியை வயிறு நெறையிற வரைக்கும் ஊத்திக் கொடுத்துதான் கொண்டு வருவாங்க. வயிறு சும்மா 'கும்'னு இருக்கும். மாடும் பார்க்கறதுக்கு மினுமினுப்பா இருக்கும். இதைப் பாத்து ஏமாந்துடக் கூடாது. சில தொத்த மாடுகளுக்கு புண்ணாக்குத் தண்ணியோட, சாணியையும் கரைச்சு கொட்டம் மூலமா ஊத்தி விட்டுருவாங்க. இந்த மாதிரி மாடுகளை கண்டுபிடிக்கறதுக்கு ஒரு வழி இருக்கு. நல்ல மாடுக ஒரு மணி நேரத்துக்கொரு முறை கட்டாயம் சாணி போட்டுடும். ஆனா, இந்த மாதிரி யான கரைசலை ஊத்திவிட்ட மாடுக நாள் முழுக்கவே சாணி போடாது.

மாட்டுக்கு வாதம் இருந்தா, பின்னங்கால் முன்னும் பின்னுமா இழுத்துக்கிட்டுப் போகும். அதையும் கவனிக்கணும். நாலஞ்சி கருஊமத்தை காயை இடிச்சி, தண்ணியில கலந்து இந்த மாதிரி மாடுகளுக்கு ஊத்தி விட்டுடுவாங்க. இப்படி செஞ்சா மூணு நாள் வரைக்கும் வாதம் இருக்கிறதே தெரியாது. மாட்டோட காலை லேசா தண்ணியில நனைக்க விட்டாலே போதும்... வாதம் இருந்தா தெரிஞ்சிப்போயிரும்.

வண்டிக்கு பூட்டுற மாட்டோட கால்ல சாக்கு சுத்தியி ருந்தாலோ... புதுசா லாடம் அடிச்சிருந்தாலோ ஆகாது. அந்த மாட்டோட குளம்பு தேய்ஞ்சிருக்கும்.''

அஞ்சில சிறுத்து... அஞ்சில பெருத்து!

மாடுகள் வாங்கும்போது எதையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது பற்றி வெரியப்பூரைச் சேர்ந்த சண்முகம் சொல்வதைக் கேளுங்களேன்.

''கிராமங்கள்ல 'அஞ்சில சிறுத்து, அஞ்சில பெருத்த அம்சமான மாடு'னு சொல்வாங்க. அந்த அஞ்சி என்ன தெரியுமா திமில், கால், கும்பம், உடம்பு, கழுத்து இதுக பெருத்தும், கடகு, வால், ரோமம், கொம்பு, காது இதெல்லாம் சிறுத்தும் இருக்கணும்.

நிறத்தை வெச்சும் மாடுகளை தரம் பிரிக்கலாம். காரி (கருப்பு)... கால் மாடு, செவலை... அரைமாடு, வெள்ளை... முக்கால் மாடு, ஜாதிமயிலை... முழு மாடு அப்படினு பிரிச்சி வெச்சிருக்காங்க. இந்த அடிப்படையில விலையை நிர்ணயிக்கலாம்'' என்று சொன்னவர்,

''சுழியைப் பாத்து மாடு வாங்கறதும் முக்கியம்'' என்றபடி அவற்றை பட்டியலிட்டார்.

நெற்றிச்சுழி அல்லது ராஜசுழி; மாடுகளின் நெற்றியின் மேல் காணப்படும்.

கொண்டை சுழி மாட்டுத் திமிலின் உச்சியில் இருக்கும்..

பாசிங்சுழி இரண்டு கொம்புகளுக்கு நடுவில் நெற்றிக்கு மேல் இரண்டு சுழிகளாக இருக்கும்.

முதுகுச்சுழி முதுகின் நடுப்பகுதியில் தனியாக இருக்கும்.

தாமனிச் சுழி தாடைக்கும், முன்னாங்காலுக்கும் இடையில் தாடிப்பகுதியில இருக்கும்.

மந்திரிசுழி தலைஉச்சியில் பின்பக்கமாக கீழே இறங்குவதுபோல் இருக்கும்.

இந்த ஆறு சுழிகளும் உள்ள மாடுகளை வாங்கலாம்.

பாடைச்சுழி முதுகின் இரண்டு பக்கமும் இருக்கும்.

பெண்டிழந்தான் சுழி வால் ஆரம்பிக்கும் இடத்துக்கும், ஆசன வாய்க்கும் நடுவில் இருக்கும்.

குடைமேல்சுழி நெற்றியில் ஒரு சுழிக்கு மேல் ஒன்றாக இருக்கும்.

இத்தகைய சுழிகள் உள்ள மாடுகளை வாங்கமாட்டார்கள். எட்டுப் பல்லுக்குக் குறைவாகவோ, திமில் சாய்ந்திருந்தாலோ, வாலின் நீளம் முழங்காலுக்குக் கீழே நீளாமல் இருந்தாலோ அந்த மாடுகளையும் வாங்கமாட்டார்கள்.