10-10-07

கரும்பு

ஜி.பிரபு ஆர் குமரேசன்

வாழ்த்துச் சொல்லும் இனிப்புக் குச்சி

மண் பானை... மாடு... செங்கரும்பு... இவைதான் பொங்கல் பண்டிகையின் மிகமிக முக்கியமான அடையாளங்கள். ஊரைச்சுற்றி கரும்புகள் விளைந்து கிடந்தாலும்... சந்தையில் செங்கரும்பு வாங்கி வந்து சூரியனுக்குப் படைத்துவிட்டு, அதை ருசிக்காவிட்டால் பொங்கலே சிறக்காது.

தமிழர்களோடு இப்படி ஒன்றிப்போய் கிடக்கும் அந்தக் கரும்பின் தாய்வீடு தெற்காசியா, குறிப்பாக இந்தியா என்று கூறப்படுகிறது. அதேசமயம், பிரேசில் நாட்டிலிருந்துதான் கரும்பு உலகுக்கு பரவியது என்றொரு கருத்தும் முன் வைக்கப்படுகிறது. என்றாலும்... உழவர் திருநாளான பொங்கலின்போது கரும்புகளை சூரியனுக்குப் படைத்து வழிபடுவது பன்னெடுங்காலமாக தொடர்வதை வைத்து, இதன் பூர்வீகம் இந்தியா என்று அடித்துச் சொல்கிறார்கள் பலரும்.

சரி, இந்தக் கரும்பு, பொங்கலின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மாறியது எப்படி?

அதைப்பற்றி திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முத்தையா பேசும்போது, “தை மாதம் அறுவடையாகும் சீரகச்சம்பா அரிசியை, பொங்கல் நாளன்று பொங்கிச் சாப்பிடுவதை காலகாலமாக கடைபிடித்து வருகிறோம். சம்பா நெல்லைப் போலவே கரும்புக்கும் தை மாதம்தான் அறுவடைக்காலம். அதனால்தான் கரும்பையும் பொங்கலன்று படையல் செய்து சாப்பிடும் பழக்கம் தொடர்கிறது. புல் வகையைச் சேர்ந்த தாவரம்தான் கரும்பு. பேய்க்கரும்பு, வெங்கரும்பு, நாணக்கரும்பு, செங்கரும்பு, ராமக்கரும்பு, சீனிக்கரும்பு என்று பல வகைகள் உள்ளன. ஒரு தட்டையிலிருந்து நான்கைந்து கரும்புத் தட்டைகளாக பெருகி வரும் கரும்பைப் போன்று குடும்பமும், உறவுகளும் பல்கிப்பெருக வேண்டும் என்பதை உணர்த்தவும்தான் கரும்பை வைத்து வழிபடுகிறோம். மங்களகரமான மஞ்சள், இனிப்பான கரும்பு, கிருமிநாசினியான பீலைப்பூ இவைகளை வைத்து பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து உண்ணுவதுதான் மரபு. இப்பழக்கம் நகரங்களில் படிப்படியாக குறைந்து வருவது வருத்தமளித்தாலும், கிராமங்களில் பரவலாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது மனநிறைவைத் தருகிறது” என்று வரலாற்று ஆதாரங்களை எடுத்து வைத்துச் சொன்னார்.

அதே பல்கலைக்கழகத்தின் வேளாண்துறைத் தலைவர் உதயகுமார், “வேத காலங்களில் இருந்தே இந்தியாவில் கரும்பு இருந்துள்ளது. வெப்ப மண்டலப் பயிரான கரும்பின் தாவரவியல் பெயர் ‘சக்காரம்’ (Saccharum). கரும்பு என்பதை சக்கரா என்று சமஸ்கிருதத்தில் முற்காலத்தில் அழைத்து வந்திருக்கின்றனர். அதுதான் சர்க்கரை என்று மருவியிருக்கிறது. அதுவே தாவரவியல் பெயராகவும் வந்திருக்கிறது. இந்தியாவிலிருந்துதான் சீனா, எகிப்து ஆகிய நாடுகளுக்கு கரும்பு அறிமுகமாயிருக்கிறது. ஆக, கரும்பு என்பது இந்தியாவின் பாரம்பரியப் பயிர் என்பதில் சந்தேகமே இல்லை. அலெக்ஸாண்டர் இந்தியாவுக்கு படையெடுத்து வந்தபோது ‘இனிப்புக்குச்சி’ என்று சொல்லி கரும்பு சாப்பிட்டதாக தகவல்கள் உள்ளன.

‘யானை இருந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பார்கள். இதை கரும்புக்கும் சொல்லலாம். சாப்பிடவும், சர்க்கரையாகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டாலும், இதன் எல்லாப்பகுதியுமே பயன் தரக்கூடியதுதான். கரும்புச்சக்கை மற்றும் கழிவுகளில் இருந்து மொலாசஸ், எத்தனால் போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கரும்புத்தோகை கால்நடைகளுக்கு நல்ல உணவாக இருக்கிறது.

தாவரங்கள் வளர்வதற்கு ஒளிச்சேர்க்கை முக்கியம். ஒளிச்சேர்க்கைக்கு முக்கிய தேவை சூரிய ஒளி. அதனால்தான் விவசாயிகள் சூரியனை கடவுளாக வழிபட்டு வருகிறார்கள். விளைந்த கரும்பு, மஞ்சள் போன்ற பொருட்களைப் படைக்கிறார்கள்.

கரும்பின் ஒரு வகையான ராமக்கரும்பு லேசான பச்சை நிறத்தில் வரிவரியாக இருக்கும். இதைத்தான் முன்பு பொங்கல் விழாவில் பயன்படுத்துவார்கள். தற்போது இந்த வகைக்கரும்புகள் அழிந்துவிட்டதால் செங்கரும்பு உபயோகப்படுத்துகிறார்கள். சீனிக்கரும்பு கொஞ்சம் கரடுமுரடாக இருப்பதால், அதைக் கடித்துச் சாப்பிடுவது கொஞ்சம் கடினம். பெரும்பாலானோர் விரும்பமாட்டார்கள். அதில் சுக்ரோஸ் எனப்படும் பொருள் அதிகம் இருப்பதால் வெல்லம் மற்றும் சர்க்கரை தயாரிக்க மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஆலைகளுக்கு அனுப்பப்படுவதால், இந்த வகை கரும்பு, 'ஆலைக்கரும்பு' என்றும் அழைக்கப்படுகிறது. செங்கரும்புகளைவிட ஆலைக்கரும்பில் லாபமிருப்பதால், செங்கரும்பு உற்பத்தி படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது’’ என்று சுவையான தகவல்களைக் கட்டுக்கட்டாக அடுக்கினார்.

தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக பயிரிடப்படும் செங்கரும்பு பற்றி திண்டுக்கல், நாட்டாமைக்காரன்பட்டியை சேர்ந்த விவசாயி பெருமாள் பேசும்போது, ''நாலஞ்சு வருசமாத்தான் பொங்கக் கரும்பை நடுறேன். ஏக்கர் கணக்குல நடாம வெறும் முப்பது சென்ட் நிலத்துலதான் பயிர் பண்றேன். குறைஞ்ச அளவுல பயிரிட்டாதான் வியாபாரிங் ககிட்ட விலை தெகையாட்டியும் நாமளே கொண்டு போய் விக்க முடியும்'' என்று சொல்லி, சாகுபடி குறிப்புகளை வெட்டி வைத்தார்.

‘‘மாசி மாதம் நடவு செய்தால் தை மாதவாக்கில் அறுவடைக்கு வந்துவிடும். மொத்தம் பத்து மாத பயிர். நிலத்தை உழுது தயார் செய்து கொண்டு, ஒரு அடி ஆழத்துக்கு நீள, நீளமாக வாய்க்கால் எடுத்து, அதில் இருக்கும் மண்ணை நன்றாக கொத்திவிட வேண்டும். அப்படிச் செய்தால்தான் மண் 'பொலபொல'வென்று இருக்கும். மூன்று கணுக்கள் இருப்பது போல் விதைக் கரணைகளை வெட்டி எடுத்துக் கொள்ளவேண்டும். அதை வாய்க்கால் குழியில் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வைத்து, காலால் மண்ணுக்குள் அழுத்திவிட்டுக் கொண்டே செல்லவேண்டும். நிலத்தில் எப்போதும் ஈரத்தைப் பராமரிப்பது முக்கியம். நன்றாக துளிர்விட ஆரம்பித் ததும் ஒரு களை எடுத்தால் போதும். நான்காவது மாதத்தில் கரும்பின் மீது மண் அணைக்கவேண்டும். இதுநாள் வரை குழிக்குள் இருந்த கரும்பு, மண் அணைத்த பிறகு, மேடான பார் மீது இருக்கும். இப்படி மண் அணைத்தால்தான் காற்றில் கரும்பு சாயாமல் இருக்கும்.

நான்காவது மாதத்துக்கு மேல் வெடிக்கும் தோகை யைக் கழித்து விடவேண்டும். அதைத் தொடர்ந்து 20 நாட்களுக்கு ஒரு முறை இப்படி தோகையை கழித்து விடவேண்டும். மூன்று மாதத்துக்கு ஒரு தடவை கடலைப் புண்ணாக்கு, வேப்பம்புண்ணாக்கு வைக்கவேண்டும். 30 சென்ட் நிலத்துக்கு மொத்தம் மூன்று மூட்டை தேவைப்படும். மாதம் ஒரு தடவை 10 கிலோ யூரியா, 10 கிலோ பொட்டாஷ் இரண்டையும் கலந்து தண்ணீர் பாய்ச்சும் போது கரைத்துவிட வேண்டும். மற்றபடி என் அனுபவத்தில் பொங்கல் கரும்பில் பெரிதாக எந்த நோயும் தாக்கிய தில்லை.

விளைந்த கரும்பை நேரடியாக விற்பனை செய்தால், ஒரு கரும்பு ரூ. 10 என்று விற்கலாம். வியாபாரியிடம் மொத்தமாக பேசிக் கொடுத்தால் ஐந்து ரூபாய்க்குதான் எடுத்துக் கொள்வார்கள். நாமே விற்கும்போது வெட்டுக்கூலி, வண்டி வாடகை நம் செலவுதான். வியாபாரியிடம் மொத்தமாக பேசிவிட்டால், அவர்களே வெட்டி எடுத்துக் கொள்வார்கள். முப்பது சென்ட் நிலத்தில் அறுவடை வரை 15 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும். செலவு போக 30 ஆயிரம் ரூபாய் கையில் நிற்கும்.

பொதுவாக பொங்கல் கரும்பை ஏக்கர் கணக்கில் பயிரிடுவதைவிட, குறைந்த அளவில் பயிரிடுவதே சிறந்தது. விற்பனையை நேரடியாக செய்யும் போது கூடுதல் லாபம் கிடைக்கும். தொடர்ந்து பயிர் செய்யும்போது விதைக் கரணைகளை நாமே தயாரிக்கலாம். அதற்கான செலவு முற்றாக குறையும்.'

''ஆலைக் கரும்பைவிட இதுல லாபம் குறைவுன்னாலும் ஒரேயடியா குறைச்சி எடை போட்டுடக்கூடாது. விலை முன்னபின்ன இருந்தாலும், நம்மளோட பாரம்பரிய விழாவான பொங்கலைக் கொண்டாடறதுக்கான கரும்பை விளைவிக்கறோம்கறதுல பெரிய சந்தோஷம் இருக்குதுங்க. அதை இல்லனு சொல்லிட முடியாது'' என்றார் கரும்பை வெட்டி நம் கையில் கொடுத்தபடி!

கரும்பு தின்ற கல்யானைகள்

யானைகளின் இஷ்டமான தீனிகளில் கரும்பும் ஒன்று. இதை வைத்து, கல் யானைகள் கரும்பு தின்றதாக ஒரு செய்தி மதுரை மாவட்டம், பாப்பாபட்டி கிராமத்தை மையமாக வைத்து பரவிக்கிடக்கிறது. இந்தக் கிராமத்தில் ஆச்சிக்கிழவி ஒச்சாண்டம்மன் கோயில் இருக்கிறது. இதன் முன்பாக பிரமாண்டமான கற்சிலைகளாக இரண்டு யானைகள் நிற்கின்றன. ஒரு சிலைக்கு எண்ணைக்காப்பு இடுவதால் கருமையாகவும், மற்றொன்று இயற்கையான வண்ணத்திலேயும் இருக்கிறது.

ஓச்சாண்டம்மனின் தாலி, சங்கிலி, சேலை, சிலம்பு ஆகியவை உசிலம்பட்டியில் இருக்கும் சின்னக்கருப்பு கோயிலில் ஒரு மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு சிவராத்திரியின் போதும் இந்த நகைகள் ஊர்வலமாக பாப்பாபட்டிக்கு எடுத்து செல்லப்படும். அப்போது இக்கோயிலின் சாமியாடி, சாட்டையால் பக்தர்களை அடித்துக்கொண்டே ஆசீர்வாதம் செய்வாராம்.

நம்நாடு வெள்ளைக்காரர்களின் பிடியிலிருந்தபோது, இந்த திருவிழாவைக் காண வந்த ஆங்கிலேயே துரை ஒருவர், சாட்டையில் அடிப்பதைப் பார்த்து 'காட்டுமிராண்டித் தனம்' என்றதோடு கல் யானைகளையும் கேவலப்படுத்தி பேசினாராம். சாமியாடிக்கு கோபம் வந்து, ‘கல் யானை கரும்பு தின்னும், வெள்ளை யானை வேதம் சொல்லும்' என்று சத்தமாகச் சொன்னாராம். உடனே, கரும்பு கட்டுகளை வரவழைத்து, கல் யானைகளின் முன்பாகப் போடச்சொல்லி துரை உத்தரவிட, அதன்படியே செய்தார்களாம். இதை யடுத்து, கல் யானையைச் சுற்றி துணியால் திரை கட்டி, சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்தபோது, கரும்புகள் அனைத்தையும் யானை சாப்பிட்டுவிட்டு சக்கையையும் தோகையையும் தனியே துப்பியிருந்ததாம்.

ஆடிப்போன துரை, மன்னிப்பு கேட்டுவிட்டு, இந்த விழாவுக்காக அப்பகுதியில் இருக்கும் அனைத்து அரசு அலுவலகங்களையும் மூடிவிட வேண்டும் என்று உத்தர விட்டாராம். அதன்படி இன்றும் இந்த திருவிழாவின் போது அலுவலகங்கள் மட்டுமில்லாமல், காவல்நிலையத்தை கூட மூடிவிடுகிறார்கள். இன்றும்கூட அந்தக் கல் யானைகளுக்கு கரும்பு படைத்து வழிபடுவது தொடர்கிறது.

சோழர்களின் கல்வெட்டுகளில் கரும்புக்கு வரி விதிப்பது தொடர்பான தகவல்கள் பலவும் இடம்பிடித் துள்ளன. விஜயநகர பேரரசின் கல்வெட்டுகளில், ‘வெட்டும் இடத்திலேயே கரும்பை ஆட்டி சாறு பிழிய வேண்டும்’ என்ற உத்தரவுகள் இடம் பெற்றுள்ளன. மாங்குடி மருதனார் என்ற சங்க கால புலவர், மதுரையின் சிறப்பைப்பற்றி கூறும்போது ‘இளநீரும், கரும்புச்சாறும் வாய்க் காலில் ஓடும்’ என்று பெருமையோடு குறிப்பிட்டுள்ளார்.

-படங்கள் இரா ரவிவர்மன்