அதிசயம்

கு.ராமகிருஷ்ணன்

ஜாதி இல்லை....மதங்கள் இல்லை....

பொங்கல் உண்டு

மெய்சிலிர்க்க வைக்கும் மெய்வழிச்சாலை

அங்கே... இஸ்லாமியர்கள் உண்டு. ஆனால், ரம்ஜான் இல்லை; இந்துக்கள் இருக்கிறார்கள்... தீபாவளி இல்லை; கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்... கிறிஸ்துமஸ் இல்லை. எல்லாவற்றையும் மறந்து, மனிதர்களாக அவர்கள் ஆடிப்பாடி கொண்டாடும் ஒரு திருவிழா... தைப்பொங்கல்!

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ளது கீழ்க்குறிச்சி. இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊறல்மலை அடிவாரத்தில் இருக்கும் மெய்வழிச்சாலையில்தான் அப்படியரு அதிசய பொங்கல்!

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் புத்தாடை அணிந்து, மகிழ்ச்சியோடு காத்து நிற்கின்றனர். மண்தரையில் குழி தோண்டி, குழியின் மேல் விளம்பில் மூன்று மண் கொண்டைகள் அமைக்கப்பட்டு, அதன் மீது அலங்கரிக்கப்பட்ட 600-க்கும் மேற்பட்ட மண்பானைகள் நீண்ட வரிசையில் தயாராக இருக்கின்றன. குழிக்குள் விறகுகள் போடப்பட்டிருக்கின்றன. பெண்களும், சிறுவர்களும் பானைகளின் அருகில் நிற்க, ஆண்கள் அனைவரும், மெய்வழிச்சாலை பொன்னரங்க ஆலயத்தைச் சுற்றி வருகிறார்கள். ஊர்த்தலைவர் கையில் தீபத்துடன், முன்னால் நடந்து வருகிறார். அனைவரின் பார்வையும், அவர் கையிலிருக்கும் தீபத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, கையில் இருக்கும் நெய் தீபத்தை, தன் தலைக்கு மேல் உயர்த்திக் காட்டுகிறார் ஊர்த்தலைவர். அதேநொடியில், அனைத்து பானைகளுக்கும் சட்டெனத் தீ மூட்டப்படுகிறது. சற்று நேரத்தில் பொங்கல் மேலெழும்புகிறது. ‘பொங்கலோ பொங்கல்' என ஒட்டுமொத்தக் கூட்டமும் ஒருமித்த குரலில் பாடுகிறது.

ஒவ்வொருவரும் தங்களது பானைகளில் உள்ள பொங்கலில் சிறு பகுதியை எடுத்துச் சென்று, அந்த ஆலயத்தில் வைக்கிறார்கள். பூஜை முடிந்ததும், அந்தப் பொங்கல் ஒன்றாக கலக்கப்பட்டு, எல்லோருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

-பல்லாண்டு காலமாக இங்கே இப்படித்தான் பொங்கலிடு கிறார்கள்!

‘‘இந்த ஊர்ல எல்லா ஜாதி, மதத்தைச் சேர்ந்தவங்களும் இருக்கோம்; ஆனா, மதப்பண்டிகைகள் எதுவுமே கொண்டாட மாட்டோம். அதுல எங்களுக்கு நம்பிக்கை இல்லை. பொங்கல் திருவிழா மட்டும்தான் ஜாதி, மதங்களை கடந்த சமத்துவமான விழா. அதனாலதான் அதை மட்டும் கொண்டாடுறோம்’’ என்கிறார் இந்த கிராமத்தில் வசிக்கும் சாலை அப்துல் ஹமீது.

மாட்டுப்பொங்கலையும் வெகு சிறப்பாக கொண்டாடும் இவர்கள், அதை 'செல்வப்பொங்கல்' என்றே பாசத்தோடு உச்சரிக்கிறார்கள். கால்நடைகளுக்கு பொங்கல் கொடுத்து முடித்ததும், அடுத்ததாக வீர விளையாட்டுகளும் உண்டு. சிலம்பாட்டம், கோலாட்டம் என கிராமமே குதூகலத்தில் திளைக்குமாம்.

‘‘தஞ்சை உலகத்தமிழ் மாநாடு நடந்தபோது, நானும் ஒரு முக்கிய அதிகாரியாக இருந்து பணியாற்றினேன். மாநாடு தொடர்பான பெரும்பாலான ஏற்பாடுகள் என் பொறுப்புலதான் நடந்துச்சு. நான் மட்டுமல்ல, இந்த மெய்வழிச்சாலையில் வசிக்கிற பலரும் பெரிய பெரிய பதவிகளை வகிச்சவங்கதான். ரயில்வே, தொலைத்தொடர்பு துறைனு பல துறைகளில் இப்ப உயர் அதிகாரிகளா இருக்கறவங்களும் இந்தப் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துக்குறாங்க. நானும் அழகாக கும்மி அடிப்பேன்’’ என்று உற்சாகம் பொங்கப்பேசினார் ஒய்வுபெற்ற மாவட்ட வருவாய் அதிகாரியான மெய்வழி கோபாலகிருஷண அனந்தர்.

ஏற்றத்தாழ்வற்ற ஓர் சமரச சமத்துவம் என்பதே, இங்கு வசிப்பவர்களின் கோட்பாடு. 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்ற பழந்தமிழ் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு... சாதி, மத வேறுபாடு இல்லாமல் வாழ நினைப்பவர்கள் உள்ளன்புடன் வாழும் ஊர்தான் மெய்வழிச்சாலை.

''மதுரை மாவட்டம், மார்க்கம்பட்டியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த காதர் பாட்சா என்பவர்தான் இந்த மெய்வழி மதத்தை உருவாக்கினார். அவரைத்தான் நாங்க ஆண்டவனா வழிபடுறோம். அவரோட முயற்சியாலதான் 1942-ம் வருஷம் இந்த மெய்வழிச்சாலை கிராமம் உருவாக்கப் பட்டது. இந்த மதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்ட ஆண்களை, அனந்தர்கள் என்றும், பெண்களை, அனந்தரிகள் என்றும் அழைப்போம்’’ என்று அந்த ஊரின் பூர்வீகம் பற்றி நம்மிடம் சொன்னார் ஒய்வுபெற்ற ரயில்வே அதிகாரியான மெய்வழி வரதராஜ அனந்தர்.

தற்பொழுது மெய்வழிச்சாலை கிராமத்தில் சுமார் 500 வீடுகள் உள்ளன. எல்லா வீடுகளுமே ஒரே பாணியில், மிக நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளன. ஓட்டு வீடு, மாடி வீடு என்று எதையும் பார்க்க முடியாது. முழுக்க முழுக்க தென்னங்கீற்றுகளால் அமைக்கப்பட்டுள்ள குடிசை வீடுகள். அழகழகான மூங்கில் கதவுகள் இதுதான் வீடுகள். வெளியூர் சென்றாலும் பூட்டுப் போடுவதில்லை.

அவர்கள் வழிபடும் பொன்னரங்க ஆலயமும் கீற்றுக்கொட்டகைதான். மண்தரையில் இருந்து சுமார் இரண்டடி உயரத்துக்கு சிமென்ட் சுவர். அதற்குமேலே தென்னங்கீற்றுகளை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது அந்த ஆலயம். உட்புறம் முழுக்க முழுக்க மண் தரை.

பழமை மாறக்கூடாது, நகர்ப்புற சொகுசு வாழ்க்கைக்கும்-ஆடம்பரங்களுக்கும் கொஞ்சம் கூட இடம் தரக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறார்கள். கிராமச் சூழல் பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டு கிறார்கள். அதனால்தான் தொலைக்காட்சிப் பெட்டி போன்ற பொழுதுபோக்கு சாதனங்கள் எதுவும் இங்கு இல்லை.. மின்சார விளக்குகள் கூட இல்லை. சூரியசக்தி விளக்குகள் மட்டுமே சில வீடுகளில் ஒளிர்கின்றன.

இங்கு, கழிவறைகளும் இல்லை. ஊர் எல்லையில் உள்ள காட்டுப்பகுதிக்குதான் செல்கிறார்கள். சிகரெட், போதை பாக்குகள் போன்ற தீய பழக்கவழக்கங் களுக்கும் கூட கடுமையான தடை.

இதைப்பற்றியெல்லாம் நம்மிடம் அசைபோட்ட மெய்வழிச்சாலை சிவாகரன், ''ஆலயத்துக்கு சொந்தமான 20 எக்கர் நிலத்தில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. ஒருமுறை கூட ரசாயன உரம், பூச்சி மருந்து எதுவும் பயன்படுத்தியதில்லை. இங்கு விளையும் இயற்கை முறை விவசாய நெல்லைத்தான், இங்குள்ள மக்கள் விலை கொடுத்து வாங்கிச் சாப்பிடுகிறார்கள். இங்குள்ளவர்களின் உழைப்பில் 4 கிணறுகள் வெட்டப்பட்டுள்ளன. இங்குள்ள வீடுகளும் இவர் களால் கட்டப்பட்டவைதான். மின்சார அலைகள் மூளையை பாதிக்கும் என்பதால்தான் மின் சாரத்தை பயன்படுத்துவதில்லை. உடல் வெப்ப நிலையை ஒரே சீராக வைத்திருக்கும் என்பதால் தான் தென்னங்கீற்றுகளால் வீட்டின் மேற் கூரைகள் மேயப்பட்டிருக்கின்றன'' என்று அவர்களின் வாழ்க்கை முறைக்கு விளக்கங்களைக் கொடுத்தார்.

கண்மண் தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் கணினிக் காலமிது. அர்த்தமே தெரியாமல் அத்தனைக்கும் ஆசைப்படும் கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கிறது. இதற்கு நடுவே... இப்படியும் வாழலாம் என்று எடுத்துக்காட்டாக நிற்கிறது இந்த மெய்வழிச்சாலை!

ஆட்டுக்கோர் திருவிழா

பொங்கலை மட்டுமே கொண்டாடும் மெய்வழிச்சாலை கிராமத்தின் இன்னொரு முக்கிய திருவிழா ஆடு மேய்ப்பு திருக்கோல திருவிழா. அதுவும் கிராமப்புறம் சார்ந்த, மதச்சார்பற்ற விழாவாகவே மணக்கிறது. வைகாசி மாதம் வெகுவிமர்சையாக இந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள். ஆடுகளின் வகைகளையும் அதன் குணாதிசயங்களையும், சிறப்புகளையும் அந்த விழாவின் போது புகழ்ந்து பாடுவார்களாம்.

-படங்கள் மு. நியாஸ் அகமது