மகசூல்

பொங்கல் சிறப்பிதழ்

ஜல்லிப்பட்டி பழனிச்சாமி, அன்பழகன்

வைராக்கிய அரசாணி !

மாட்டுப் பொங்கல் நாளில் உழவர்கள் விரும்பிப் படையல் செய்யும் சமாச்சாரங்களில் ஒன்று... அரசாணிக்காய் கூட்டுப் பொரியல்.
ஆடியில் விதைச்சி... ஆவணியில் களை எடுத்து... ஐப்பசியில் தழைத்து... மார்கழியில் பூத்து... தை மாதத்தில் விளைந்து நின்று... தமிழர் பெருமைப்பேசும் பாரம்பரியம் கொண்டதுதான் 'அரசாணி' என்கிற பரங்கிக்காய்.

அதுவும் நாட்டுரகம் என்றால் அதன் மவுசே தனிதானே! வீரிய ரகங்கள் வீறு நடைபோட்டுக் கொண்டிருப்பதற்கு நடுவே நாட்டுரக அரசாணியை விடாப்பிடியாக பல வருடங்களாக வெள்ளாமை செய்து வருகிறார் கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள மலையாண்டிக்கவுண்டனூர் விவசாயி ஆறுச்சாமி (99434-38802). அவரைத்தேடி முற்பகல் வேளையில் சென்றபோது, வழியெங்கும் ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்து கிடந்தன வீரியரக அரசாணிக் காய்கள்.

‘‘எல்லாப் பட்டத்திலும் சாகுபடி செய்ய வீரியரகம் தாங்க சரியா வரும். எங்க பகுதியிலயும் அதுதாங்க அதிகம். சிலர் மட்டுந்தான் நாட்டுரகம் போடுறோம். பாட்டன், பூட்டன் காலத்துல இருந்தே பரம்பரையா நாட்டுரக அரசாணியை விடாம போட்டுக்கிட்டு வர்றோம். ஒரு வருஷம் ஒரு பட்டம்தான் வரும். ஆடிபட் டத்துல விதைச்சு... தை மாசம் அறுவடை செஞ்சா... பொங்கலுக்கு வீடு வந்து சேர்ந்துரும். வீரியரகம் போட்டா, ‘வருஷம் பூராவும் காசு பார்க்கலாம்’னு பலபேரு எங்கிட்ட சொன்னாங்க. எனக்கு காசு பணம் முக்கியம் இல்லீங்க. நாட்டுரக அரசாணியை விடாம காப்பாத் திக்கிட்டு வரணுங்கிற வைராக்கியம்தான் முக்கியம்.

விதையை வெளிய தேடாம... நல்ல பழுத்த அரசாணியில இருந்தே எடுக்கிறேன். சாம்பல், இல்லனா சாணத்துல அந்த விதைகளைப் போட்டு, காய வெச்சி, விதை நேர்த்தி செஞ்சி, வருஷா வருஷம் சேமிச்சிக்கிறேன்.

கார்த்திகை, மார்கழியில தகதகனு தங்க நிறத்துல ஏகமாக பூத்து குலுங்கி நிக்கும் அரசாணி பூ. அதிகாலையில வாசல்ல கோலம் போட்டு, அதன் மத்தியில சாண உருண்டை புடிச்சி, அதுல அரசாணிப் பூவை சொருகிவெச்சி சாமி கும்பிடு வாங்க. அந்த அளவுக்குத் தெய்வத்தன்மை கொண்டது அரசாணி’’ என்று நிறுத்திய ஆறுச்சாமி, சாகுபடி குறிப்புகளைச் சொன்னார். அது-

‘ஒரு ஏக்கரில் அரசாணி விதைக்க 500 கிராம் விதை தேவை. வெளியில் வாங்கினால் 250 ரூபாய் செலவாகும். நேர்த்தி செய்த விதைகளை மூன்று மாதம் வரை துணியில் மூட்டைக் கட்டி வைக்க வேண்டும். இப்படி செய்தால்தான் முளைப்புத் திறனும், இனத்தூய்மையும் கூடும். ஆடிப்பட்டத்தில் நடவு போடலாம்.

ஐந்து வண்டி தொழு உரத்தை அடியுரமாகப் போட்டு, இரண்டு உழவு பிடித்து, பிறகு பாத்தி அமைக்க வேண்டும். கூடவே குறுக்கு வாய்க் கால்கள் அமைக்கவேண்டும். வாய்க்கால்களுக்கு இடையே 10 அடி இடைவெளி இருக்கவேண்டும். வாய்க்கால் ஓரத்தில் 3 அடிக்கு ஒரு விதை வீதம் ஊன்றவேண்டும். உடனடியாக உயிர் தண்ணீர் பாயச்சுவது அவசியம். ஆடி மாதம் முடிந்து... மழைக் காலம் வருவதால் தண்ணீர் தேவை அதிகம் இருக்காது (கிணற்றுப் பாசனம், வாய்க்கால் பாசன வசதி இல்லாத விவசாயிகள் மானாவாரியாக பயிர் செய்யலாம். ஆனால், இதற்கு மழை மனது வைக்கவேண்டும்).

நடவு செய்த 15-ம் நாளில் ஒரு களை எடுப்பது நல்லது. 30-ம் நாளில் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட உரம் 50 கிலோ கொடுக்கவேண்டும். இதனால் கொடிகள் ஒரே சீராக வளர்ந்து பூக்கள் உதிர்ந்து விடாமல் நிற்கும். இதுதான் நாட்டு ரகத்தின் சிறப்பு. 60-ம் நாளில் கொடி ஏகமாக படர்ந்து... பிஞ்சு பிடித்து சிரிக்கும். 80-ம் நாளில் மட்டும் 2020 கலப்பு உரம் 25 கிலோவும், பொட்டாஷ் 25 கிலோவும் கலந்து கொடுக்கவேண்டும்.

85-ம் நாளில் முதல் பறிப்பு. அதைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு ஒரு பறிப்பு வீதம். 150 நாட்கள் வரை அறுவடை செய்யலாம். மொத்த மகசூல் 15 டன்னுக்கும் மேல் கிடைக்கும். வீரிய ஒட்டுரகம் என்றால் முட்டு வளிச் செலவு அதிகமாகும். நாட்டு ரகத்தில் அந்தப் பிரச்னை இல்லை.

வீரிய ஒட்டுரகத்தில் நோய் அதிகம் வர வாய்ப் புள்ளது. அதனால் பூச்சி மருந்து நிறைய தெளிக்க வேண்டி இருக்கும். நாட்டுரகத்தில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகமுள்ளது. இதனால் பூச்சி மருந்துக்கு வேலை கிடையாது.'

நிறைவாக பேசிய ஆறுச்சாமி, ‘‘காய் ஒவ்வொண்ணும் 7 கிலோவுக்கு மேல இருக்கும்’’ என்றபடி பரங்கிக்காயை கையில் தூக்கினார் ‘முதல் மரியாதை’ படத்தில் பாறையைத் தூக்கிக் கொண்டு நிற்கும் சிவாஜி கணேசன் கணக்காக!

அரியலூர் மாவட்ட பகுதிகளில் சோளம், கம்பு, வரகு, கடலை சாகுபடிக்கு அடுத்தபடியாக முன்னணியில் இருப்பது அரசாணி எனப்படும் பரங்கிக்காய் விவசாயம்தான். அரியலூர் தாலூகாவின் ராயப்பபுரம் கிராமத்தில் பரங்கிக்காய் சாகுபடி செய்துவரும் விவசாயி வெள்ளையன் (அலைபேசி 94438-37236, 04329-290632), ‘‘என்கிட்ட இருக்கற நாலு ஏக்கர்ல 10 வருஷமா பரங்கிக்காய்தான் போடுறேன். ஆடி மாசத்துல மழை இருந்தா அதனோட மகசூலே தனிதாங்க. போன ஆடியில சுத்தமா மழையே இல்ல. பொழப்பும் போச்சு. இந்த வருஷம் ஆடி தொடக்கத்துலயே வருணபகவான் லேசா கருணை காட்டினதால, விளைச்சலும் அமோகம். ஏக்கருக்கு சுமாரா 15 டன் வரைக்கும் மகசூல் கிடைக்கும்.
விளைச்சல் நேரத்தில் எலித் தொல்லை அதிகம் இருக்கும். பழத்தை குடைஞ்சி நாசமாக்கிடும். எலிக் கூண்டு வெச்சா ஓரளவு சமாளிக்க முடியும். பரங்கி விதை போடும்போதே வயலைச் சுத்தி, வரப்பு ஓரத்துல ஊடுபயிராக துவரை விதைக்கலாம். ஏக்கருக்கு 100 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும். இது கூடுதல் லாபம். மாட்டுக்குத் தீவனமாக சோளத்தையும் வரப்பு ஓரத்துல விதைச்சிக்கலாம்’’ என்கிறார்.

அரசாணி... மகாராணி!

''தமிழ்நாட்டில் விளையும் காய்கறிகளில் அதிக எடை கொண்ட காய் அரசாணி. அந்த காலங்களில் மகாராணிகளை ‘அரசாணி’ என்று அழைப்பதுதான் வழக்கம். தமிழர்களின் திருமணம் தொடங்கி... அனைத்து விசஷசங்களிலும் நீக்கமற நிறைந்து காணப்படும் முதன்மை காயும் இதுதான்’’ என்கிறார் உடுமலையைச் சேர்ந்த விவசாய ஆலோசகர் குருசந்திரன்.