10-10-07

பிரச்னை

பொங்கல் சிறப்பிதழ்

கரு முத்து

சுரண்டல் லாட்டரியான பயிர் காப்பீடு!

‘பயிர் காப்பீடு பாவ்லா திட்டமா?’ என்ற தலைப்பில் கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர்-13 தேதியிட்ட 'ஜூ.வி.' இதழின் ‘பசுமை விகடன்’ பகுதியில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், அவர்களின் முதலீடு வீணாவதைத் தடுக்கவும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பயிர்க் காப்பீட்டுத் திட்டம் பற்றியும், அதில் உள்ள குறைகளைப் பற்றியும் அந்தக் கட்டுரையில் விரிவாகச் சொல்லியிருந்தோம்.

ஓராண்டு உருண்டு விட்ட நிலையில், நாம் சுட்டிக் காட்டியிருந்த விஷயங்கள் தற்போது சரி செய்யப்பட்டுவிட்டனவா... இப்போது அந்தத் திட்டம் எப்படியிருக்கிறது..? என்று விசாரித்தோம். ஒரு சில விஷயங்களில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், இன்னமும் விவசாயிகளுக்கு முழுமையான பலன் தருவதாக அது மாற்றி அமைக்கப்படவில்லை என்றே தெரிகிறது.

‘இந்தத் திட்டம் குறித்து விவசாயிகளிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை’ என்று அக்கட்டுரையில் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து பல லட்சம் விவசாயிகள் இருந்தும், அந்த வருடம் சுமாராக ஐம்பதா யிரம் பேர்தான் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்திருந்தார்கள். ஆனால், இப்போது கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் வரை தங்கள் பயிருக்கு காப்பீடு செய்திருக்கிறார்கள் என்பது ஆறுதலான விஷயம்.

‘தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுபவர்களுக்கு மட்டுமே காப்பீடு செய்கிறார்கள். கடன் பெறாமல் தனிநபர்களாக செல்லும் விவசாயி களுக்கு இன்ஷ¨ரன்ஸ் செய்ய மறுக்கிறார்கள்’ என்று இருந்த நிலை மாறி, எல்லா விவசாயிகளும் காப்பீடு செய்யும் வகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

‘‘போன வருஷம் ‘நவம்பர் மாசம் வரைக்கும்தான் இன்ஷ¨ரன்ஸ் கட்டலாம்’னு சொன்னாங்க. அதோட யாருக்கும் இதப்பத்தி அதிகமா தெரியல. பேங்குல லோன் வாங்குனா பேங்க்காரங்களே கொஞ்சம் பணத்தை பிடிச்சு இன்ஷ¨ரன்ஸ் கட்டிடு வாங்க. கடன் வாங்காதவங்க இதப்பத்தி கவலையேபடறதில்லை. கவலைப்பட்டாலும் யாருக்கும் இன்ஷ¨ரன்ஸ் செய்து கொடுக்க மாட்டாங்க.

ஆனா, இந்த வருஷம் அரசாங்கம் முன் கூட்டியே இந்தத் திட்டத்தைப் பத்தி பேப்பர்ல நல்லா விளம்பரம் செஞ்சாங்க. அதோட காலக் கெடுவையும் டிசம்பர் வரைக்கும் மாத்தினாங்க. ‘கடன் வாங்காத விவசாயியும் இன்ஷ¨ரன்ஸ் கட்டலாம். அதுக்குப் பிரிமியம் தொகையில பாதியை அரசாங்கமே கட்டிடும்’னு சொல்லி யிருந்தாங்க. அதனாலதான் இந்த வருஷம் எல்லா விவசாயிங்களுமே இன்ஷ¨ரன்ஸ் கட்டிட்டாங்க’’ என்று சொன்னார் குமிளங் காட்டைச் சேர்ந்த சாமிநாதன்.

ஒரு ஏக்கர் சாகுபடி செய்யும் விவசாயி, குறைந்தது எட்டாயிரம் ரூபாய்க்கு பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம். பிரிமியத் தொகை இரண்டு சதவிகிதம். ஒரு சதவிகிதத்தை தமிழக அரசே செலுத்திவிடும். மீதி ஒரு சதவிகிதத்தை மட்டும் விவசாயி செலுத்தினால் போதும். இந்த விஷயம் தெள்ளத்தெளிவாக தமிழக அரசால் எடுத்து வைக்கப்படவே, இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

'இந்தத் திட்டம், எந்தளவுக்கு விவசாயிகளுக்குப் பயன் தரும்?’ என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்ட தலைவர் கிரிதரனிடம் கேட்டோம்.

‘‘தமிழக அரசு முயற்சி எடுத்து... இவ்வளவு விவசாயிகளை இத்திட்டத்தில் சேர்த்தது பாராட்டுக்குரியதுதான். ஆனால், உரிய பலன் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். காரணம், இத்திட்டத்தின் சட்டதிட்டங்கள் அப்படி.

உதாரணமாகச் சொன்னால் ஒரு ஊரில் பத்து மோட்டார் சைக்கிள் இருக்கிறது. அந்த பத்துக்கும் இன்ஷ¨ரன்ஸ் செய்திருக் கிறார்கள். யாருடைய மோட்டார் சைக்கிள் விபத்துக் குள்ளானாலும் அதன் உரிமையாளருக்கு இழப்பீடு கிடைத்துவிடும். ஆனால், பயிர் இன்ஷ¨ரன்ஸ் திட்டத்தில் பார்த்தால்... பத்து விவசாயி இன்ஷ¨ரன்ஸ் பண்ணியிருந்தாலும், அதில் ஒரு விவசாயிக்கு தனிப்பட்ட முறையில் மழையாலோ, வெள்ளத்தாலோ இழப்பு ஏற்பட்டிருந்தாலும் அவருக்கு இன்ஷ¨ரன்ஸ் தொகை கிடைக்காது. இன்ஷ¨ரன்ஸ் அதிகாரிகள் ஏற்கெனவே தேர்ந்தெடுத்து குறித்து வைத்துள்ள ஏதாவது ஒரு விவசாயியின் வயலில் செய்யப்படும் மாதிரி அறுவடையில் என்ன முடிவோ... அதன் அடிப்படையில்தான் காப்பீடு தொகை கிடைக்கும். இது எப்படி சரியான முறையாகும் என்பதுதான் எங்கள் கேள்வி? அதனால் ஒவ்வொரு விவசாயிக்கும் தனிப்பட்ட காப்பீடு செய்து கொள்ளும் வகையில் இத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கைகளை வைத்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால், கேட்பாரில்லை’’ என்று கவலையை வெளிப் படுத்தினார்.

வருவாய் சரகம் (பிர்கா) வாரியாகத்தான் தற்போது கணக் கெடுப்பு செயகிறார்கள். அதாவது, ஒரு சரகத்தில் எத்தனை கிராமங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஐந்து கிராமங்களைத் தேர்ந்தெடுக் கிறார்கள். அந்த கிராமங்களில் இரண்டு சர்வே எண்களில் உள்ள நிலத்தைக் குறித்துக் கொள்கிறார்கள். குறிப்பிட்ட அந்த நிலங்களில் அறுவடை காலத்தில் வேளாண் துறை, பொருளாதார புள்ளியல் துறை மற்றும் காப்பீட்டு நிறுவனம் ஆகிய மூன்றும் சேர்ந்து ஒரு சதுர அடி அளவில் பயிரை அறுவடை செய்கிறார்கள். ஐந்து கிராமத்திலும் மொத்தம் பத்து இடத்தில் இப்படி அறுவடை செய்து, கிடைக்கும் அந்த நெல்லின் எடையை சராசரியாகக் கொள் கிறார்கள். சென்ற மூன்றாண்டு களில் விளைந்த அளவிலிருந்து, இந்த சராசரி அளவு எந்த அளவுக்குக் குறைகிறதோ... அதை வைத்துதான் ஒட்டுமொத்த வருவாய் சரகத்துக்கும் காப்பீடு தொகையை அறிவிப்பார்கள்.

''இப்படிக் கணக்கெடுப்பது அபத்தத்திலும் அபத்தம்'' என்று எதிர்ப்புக் காட்டுகிறார்கள் விவசாயிகள்.

''ஒரு ஊரிலேயே ஒரு வயலுக்கும் மற்ற வயலுக்கும் ஏகப்பட்ட ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் போது, ஒரு சரகத்துக்குள் இருக்கும் பத்து அல்லது பதினைந்து கிராமங்களில் இருக்கும் ஊர்களுக்கு ஒரே மாதிரியான கணக்கு எப்படி சரிப்பட்டு வரும்?'' என்பது அவர்களின் கேள்வி.

இதைப்பற்றி பேசும் காவிரி டெல்டா விவசாயிகள் சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த வலிவலம் சேரன், ‘‘ஒரு நம்பர் லாட்டரி மாதிரி ஆகிப்போச்சுங்க இந்த இன்ஷ¨ரன்ஸ் விவகாரம். மாதிரி அறுவடை செய்த வயல்ல பாதிப்பு இருந்தா, எல்லா வயல்காரங் களுக்கும் இழப்பீடு. அதே வயல்ல பாதிப்பு இல்லைனா மத்த யாருக்கும் எதுவும் இல்லை. கிட்டத்தட்ட அதிர்ஷ்ட லாட்டரி தாங்க. அதேபோல கடந்த மூணு வருஷ சராசரியை கணக்கு பார்க்கறதும் தவறுங்க. மூணு வருஷமா ‘பாதிப்பு’னு அரசே நிவாரணம் கொடுத்துச்சே. அப்படி பாதிக்கப்பட்ட அளவை வைத்து சராசரி எடுக்காம... அரசு ஒரு உச்சபட்ச அளவை நிர்ணயம் செஞ்சி, அதன்மூலம் இழப்பீடை கணக்கெடுக்கணும்’’ என்றார்.

‘இவர்கள் சொல்வதை செயல் படுத்துவதில் என்ன சிக்கல்?’ என்று சென்னையில் இருக்கும் மண்டல பயிர் காப்பீடு அலுவலக வட்டாரத்தில் கேட்டபோது, ‘‘இது தேசிய அளவில் செயல்படுகிற ஒரு திட்டம். அதனால்தான் முதலில் மாவட்ட அளவில் மாதிரி அறுவடை செய்யப்பட்டது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் செய்யப்பட்டு... வருவாய் சரக அளவில் செய்யப்படுகிறது.

அதையே தனிநபர் காப்பீடாக செய்ய வேண்டும் என்றால், அதற்குரிய வசதிகளோ ஆட்களோ எங்களிடம் இல்லை என்பதுதான் உண்மை. அது மட்டுமில்லாமல் இது குறித்து முடிவு எடுப்பதற்கு அதிகாரமும் எங்களிடம் இல்லை. மத்திய அரசு என்ன கொள்கை முடிவு எடுக்கிறதோ அதைச் செயல்படுத்துவதுதான் எங்கள் வேலை’’ என்கிறார்கள்.

இதற்கும் விவசாயிகள் பதிலை தயாராக வைத்திருக் கிறார்கள். ‘கிராம அளவில் வேலை பார்க்கும் வி.ஏ.ஓ. மற்றும் ஒன்றிய அளவில் இருக்கும் வேளாண் அலுவலர்கள் ஆகியோரை வைத்து தனிநபர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தலாம்’ என்று வழி சொல்கிறார்கள் விவசாயிகள்.

ஒவ்வொரு விவசாயியும் தனிப்பட்ட முறையில் பயிர் பாதுகாப்பீடு செய்து கொள்ள வழி செய்து தரவேண்டும். அப்போதுதான் அது உண்மையான பயிர் பாதுகாப்பீடாக அமையும். இல்லையென்றால் விவசாயிகள் சொல்லுவது போல் ‘சுரண்டல் லாட்டரி’ என்பதாகத்தான் இருக்கும்!