இயற்கை

பொங்கல் சிறப்பிதழ்

நம்மாழ்வார்

மாடு அல்ல மற்றையவை

கெடுதல் ஏற்படுத்தாத சிறந்த செல்வம் கல்வியே என்று சொல்ல வந்த வள்ளுவர், ‘கேடில் விழுச் செல்வம் கல்வி’! என்று ஆரம்பித்து, ‘மாடு அல்ல மற்றையவை’ என்று முடிக்கிறார். தமிழில் ‘மாடு’ என்ற சொல்லுக்கே 'செல்வம்’ என்றொரு பொருள் உண்டு.

பெற்ற தாயை அடுத்து, இரண்டாவது தாயாக பூமியையும், மூன்றாவது தாயாக பசுவையும் பார்ப்பது நமது பாரம்பரிய வழக்கமாகத் தொடர்கிறது. தைப் பொங்கல் தமிழர்களது அறுவடைத் திருவிழா. தை முதல் நாள்... மனிதர்க்கு விழா. இரண்டாம் நாள்... மாட்டுக்கு விழா. அன்றைய தினம் கால்நடைகளை போற்றுகிறோம். நம்மோடு உழைத்த காளைக்கு உணவு ஊட்டுவதற்கு முன்பாக, அதை ஈன்ற பசுவுக்கு முதலில் சோறு ஊட்டுகிறோம்.

வைணவக் கோயில்களில், பசு வணக்கத்துக்கு உரியதாகக் கருதப்படுகிறது. சிவன் கோயில்களில், காளை உயரிய இடத்தில் வைத்து போற்றப்படுகிறது. அந்த அளவுக்கு மனித வாழ்வின் மேன்மைக்கு துணை நிற்க வல்லவையாக இருக்கின்றன கால்நடைகள்.

2003-ம் ஆண்டு கால்நடைக் கணக்கெடுப்பின்படி நாட்டில் உள்ள கால்நடைகள் 18 கோடியே 52 லட்சம். நமது பசுக்கள் கொடுக்கும் எண்ணாயிரம் கோடி லிட்டர் (எட்டு கோடி டன்) பாலின் மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய். நாட்டில் பயிரிடப்படும் நிலங்களில் பாதி அளவுக்கு மாடுகள் கொண்டுதான் உழவு செய்யப்படுகின்றன. 1 கோடியே 20 லட்சம் மாடுகள் வண்டி இழுக்கின்றன. மாடுகளின் மூலம் அறுபது லட்சம் டன் பெட்ரோலியப் பொருள்கள் மிச்சப்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அன்னிய செலாவணி மிச்சப்படுத்தப்படுகிறது என்பது எவ்வளவு ஆச்சர்யமூட்டும் விஷயம்!

இன்னுமொரு ஆச்சர்யத்தைச் சொல்கிறது தேசிய நடைமுறை பொருளியல் ஆராய்ச்சிக் கழகம். 'நமது மாடுகள் கொடுக்கும் சாணத்தின் மூலம் கிடைக்கும் எரிசக்தி, மூன்றரைக் கோடி டன் நிலக்கரிக்கு அல்லது 6.8 கோடி விறகுக்குச் சமமானது' என்கிறது இந்த ஆராய்ச்சிக் கழகம். இதுவல்லாது, 34 கோடி டன் அளவுக்கான சாணம், நமது நிலங்களுக்கு எருவாகப் போய்ச் சேருகிறது.

'நமது கால்நடைகளிடமிருந்து நமக்குக் கிடைக்கும் சக்தி, ஆறாயிரம் கோடி கிலோ வாட்' என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதுவன்றி பத்தாயிரம் கோடி கிலோ வாட் சக்தி... 7 கோடி காளை மாடுகள், 80 லட்சம் எருமைகள், 10 லட்சம் குதிரைகள், 10 லட்சம் ஒட்டகங்கள் மூலமாகக் கிடைக்கின்றன.

இயற்கை முறையில் கிடைக்கும் இந்த சக்திக்காக நாம் செலவழிக்கும் தொகையைப் போல, மூன்று மடங்கு செலவு செய்தால்தான்... இதே அளவு சக்தியை நவீன (செயற்கை) முறையில் உற்பத்தி செய்யமுடியும்.

இந்தியாவில் தேவைப்படும் சக்தியில் 66% அளவானது கால்நடைகள் மூலமே கிடைக்கின்றன. நிலக்கரி, பெட்ரோல், டீசல் மூலம் கிடைப்பவை 14% மட்டுமே.

ஆடு, மாடு கிடைகளைப் போடுவதன் மூலம் நிலங்களை வளமேற்றுவது பரவலாக இன்னமும் வழக்கில் உள்ளது. கால்நடைகள் மூலம் கிடைக்கும் சக்தியும் எருவும் சூழலை மாசுபடுத்துவது இல்லை. மாறாக மண் நலத்தையும், மக்கள் நலத்தையும் காக்க வல்லவை என்பதை ஒவ்வொ ருவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

ஊர்ப்புறத்தில் உள்ள குடும்பங்களில் இரண்டில் ஒரு குடும்பம்... பசு வளர்த்துப் பால் கறக்கிறது. இந்தியாவில் இப்படி வாழ்க்கை நடத்தும் குடும்பங்கள், ஏழு கோடி. இக்குடும்பங்கள் உற்பத்தி செய்யும் பால், இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 70%. இதில் 70% அளவு பால்... சிறு மற்றும் குறு உழவர்கள், நிலமற்றவர்கள் மூலம் கிடைக்கிறது என்பது மனதில் இருத்திக்கொள்ள வேண்டிய விவரமாகும்.

சராசரியாக ஒரு மாடு, ஒரு நாளைக்குப் பத்து கிலோ சாணமும்... ஐந்து கிலோ மூத்திரமும் தருகிறது. அப்படியானால் ஒவ்வொரு நாளும் 185 கோடி கிலோ சாணம் 92 கோடி லிட்டர் மூத்திரம் கிடைக்கிறது. இவை முறையாகப் பயன்படுத்தப்பட்டால், இன்று தரிசாகப் போடப்பட்டுள்ள நிலங்கள் அனைத்தும் விளைநிலங்களாக மாறும். சூழலை மாசுபடுத்தாத சக்தி பிறக்கும்.

இன்று தொடர்கின்ற விவசாய தற்கொலைகளுக்கு அடிப்படைக் காரணங் கள்.. வேலை இல்லாமை, இடுபொருள் செலவு உயர்வு, உற்பத்தியான பொரு ளுக்கு விலை இல்லாமை ஆகியவைதான். இம்மூன்றில் முதல் இரண்டு காரணங் களையும் கால்நடைகளைப் பேணிப் பாதுகாப்பதன் மூலம் வேரறுக்க முடியும். ஒரு கறவை மாட்டை இறைச்சியாக மாற்றும்போது 10 ஆயிரம் ரூபாய் மதிப் புள்ள பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால், அந்தக் கறவை மாட்டை வைத்துப் பராமரித்தால் 25 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை மதிப்புள்ள பொருள்கள் கிடைக்கும்.

பசு மூத்திரம் சித்த மருந்து, ஆயுர்வேத மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. நாட்டுப் பசு தரும் பாலில் அதிகம் புரதம் உள்ளது. கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளது. பசு மூத்திரம், நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்டது, புண் ஆறுவதைக் குணப்படுத்தவல்லது. இன்றைய தினம் நாட்டுப் பசு தரும் மூத்திரம்... புற்று நோய், சர்க்கரை நோய், குடற்புண், மூட்டுவலி, சிறுநீரகக் கோளாறு போன்ற கொடிய நோய்களைக் குணப்படுத்து வதற்காக ஆயுர்வேத மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

ஆய்வு அடிப்படையிலான அறிவும் உயிரிற் பன்மயம் பற்றிய மதிநுட்பமும் இல்லாமையால் ‘வெள்ளைப் புரட்சி’ என்ற பெயரில் சீமை மாடுகளை இறக்குமதி செய்தும் உள்நாட்டு இனங்களில் கலப்படம் செய்தும் வாழ்வாதாரங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.

வடஅமெரிக்காவில், தென்அமெ ரிக்காவில், ஆஸ்திரேலியாவில்... நமது நாட்டு, ஓங்கோல், கிர், தார் பார்க்கர் மாடுகளைக் கொண்டுபோய் மேம்படுத்திப் பயன்பெறுகிறார்கள். ‘சிறந்த இந்தியப் பால் மாட்டினம் எங்களிடம் விற்பனைக்கு உண்டு’ என்று அவர்கள் விளம்பரம் செய்கிறார்கள். நாமோ... அவர்களின் நாட்டுமாடு களைப் பார்த்து வியந்துகொண்டிருக்கிறோம்.

நமது நாட்டுக் கிராமப்புறங்களில் மூன்று மாதச் சாகுபாடி காலம் நீங்கலாக 9 மாத காலம் வண்டி மாடுகள் வேலை இல்லாது இருக்கின்றன. இவைகளுக்குப் போதிய வேலை தரமுடியுமானால் கிராமப்புறத்தவர் வருவாய் உயரும். விண்வெளி வெப்பக் கூடாரமாவது குறையும், டீசல் தேவை குறையும்.

நாகரிகம் தொடங்கியது முதல் பசு வளர்ப்புதான் நமக்கு உணவளித்தது. காளை வளர்ப்பு தொடங்கியபோது அவை நமக்கு உழைப்பை வழங்குகின்றன. பசு நமது வளர்ப்புத்தாய். காளை நமது வளர்ப்புத் தந்தை. கறவை நின்றதும் 'உதவாத மாடு' என்று பசுக்களை ஒதுக்குவதும்... வயதானதும் 'உதவாத மாடு' என்று காளைகளை கறிக்கடைக்கு அனுப்புவதும் நமது அறியாமையே! சாணமும் மூத்திரமுமே ‘எரு’ என்று நமது முன்னோர்கள் உணர்ந் திருந்தார்கள். அவை கொண்டு தயாரிக்கப்படும் அமுதக்கரைசல் பயிர் விளைச்சல் எடுக்கப்போதுமானது என்பதை இன்று நாடே உணர்ந்து கொண்டுள்ளது.

'கொடுமுடி' டாக்டர். நடராசன், எட்டாண்டுகளுக்கு முன்பு பஞ்சகவ்யாவைப் பயிர்ச் சாகுபடியில் பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்தார். விதை நேர்த்தித் தொடங்கி, நடவு, வளர்ச்சிப் பருவம், பூ மலர்ச்சி, காய்ப் பெருக்கம், அறுவடைக்குப் பின் கெடாமை இப்படிப் பல படிகளிலும் பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்து ஆவணமாக்கியுள்ளார். அது இந்தியாவின் பல மாநிலங்களிலும் மொழி பெயர்க்கப்பட்டு, பஞ்சகவ்யா பயன்பாட்டுக்கு வந்து விட்டது.

பசு தரும் பால், உணவு மட்டும் அல்ல... உணவை ஊட்டி விடும் தயிராக, மோராக, வெண்ணெயாக, நெய்யாகப் பயன்படுகிறது. இத்தகைய நமது உறவுகளை, 'உதவாதவை' என்று இறைச்சிக் கடைக்கு அனுப்புவது எந்த விதத்தில் அறமாகும்?

‘வண்டிக்காரன்’ என்று புகழ்பெற்றிருக்கும் 'பொறியாளர்' ராமசாமி இதற்கு மேலும் சொல் கிறார்-

''உடலில் வலுவுள்ளவரை உழைக்கும் காளை மாடுகளுக்கு வேதனை இல்லாமல் இழுத்துச் செல்லப் பொருத்தமான வண்டி செய்து கொடுத் தோமா... லாரியில் ஏற்றிக் கறிக்கடைக்குச் செல்லும் போது சித்ரவதைக்கு ஆளாக்காமல் செய்கிறோமா... இறைச்சிக்காக கொலை செய்யும்போது சித்திர வதை செய்யாது கொலை செய்கிறோமா?''

தமிழ்நாடு சிந்தனையாளர் பேரவைப் பொதுச் செயலாளர் ரத்தினகிரி, மாநிலத் திட்டக்குழுவில் கால்நடைப் பிரிவு உறுப்பினராகவும் இருக்கிறார். முன்னாள் கால்நடை மருத்துவரான இவர் கூறுவது அனைவர் சிந்தனைக்கும் உரியது-

''இறைச்சிக்காக மட்டும் மாடுகள் வெட்டப்படுவது இல்லை. அவற்றின் தோல் பதப்படுத்தப்பட்டு, காலணி முதல் இடைவார் உள்பட பல்வேறு பொருள்களாக மாற்றப்படுகின்றன. எலும்பு, குளம்பு கொம்பு ஆகியவை எலும்புத்தூள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. குளம்பில் தயாரிக்கப்படும் ஆணி, கப்பல் தயாரிப்பில் பயன்படுகிறது. நரம்பு, டென்னிஸ் ஆட்டக்காரர்களின் மட்டை தயாரிக்கப் பயன்படுகிறது. இப்படிப் பலதுறைகளிலும் வருவாய் கொடுப்பதாக இருக்கும் மாடுகள் விற்கப்படும்போது, அதிலிருந்து உரிய பங்கு, மாட்டை விற்பவருக்கு வருகிறதா?''

இப்படி பலரும் எழுப்பிக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு விடை காண முடியாமல் தடுமாறி நிற்கும்போது, மின்னல் வெட்டியது போல சில தகவல்களும் வரத்தான் செய்கின்றன.

''கர்நாடக மாநிலத்திலிருக்கும் ஸ்ரீராமச்சந்திரபுரா மடத்தின் அடிகளார் வழிகாட்ட, அங்கே மாடுகள் பெரும் எண்ணிக்கையில் பாதுகாக்கப்படுகின்றன. எஞ்சியிருக்கும் 33 இந்தியக் கால்நடை இனங்களில் 27 இனங்கள் பராமரிக்கப்படுகின்றன. சில இடங்களில் கால்நடைக்கு கருணை இல்லங்களும் செயல்பாட்டில் உள்ளன.

ஸ்ரீராமச்சந்திரபுரா மடம் கால்நடைகளுக்குக் கருணை இல்லம் கண்டதால் சுற்றுப்புறமுள்ள எண்ணற்ற உழவர்கள் இயற்கை உழவுக்கு மாறமுடிந்திருக்கிறது.''

இந்தத் தகவல்கள் கர்நாடக கால்நடைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோவிந்தய்யா மூலமாக நமக்கு வந்துள்ளது.

மேலே கண்ட விவரங்கள் மூலம் நாம் ஒரு முடிவுக்கு வருகிறோம். கால்நடைகளைப் பேணிப் பாதுகாக்காமல் பயிர்த் தொழில் நடவாது. நம் நாட்டுக் கால்நடைகளை இழிவுப்படுத்தி நமக்கு முன்னேற்றம் சாத்தியம் இல்லை.

தொடர்ந்து பேசுவோம்