அறிவியல் அலசல்

பொங்கல் சிறப்பிதழ்

வாசமில்லா மண் இது

சுல்தான் அகமது இள்மாயில்

சுற்றுச்சூழல் மற்றும் நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர்

அறுவடைத் திருநாளாம் பொங்கலின் முக்கிய அங்கங்கள்... 'போகி', 'பொங்கல்' மற்றும் 'மாட்டுப்பொங்கல்'. போகி- பழையவற்றை எரித்துவிட்டு புதியவற்றுக்கு நல்வரவு கூறுதல், பொங்கல்-அப்போதுதான் அறுவடை செய்யப்பட்ட அரிசியை பானையில் இட்டு பொங்கலிடுதல், மாட்டுப்பொங்கல் -உழவுக்கு உதவும் மாடுகளில் குடிகொண்டிருக்கும் லட்சுமியை வணங்குதல் மற்றும் நன்றி செலுத்துதல்!

இவற்றுள் எவ்வளவு ஒற்றுமைகள் இருக் கின்றன? எண்ணிப் பார்த்தால் வியப்பாக உள்ளது.

மண் என்பது, தலையாய நிலவளம் மட்டுமல்லாமல், உயிர்ச்சூழல் எனப்படும் 'ஈகோ சிஸ்ட'த்தின் அங்கமாகவும் விளங்குகிறது. ஆற்றல் வாய்ந்த கனிமவளத்தின் ஒரு அங்கமாகவும், ஆர்கானிக் என்றழைக்கப்படும் நுண்உயிர் நுட்பத்தின் பகுதியாகவும் திகழ்கிறது.

மண்ணின் ஆற்றல் வாய்ந்த அம்சமே அதனுள் மைக்ரோ மற்றும் மேக்ரோ அளவில் இயக்கத்தில் உள்ள ஆர்கானிக் சமாச்சாரங்கள்தான். மண் அமைப்பு மற்றும் அதன் தன்மை ஆகியவற்றைக் கிட்டத்தட்ட தீர்மானிப்பது இந்த ஆர்கானிக் அம்சங்களின் செயல்பாடுகள்தான். மண்ணைப் பொறுத்தவரை ஏராளமான நுண்உயிரினங்கள் வாழ்கின்றன. பாக்டீரியா, பூஞ்சான், சிறுவகை பூச்சிகள், ஆக்டினோமைசிட் மற்றும் பூஞ்சானைப் போன்ற மற்றுமொரு உயிரினம், மண்புழுக்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரிகள் இணைந்து மண்ணில் அளவிடமுடியாத உயிரி ரசாயன மாற்றத்துக்குக் காரணமாக அமைகின்றன.

இவற்றுள் மண்வளத்துக்கு தமது பெரும்பங்கை அளிப்பது மண்புழுக்கள்தான். இதன் காரணமாகவே 'மனோன்மணியம்' சுந்தரனார் தமது கவிதையில், மண்புழுக்களைக் கொண்டு எந்த வகையான மண்ணையும் நல்ல மண்ணாக மாற்ற முடியும் என்று பாடியிருக்கிறார்.

நவீனகாலத்தில் மண்வளத்தைப் பற்றி பலரும் பேசத்தொடங்கி யுள்ளனர். ஆனால், நமது பாரம்பரியம், மண்நலம் பற்றியே நமக்கு போதித்து வந்துள்ளது. மண்வளம் என்பது, அதன் ரசாயன-அமைப்பைப் பற்றியது என்றால், மண்நலம் என்பது மண்ணின் உருவ அமைவு, ரசாயனம் மற்றும் உயிரியல் தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. உயிரியல் தன்மையை புறந்தள்ளிவிட்டு அளவுக்கு அதிமாக ரசாயன உரங்கள் மற்றும் மருந்துகள் பயன்படுத்தியதால், மண்ணில் இருந்த நுண் உயிரினங்களின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்து போய்விட்டன. இதன் காரணமாக மண், தன் 'வாசனை'யை இழந்து விட்டது. இப்போது வாசமில்லா மண்தான் நிறைந்திருக்கிறது. 'ஆர்கானிசம்' என்றழைக்கப்படும் நுண் உயிரிகளின் எண்ணிக்கை மண்ணில் தற்போது மிகமிகக் குறைவாகவே உள்ளன.

விவசாயத்துக்கான நீர் மேலாண்மை தனியாக கையாளப்படக்கூடாது. மண் மேலாண்மை, நீர் மேலாண்மை, ஆர்கானிக் வகையறாக்களின் மேலாண்மை என ஒருங்கிணைந்த முறைகளைக் கையாளவேண்டும். இயற்கையாக உதிரும் இலை, தழைகள் மண்ணுக்கும் சரி, தாவரங்களுக்கும் சரி மிகப்பெரிய அரண் ஆகும். பறிக்கப்பட்ட பசுந்தழைகள், அல்லது இயற்கையாக உதிரும் இலை, தழைகளைக் கொண்டுகூட இந்த இயற்கை அரணை அமைக்கலாம். நீர் தேவை அதிகமுள்ள இக்காலகட்டத்தில், இயற்கை சார்ந்த இந்த முறைகளைக் கையாள்வதால், நீரையும் அதிக அளவில் சேமிக்க முடியும்.

பொங்கலைப் பற்றி மீண்டும் சிந்திக்கும் வேளையில், அக்காலத்தில் விவசாயிகள் பயன்படுத்திய பின்னல் கூடைகள் நினைவுக்கு வருகின்றன. ஜனவரி மாதத்தில் பின்னப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் இக்கூடைகள் மார்ச் தொடங்கி ஆகஸ்ட் வரை நன்றாக காய்ந்துவிடும். அதன்பிறகு தொடங்கும் தென்கிழக்கு பருவ மழையில் அவை நன்றாக தொப்பலாக நனையும். இதன் காரணமாக, ஜனவரி தொடங்கும் சமயம் அந்தக்கூடைகளில் பூஞ்சான்கள் உருவாகும். மேலும், அந்த காலகட்டம்தான் காற்றில் ஈரப்பதம் இருப்பதால் சிறுவகை பூச்சி உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமும்கூட. பூஞ்சான் பூத்த பழைய கூடைகளை தீயிலிட்டுக் கொளுத்தி அப்புறப்படுத்தும் காலமும் இதுதான். இதனால் ஏற்படும் புகை தேவையில்லாத பூச்சிகளை விரட்டியடித்து, புதிய கூடைக்கு நல்வரவு கூறும். புகை மட்டுமல்லாமல், அந்த சாம்பலையும் நிலத்தில் து£வி விடுவதால் தேவயைற்ற புழு, பூச்சிகள் அகன்று ஆரோக்கியம் நிலவும்.

'போகி' என்பதன் உண்மையான காரணம் இப்படி யிருக்க... இன்று போகியில் எரிப்பதற்கு நாம் பயன்படுத்தும் விஷயங்களோ... டயர், பிளாஸ்டிக் உள்ளிட்ட டை-ஆக்சின் போன்ற ரசாயன வாயுக்களை வெளியேற்றும் பொருட்களாகவே இருக்கின்றன. இதனால், சுற்றுச்சூழல் மட்டுமல்ல நமது உடல் நலனும் பாழாகிறது. இந்த ரசாயன வாயுக்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது என்பது அதைவிடக் கவலை தரும் தகவல்.

போகி முடிந்தவுடன் அடுத்த நாள், விவசாய மக்கள் மகிழ்ச் சியில் ஒன்றுகூடி பொங்கிலிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வண்ணமிகு 'கோலம்', மேலும் 'வரட்டி'யை பயன்படுத்தி தீ முட்டி, அடுப்பில் தயாரிக்கப்படும் சுவை மிகுந்த பொங்கல், அறுவடையின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகின்றது.

'மாட்டுப் பொங்கல்' மிகுந்த சிறப்பம்சங்கள் கொண்டவை. மாட்டின் ‘பின்’பகுதி வணங்குதலுக்குரியதாகவே கருதப்படுகிறது, காரணம், மாட்டின் சாணத்தைப் போன்ற தரமான உரம் உலகில் வேறு எதுவும் இல்லை. அதேபோல மாட்டின் கோமியம் போன்ற தரமான கிருமி நாசினி வேறு எதுவும் இல்லை.

ஆனால், நவீன விவசாயம் ஒட்டுமொத்தமாக பழைய வழக்கங்களையே மாற்றிவிட்டது. விவசாயத்தை விட்டு விலங்குகள் விலக்கி வைக்கப்பட்டுவிட்டன. இப்போதும் விவசாயிகள் பொங்கலை கொண்டாடுகின்றனர், ஆனால், அன்று கொண்டாடியதில் இருந்த பூரிப்பும், மகிழ்ச்சியும் இப்போது இல்லை. வேளாண்மையில் இருந்த தனித்தன்மை வாய்ந்த வழக்கங்கள் காணாமல் போய்விட்டன. நம்மில் எத்தனை விவசாயிகள் நாமாகவே உரம் தயாரிக்கிறோம்... கிருமிநாசினிகளை உருவாக்குகிறோம்... விதைகளைப் பாதுகாப்பாக வைக்க, எத்தனை விவசாயிகள் இலை, தழைகளைக்கொண்ட தெளிப்பான்களை பயன்படுத்துகிறோம்?

நவீன விவசாயம் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் முக்கியமானவை என்று பார்த்தால், அதிகரித்துவரும் ரசாயன உரங்களின் விலை, அதே சமயம் அதற்கேற்றார்போல விளைச்சல் இல்லாதது. குறிப்பிட்ட சில பூச்சிகளை அழிக்க இயலாத பூச்சி மருந்துகள் நமது அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ரசாயன உரங்கள் மற்றும் மருந்துகளைப் பயன்படுத்தியதால் மாசுபட்டுள்ள நிலத்தடி நீர். புதுவகையான ஒவ்வொரு வேளாண் முறை காரணமாக குறைந்துபோயுள்ள நிலத்தடி நீர் வளம். அரிக்கப்பட்ட மேல்மண். விவசாயி களுக்கும், விவசாயப் பொருட்களை நுகரும் நுகர்வோருக்கும் கேள்விக்குறியாகியுள்ள உடல் ஆரோக்கியம்.

இந்த நிலை எப்படி வந்தது? ரசாயனத்துக்கு அளிக்கப்படும் மானியம். உயிரி தொழில்நுட்பத்தை அலட்சியம் செய்தது. அடிப்படைத் தேவைகளை மறந்துபோனது. எந்தவித காரணமும் இன்றி புதிய முறைகளைக் கையாள்வது போன்றவைதான் காரணங்கள்.

நாம் தனித்துவமாக செயல்பட இந்த பொங்கல் தருணத்திலாவது ஒரு அறிவுப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்வோமா? நீங்கள் வசிக்கும் பகுதியில் உங்கள் நிலத்தில் ஒரு சிறு பகுதியைத் தேர்ந்தெடுத்து அதில் உங்களால், உங்கள் மக்களால் அல்லது கிராம மக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டும் பயன்படுத்தினால் என்ன? மாட்டுச் சாணத்தையும், இயற்கையான பொருட்களையும் வைத்து என்.ஏ.டி.ஈ.பி. அல்லது பயோடங் முறைப்படி ஏன் நீங்கள் அற்புதமான உரத்தை தயாரிக்கக்கூடாது?

ஆடுகள் என்பவை கிராமத்தின் சிறந்த விஞ்ஞானிகள். ஆம்... ஆடுகள்தான் ஒவ்வொரு வகை தாவரத்தையும் உண்ணக்கூடியவை. அவை எந்த தாவரத்தை உண்ணவில்லையோ, அதில் பூச்சிக்கொல்லி தன்மை உள்ளது என்று அர்த்தம். அந்த வகையில் ஆடுதொடா (ஆடு தொடாதது) என்ற தாவரம் அற்புதமான பூச்சிக்கொல்லி. இவ்வாறு 5 வகையான தாவரங்களை கண்டறிந்து ஒரு பூச்சிக்கொல்லிக் கலவையை உருவாக்குங்கள்.

ஏன் விவசாயக் குழுக்களை உருவாக்கி, விதை சேகரிப்பு வங்கிகளை உருவாக்கக்கூடாது-?. எதற்காக விதைகளை பணம் கொடுத்து வாங்க வேண்டும்?. இயற்கை சார்ந்த பாரம்பரிய விவசாயம் செய்தபோதும் சரி, ரசாயன உரங்களைப் பயன் படுத்தி விவசாயம் செய்தபோதும் சரி இரண்டுக்கும் எவ்வளவு செலவு செய்தீர்கள், எவ்வளவு வருவாய் வந்தது என்று தனித்தனியே கணக்கு எழுதி வைத்து பாருங்கள்.

இதனை முயற்சிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இயற்கையின் ஆசீர்வாதத்துடன், அடுத்த ஆண்டு பொங்கலையாவது நாம் பூரிப்போடும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவோம். அந்த கொண்டாட்டத்தின்போது, நினைவிருந்தால் என்னையும் அழையுங்கள்!

-படம் அ.வின்சென்ட்பால்