Published:Updated:

''வீட்டிலும் செய்யலாம் விவசாயம்''

மா.அ. மோகன்பிரபாகரன் படங்கள்: மு. லலித்குமார்

பிரீமியம் ஸ்டோரி

பயிற்சி

##~##

'பசுமை விகடன்', 'அவள் விகடன்', திருச்செங்கோடு ரெட்ராக் ரோட்டரி சங்கம், இன்னர்வீல் சங்கம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த 'வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ என்ற பயிற்சிக் கருத்தரங்கு, கடந்த செப்டம்பர் 29 அன்று திருச்செங்கோடு செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்வுக்கு, ரெட்ராக் ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமரன் தலைமை ஏற்றார்.

வீட்டுத் தோட்டம் அமைக்கும் முறைகளைப் பற்றி பேசிய கோயம்புத்தூர் முன்னோடி வீட்டுத் தோட்ட விவசாயி வின்சென்ட், ''வீட்டுத் தோட்டம் காலத்தின் தேவை. நமக்குத் தேவையான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்றது மூலமா எரிபொருள் சேமிப்பு, விஷமில்லா காய்கறி, மாசுக்கட்டுப்பாடு, உடம்புக்கு நல்ல பயிற்சி, மனசுக்கு அமைதினு ஏகப்பட்ட நன்மைகள் இருக்கு. மொட்டைமாடி, புறக்கடை, காம்பவுண்ட் சுவர்னு காலியா இருக்குற இடத்துலயெல்லாம் காய்கறியை விளைய வெக்கலாம்'' என்றவர், வீட்டுத் தோட்டச் செடிகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

''வீட்டிலும் செய்யலாம் விவசாயம்''

'தேனீ வளர்ப்பு’ பற்றி பயிற்சியளித்த திருச்செங்«காடு நடேசன், ''தேன்பெட்டியை, ஒரே இடத்தில்

''வீட்டிலும் செய்யலாம் விவசாயம்''

வெச்சா... ஒரு பெட்டி மூலம் வருஷத்துக்கு 10 கிலோ தேன் கிடைக்கும். தட்பவெப்ப நிலைக்கேத்த மாதிரி இடம் மாத்தி மாத்தி வெச்சா... 35 கிலோ வரைக்கும் கிடைக்கும். கூடவே கிடைக்கும் மெழுகு, மகரந்தம்(ராயல் ஜெல்லி) எல்லாமே நல்ல விலைக்குப் போகுது'' என்று சொல்லி, ஆச்சர்யம் கூட்டினார்.

'திண்டுக்கல்’ கவிதா மோகன்தாஸ், ''சிப்பிக் காளான் வளர்ப்பு ரொம்ப எளிமையானது. பெண்கள் வீட்டிலிருந்தே நல்ல வருமானம் பார்க்க முடியும். காளான் வளர்க்க அதிக முதலீடோ, இடமோ தேவையில்லை. 10 ஆயிரம் ரூபாயி லிருந்து 20 ஆயிரம் ரூபாய்க்குள்ள முதலீடு போட்டாலே போதும். மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்'' என்று காளான் வளர்ப்புப் பற்றி பதியம் போட்டார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு