கூட்டம்

விவசாயம் சார்ந்த திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் என்று அனைத்தையும்... அதிகாரிகள் மட்டத்தில் பேசித்தான் பெரும்பாலும் முடிவுகள் எடுப் பார்கள். விவசாயிகளை அழைத்து ஆலோசனைகள் கேட்பதும் சமயங்களில் நடக்கும். இத்தகையச் சூழலில்... கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், 'தமிழகத்தின் விவசாய வளர்ச்சி குறித்து, உங்களின் கருத்துக்களை எடுத்து வைக்க வாருங்கள்' என ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்தது... ஆக்கப்பூர்வமானதொரு முன்னேற்றமே! பல்கலைக்கழக வளாகத்தில் செப்டம்பர்-29 அன்று இதற்காக ஒரு கருத்தரங்கு ஏற்பாடாகியிருந்தது. பல்வேறு ஊடகங்களும் பங்கேற்ற இந்நிகழ்வில், பசுமை விகடனும் இடம்பிடித்தது.

துவக்க உரையாற்றிய, துணைவேந்தர் கே. ராமசாமி, ''இப்போது, எங்கு சென்றாலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறைகளை அதிகமாக பார்க்க முடிகிறது. ஆனால், அது நம் உடலுக்கு ஏற்றது அல்ல. இயற்கையாகவே, நமது உடல், தனது வெப்பநிலையைக் காட்டிலும் இரண்டு டிகிரி அளவுக்கான குளிரைத் தாங்கும் தன்மை கொண்டது. இது இதற்கு மேலும் அதிகரித்தால், உடலுக்கு ஒப்புக் கொள்ளாது.

கிராமங்களில் இப்போதும் பானைத் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.. பானையில் உள்ள குளிர்ந்த நீர், நம் உடலைவிட இரண்டு டிகிரி குளிர்தன்மை கொண்டது. அதனால்தான், பானைத் தண்ணீரை நம் முன்னோர்கள் குடித்து வந்தார்கள். பானை குளிர்ச்சியாக இருக்க, மணல் கொட்டி, அதன் மீதுதான் பானையையே வைத்திருப்பார்கள். அந்த மணலில் சில தானியங்களையும் முளைக்க வைத்திருப்பார்கள். இந்தச் செடிகள் வாடினால், மணலில் தண்ணீர் தெளிப்பார்கள். அப்படி தெளிக்கும்போது,

போதுமான அளவுக்கு குளிர்தன்மை அங்கே தொடர்ந்து தக்க வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். முன்னோர்கள், செடிகளையே வெப்பமானியாகப் பயன்படுத்தியுள்ளனர்.

ஆக... கற்றலுக்கும், புரிதலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. வெறும் ஏட்டுக்கல்வி மட்டும் மனிதனை மாற்றி விடாது. புரிதலுடன், அனுபவங்களைக் கற்றுத் தெளியும்போதுதான், அந்தக் கல்வியால் நன்மை ஏற்படும். மற்ற வேலைகளைவிட, விவசாயம் கூடுதல் மரியாதை மற்றும் போற்றுதலுக்குரியது. ஊடகங்கள் இந்த விஷயத்தைத் தொடர்ந்து வலியுறுத்தும்போது, நிச்சயம் மாற்றம் நிகழும்'' என்று சொன்னார்.

பசுமை விகடன் சார்பாக, இயற்கை விவசாயம், சிறுதானியம்... என்று தற்போது உடனடித் தேவையாக உள்ள விஷயங்கள் உட்பட பல விஷயங்கள் தொடர்பான ஆலோசனைகளை முன் வைத்தோம். இதேபோல மற்ற மற்ற ஊடகங்களும் தங்கள் கருத்தை வலியுறுத்தின.

''அத்தனை ஆலோசனைகளும் அரசாங்கத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும்'' என்று சொல்லி கருத்தரங்கை நிறைவு செய்தார் துணைவேந்தர்!