Published:Updated:

மலைத்துப் போன மலேசிய விவசாயிகள்..!

மலைத்துப் போன மலேசிய விவசாயிகள்..!

பிரீமியம் ஸ்டோரி
##~##

மலேசியாவில் வாழும் சீன விவசாயிகள் குழுவினர், 'இந்தியாவில் இயற்கை விவசாயம் எப்படி நடக்கிறது?’ என்பதைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, அண்மையில் திருச்சி, கரூர், தஞ்சாவூர்... பகுதி விவசாயிகளைச் சந்தித்தனர். அதன் பிறகு, மலேசிய காய்கறி பயிரிடுவோர் சங்கத் தலைவர் க்ஷ£ன் யங் தனக்குக் கிடைத்த இயற்கை விவசாய அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

''தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத் தொழில் நுட்பங்களை அறிந்து கொண்டோம். 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வாரின் வழிகாட்டுதலில்... நடைபெற்ற இயற்கைப் பாடம், மண்புழு வளர்ப்பு, தேனீ வளர்ப்பு,  போன்றவை எங்களுக்கு பெரிய அளவில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. முன்னோடி இயற்கை விவசாயி பணிக்கம்பட்டி கோபாலகிருஷ்ணனின் பண்ணையில் பலநுட்பங்களைக் கற்றுக் கொண்டோம். திருச்சியில் உள்ள வாழை ஆராய்ச்சி நிலையத்தில், நடைபெற்ற பயிற்சி முகாமில் சாகுபடி மட்டுமில்லாமல், வாழைநார் மூலம் கைவினைப் பொருட்களைத் தயாரிக்கவும் பயிற்சி அளித்தனர். இந்தச் செய்தி எங்களுக்குப் புதியதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. தஞ்சாவூரில் உள்ள இந்திய பயிர் பதன மையத்தில், விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் நுட்பத்தையும் தெரிந்து கொண்டோம்.

மலைத்துப் போன மலேசிய விவசாயிகள்..!

எங்களுக்கு பூர்விகம் சீனா என்றாலும்... எமது முன்னோர்கள் மலேசியாவுக்குப் பிழைக்க வந்து அங்கேயே தங்கிவிட்டனர். அதனால், சீனாவின் பாரம்பரிய விவசாய நுட்பங்கள் எங்களுக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. அந்தக் குறையை, தமிழ்நாட்டு இயற்கை விவசாயிகள் போக்கி விட்டார்கள். மலேசியா சென்றவுடன், நெல், கரும்பு ஆகியவற்றை இயற்கை முறையில் சாகுபடி செய்யப் போகிறோம்'' என்றார். இதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்த பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தமிழ்ப் பிரிவு தலைவர் சுப்பா ராவ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

அ. தமிழ்ச்செல்வன்,
படம்: ஜா. கிளாட்வின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு