சு.தியடோர் பாஸ்கரன்

மின்விளக்குகள், தொலைபேசி, மின்வேலி... போன்ற நவீன சாதனங்கள் இல்லாத காலங்களில், பண்ணைகளின் இரவுநேரக் காவலர்கள் நாய்கள்தான். காவலுக்கு மட்டுமன்றி வேட்டையாடுவதற்கும் நாய்களைப் பயன்படுத்தினர். குறிப்பாக, மலையடிவார கிராமங்களில் வசித்த விவசாயிகள்... பன்றி, முயல் போன்றவற்றை வேட்டையாடும் வகையில், நாய்களுக்கு பிரத்யேகப் பயிற்சிகள் கொடுத்து வளர்த்தனர்.

தமிழ்நாட்டில் நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு, ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே சில ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்ட நடுகல் ஒன்றும் அதற்கு சாட்சி! 'கோவிவன்’ என்ற பெயரைக் கொண்டிருந்த ஒரு வேட்டை நாய் மற்றும் அதனை வளர்த்தவரைச் சித்தரிக்கும் வகையில் சிற்பம் மற்றும் கல்வெட்டு ஆகியவை அந்த நடுகல்லில் அமைக்கப்பட்டுள்ளது. 'திருடர்களை அந்த நாய் தாக்கியது’ என்பதையும், 'நாய்களுக்குப் பெயரிடும் வழக்கம் 1,500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது’ என்பதையும் இந்த நடுகல் மூலம் அறிய முடிகிறது.

மனிதர்களால் முதன்முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு நாய்தான். அதன் பின்னர்தான் எருது, ஆடு, குதிரை... போன்ற விலங்கினங்கள் வீட்டுப் பிராணிகளாக மாற்றப்பட்டு, விவசாயத்திலும் போக்குவரத்திலும் பயன்படுத்தப்பட்டன. ஆரம்பக் காலங்களில் நம் நாட்டில் வேலை செய்யும் விலங்காகத்தான் நாய் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகுதான் செல்லப்பிராணியாக மாறியது.

தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் பலதரப்பட்ட நாய் இனங்கள் இருந்திருக்கின்றன. அவை பெரும்பாலும் அந்தந்த ஊரின் பெயரிலேயே அழைக்கப்பட்டிருக்கின்றன. 'கோம்பை’; 'ராஜபாளையம்’; 'சிப்பிப்பாறை’ என்று பல இனங்கள் இன்றும் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

ஊர் பெயரில் அழைக்கும் வழக்கம் உலகம் முழுவதுமே உண்டு. ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்த நாய் 'ஸ்பேனியல்’ என்றும், ஜெர்மனியிலுள்ள அல்சாஸ் மாநிலத்தில் தோன்றிய இனம் 'அல்சேஷன்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

காலனி ஆதிக்கம் இந்தியாவில் வந்த பிறகு, வெளிநாட்டு நாய்களின் வரவால், நம் மாநில இனங்களான 'அலங்கு’, 'குறுமலை’ போன்ற மிகச்சிறந்த இனங்கள் இன்று அற்றுப்போய் விட்டன.

உலகின் எல்லா நாய்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த விலங்குதான். என்றாலும், அவற்றில் வெவ்வேறு இனங்கள் உண்டு. அவற்றின் குணங்களும் வேறுபடும். மேலை நாடுகளில் சில வேலைகளுக்காவே பிரத்யேகமான நாய் இனங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. 'டோபர்மேன்’ எனும் நாய் மோப்பம் பிடிப்பதற்காவே ªவ்வேறு இன நாய்களிலிருந்து கலப்பாக உருவாக்கப்பட்டது. ஆனால், இந்திய நாய் இனங்களில் இப்படிப்பட்ட கலப்பு இனங்கள் உருவாக்கப்படவில்லை. அதனால், இந்திய நாய்களின் மரபணுக்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கலப்பின்றி இருக்கின்றன.

நம்மாநில நாய் இனங்களின் காதுகள் மடிந்து தொங்கும். முட்களிருந்து பாதுகாக்க இயற்கை செய்த ஏற்பாடு இது. வெப்பப் பிரதேசம் என்பதால் இந்த நாய்களின் ரோமப் போர்வை லேசாகவும் குட்டையாகவும் இருக்கும். சடை இருக்காது. கால்கள் நீண்டு, ஓட்டத்துக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். நாய்களின் வாலை வெட்டி விடும் பழக்கம் நம் நாட்டில் இருந்ததில்லை.

நம் மாநிலத்தில் பிரபலமான இனம் கோம்பைதான். செவலை நிறமும் பருத்த உடலும் கொண்ட இந்த இனத்தில் முதுகில் ஒரு கருப்புக் கோடு இருக்கும். இதற்கு 'பாளையக்காரர் நாய்’ என்றும் ஒரு பெயர் உண்டு.

மருது சகோதரர்களின் சிவகங்கை கோட்டையைப் கோம்பை நாய்கள் காவல் காத்திருந்தன என்று சொல்வார்கள். முரட்டு சுபாவமும் மிகுந்த பலமும் கொண்டது இந்த இனம். 'பாளையக்காரர்கள் காலத்தில், ஒரு குதிரையைக் கொடுத்து, ஒரு கோம்பை நாய்க் குட்டியை வாங்குவார்கள்’ என்று குறிப்பு இருக்கிறது.

அடுத்தது ராஜபாளையம்... உருவில் பெரிய இந்த நாய், வெள்ளை நிறம் கொண்டது. மூக்கு, வாய்ப்பக்கம் இளஞ்சிவப்பாக இருக்கும். கட்டபொம்மன் காலத்தில் இந்த நாய்கள் போர்களில் பயன்படுத்தப்பட்டன. இந்த நாய்களுக்கு குதிரைகளின் பின் கால்களைக் கடித்து நரம்பைத் துண்டித்து விடுவதற்குப் பழக்கிக் கொடுத்து, இரவில் ஆங்கிலேயப் படைகளின் குதிரை லாயத்தில் ஏவி விடுவார்களாம். இவற்றால் கடிபட்டக் குதிரை செயலிழந்து எந்த வேலைக்கும் உதவாமல் போய் விடுமாம். போருக்கு மட்டுமன்றி பன்றி, முயல் வேட்டையிலும் இவை ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன.

நாட்டுநாய்களைப் படமெடுப்பதற்காக பொள்ளாச்சி அருகே உள்ள மலையடி கிராமங்களில் நான் சுற்றியபோது... சில பண்ணையார்கள் மந்தை மந்தையாக வேட்டை நாய்களை வளர்த்த விஷயத்தை அப்பகுதி முதியோர்கள் சிலர் சொன்னார்கள். அந்தப் பகுதியில் 'போது கன்னி’ என்ற ஒரு அபூர்வமான நாய் இனத்தைக் காண முடிந்தது. கருப்பு நிறத்தில் ''டோபர்மேன்’ அளவில் இருந்த அதன் கண்களுக்கு மேல் இரு மஞ்சள் புள்ளிகள் இருக்கும்.

அந்தக் காலத்தில் வசதி படைத்தவர்கள் கல்யாணச் சீருடன் இந்த நாயையும் கொடுப்பார்களாம். அதனால்தான், அந்த இனத்துக்கு 'கன்னி’ என்று பெயர் வந்ததாம்.

1972\ம் ஆண்டில் 'காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம்’ தீவிரமாக அமல்படுத்தப்பட்ட பின்னர் காட்டில் முயல் முதலிய விலங்குகளை வேட்டையாடுவது தடுக்கப்பட்டது. அதனால், வேட்டை நாய்களை வளர்க்கும் பழக்கமும் குறைந்து விட்டது. வேட்டை நாய்களாக அல்லாமல் வீட்டு நாய்களாகவும்கூட நாட்டு நாய்களை நாம் வளர்க்காமல், புறந்தள்ளத் தொடங்கி விட்டோம். வெளிநாட்டு நாய்களை அதிக விலைக்கு வாங்கி வளர்ப்பதைத்தான் பெருமையாக நினைக்கிறோம்.

விலை கொடுத்து வாங்குவது மட்டுமல்லாமல், அவற்றுக்கு பணத்தைக் கொட்டி சவரட்டணைகள் வேறு நாம் செய்ய வேண்டியுள்ளது. இனியாவது, நாட்டு நாய்களைப் பாதுக்காக்கத் தொடங்குவோம்.

பயணிப்போம்...